அரசியல் யாப்பு நீதிமன்றம்

அரசியல் யாப்பு நீதிமன்றம் (constitutional court) என்பது நாடொன்றின் அரசியலமைப்புக் குறித்த சட்டங்களை ஆராயும் ஓர் உச்ச நீதிமன்றம் ஆகும். நாடாளுமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் அரசியலமைப்புக்கு ஏற்றதா அல்லது முரணானதா என்பதை அரசியல் யாப்பு நீதிமன்றம் தீர்மானிக்கும்.

ஆஸ்திரிய அரசியல் யாப்பு நீதிமன்றம், உலகின் மிகப் பழமையான அரசியல் யாப்பு நீதிமன்றம்.
உருசியாவின் அரசியல் யாப்பு நீதிமன்றம்

உலகின் பெரும்பாலான நாடுகள் தனியான அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றைக் கொண்டிருப்பதில்லை, பதிலாக அந்நாட்டின் உச்ச நீதிமன்றமே அரசியலமைப்பு முரண்பாடுகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கும். ஆஸ்திரியாவே முதன் முதலாக தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றத்தை நிறுவியது. 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1945 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.[1] அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் தீர்மானத்தை செக்கோசிலோவாக்கியாவே முதன் முதலாக தனது நாடாளுமன்றத்தில் 1920 பெப்ரவரி 2 ஆம் நாள் நாள் நிறைவேற்றியது, ஆனாலும் அதன் நீதிமன்ற 1921 நவம்பரிலேயே நிறுவப்பட்டது. அதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கா, நோர்வே,[2] கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது உச்சநீதிமன்றங்களின் ஊடாக அரசியல் யாப்புகளின் நீதிமுறை மேலாய்வுகளை மேற்கொண்டன.

இலங்கையில் 1972 - 1978 காலப்பகுதியில் தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் நடைமுறையில் இருந்தது.

பட்டியல் தொகு

தனியானதொரு அரசியல் யாப்பு நீதிமன்றம் உள்ள நாடுகள்:

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Constitutional Court of Austria - History". Archived from the original on 2012-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-01-21.
  2. Smith, Eivind (ed.) (1995). Constitutional justice under old constitutions, p. xv (Introduction, p. xi - xviii), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-411-0042-3
  3. இந்தோனேசிய அரசியல் யாப்பு நீதிமன்றம்