சாதியை ஒழிக்கும் வழி (நூல்)

பி.ஆர். அம்பேத்கர் எழுதிய நூல்

சாதியை ஒழிக்கும் வழி (Annihilation of Caste) எனும் நூலானது 1936 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த ஜாத்-பட்-தோடக் மண்டல் எனும் மாநாட்டிற்காக அம்பேத்கர் அவர் தலைமை உரையாற்றுவதற்காக தீண்டாமை [1] எனும் தலைப்பில் தயார் செய்து வைத்திருந்த பேச்சின் உரையின் தொகுப்பாகும். அந்த மாநாடு நடைபெறாததால் அவரே இதனை நூலாக வெளியிட்டார்.

சாதியை ஒழிக்கும் வழி
சாதியை ஒழிக்கும் வழி நூலின் அட்டைப்படம்
நூலாசிரியர்அம்பேத்கர்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம், மொழிமாற்றம் தமிழ்
வெளியிடப்பட்ட நாள்
1936
ISBN978-8189059637

நூல் உருவான வரலாறு தொகு

டிசம்பர் 12, 1935 தேதியிட்ட கடிதத்தில் ஜாத்-பட்-தோடக் மண்டலின் (சாதி அமைப்பை அகற்றுவதற்கான சங்கம்) செயலாளர் இந்த அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் (1936) உரைநிகழ்த்த வருமாறு அம்பேத்கரை அழைத்தனர் .[2] லாகூரில் உள்ள இந்த அமைப்பானது சாதியினை எதிர்க்கும் இந்து சீர்திருத்தக் குழுவாகும். அம்பேத்கர் சாதியை ஒழிக்கும் வழி எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். அதில் இந்து சமயம் பற்றி பல நச்சுச்சுரப்புள்ள கருத்துகள் இருந்ததாக அவர்கள் கருதினார்கள்[3]. பின் பொறுத்துக்கொள்ள இயலாத வகையில் உள்ள மொழி மரபுகளும், சொற்களும் இதில் அம்பேத்கர் பயன்படுத்தியிருப்பதாக கருதினர். இந்த உரையில் பொறுத்துக்கொள்ள இயலாத வகையில் கலகமூட்டும் வார்த்தைகள் உள்ளன. [4] எனவே, அவற்றைத் திருத்தி எழுதும்படி அம்பேத்கருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எழுதினார்கள். ஆனால் அம்பேத்கர் ஒரு காற்புள்ளியைக் கூட நான் திருத்தம் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்து விட்டார். பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பல ஆழ்ந்தாராய்வுக்குப் பிறகு வருடாந்திரக் கூட்டத்தினையே நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர். ஏனெனில் அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்து பின் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டால் அம்பேத்கரின் ஆதரவாளர்களால் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதினர்.[5] பின் அம்பேத்கர் அவர்கள் இந்த உரையின் தொகுப்பினை ஆயிரத்து ஐநூறு பிரதிகளை நூலாக மே 15, 1936 இல் வெளியிட்டார்.[6][7]

இந்தக் கட்டுரையில் அம்பேத்கர் இந்து சமயம், அதன் சாதி அமைப்பு மற்றும் அதன் மத நூல்களைப் பற்றி விமர்சித்திருந்தார். மேலும் அவர் சமமாக உணவு அருந்துவது மற்றும் சாதி மறுப்புத் திருமணம் போன்றவைகள் சாதி அமைப்பை ஒழிப்பதற்குப் போதுமானதாக இல்லை எனவும் அவர் வாதிடுகிறார். மேலும் அவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் சாதியை அடிப்படையாகக் கொண்டுள்ள மதக் கருத்துகளை ஒழிப்பது மட்டுமே வழியாகும் எனக் கூறியுள்ளார். [8]

காந்தியின் விமர்சனம் தொகு

சூலை, 1936 ஆம் ஆண்டில் ஹரிஜன் வார இதழில் சாதியின் உரிமையை நிறுவுதல் ( எ விண்டிகேசன் ஆஃப் கேஸ்ட்) எனும் தலைப்பில் அம்பேத்கரின் உரைக்கு தன்னுடைய கருத்தை பின்வருமாறு தெரிவித்திருந்தார். [9]

லாகூரில் உள்ள ஜாத்-பட்-தோடக் மண்டலின் வருடாந்திர மாநாட்டிற்கு (மே மாதம்) தலைமை தாங்குவதற்கு அம்பேத்கர் அவர்கள் அழைக்கப்பட்டதை வாசகர்கள் அனவைரும் அறிவர். ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அம்பேத்கரின் கருத்து ஏற்கத்தகுந்த வகையில் இல்லை எனக் கூறி அந்த மாநாட்டையே நிறுத்தியுள்ளார்கள் . இதனை அந்த ஒருங்கிணைப்பாளர்கள் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். ஏனெனில் தலைமை தாங்குவதற்காக அழைக்கப்பட்டவர் தங்களின் விருப்பதற்குத் தான் பேச வேண்டும் எனக் கருதுவது எவ்வகையில் நியாயம். மேலும் அவரின் கருத்து நிராகரிக்கப்படுவதோ அல்லது கேள்விக்குறியதாகவோ இருக்கலாம். அம்பேத்கரின் கருத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இந்து சமயக் கருத்திற்கு எதிரானது என்றும் அவரின் தலைமை உரையும் எதிர்க்கருத்து கொண்டதாகத் தான் இருக்கும் என்பதையும் அறிந்தே அவர்கள் அம்பேத்கரை அழைத்தனர். இந்தச் சமுதாயத்தில் தன்னைத் தானே செதுக்கி சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் சுய பார்வைகளை பொதுமக்கள் அறிவதற்கான அவர்களின் வாய்ப்பினை இந்த ஒருங்கிணைப்பாளர்கள் இழகக்ச் செய்துள்ளதாகவே நான் கருதுகிறேன். என காந்தி தெரிவித்துள்ளார்.

நூல் வெளியீடு தொகு

முதல் பதிப்பு தொகு

சாதியை ஒழிக்கும் வழி என்ற நூல் 1936 ஆம் ஆண்டு லாகூரில் நடக்க இருந்த ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்காக அம்பேத்கரால் எழுதப்பட்டது. உரையின் கருத்துக்களோடு மண்டலுக்கு சில முரண்பாடுகள் இருந்ததால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. பின் அம்பேத்கர் அவர்கள் இந்த உரையின் தொகுப்பினை ஆயிரத்து ஐநூறு பிரதிகளை நூலாக மே 15, 1936 இல் வெளியிட்டார்.[10]அடுத்த ஆண்டே இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பெரியாரின் முயற்சியால் குடியரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது.[11] தலித் முரசு இதழில் முழு உரையும் வெளியிடப்பட்டது.[11]

இரண்டாம் பதிப்பு தொகு

இதன் இரண்டாம் பதிப்பில் காந்திக்கான பதிலுரையுடன் வெளியிட்டிருப்பார். இந்தப் பதிப்பு 1937 ஆம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழி : மகாத்மா காந்திக்கான பதிலுரையுடன் எனும் பெயரில் வெளியிட்டார்.[12] [13]

மூன்றாம் பதிப்பு தொகு

1944 ஆம் ஆண்டில் இதன் மூன்றாவது பதிப்பு வெளியானது. இதில் இந்தியாவில் சாதி அமைப்பு: அவர்களின் வழிமுறை, தோற்றமும் வளர்ச்சியும் எனும் கட்டுரையுடன் வெளிவந்தது. இது 1916 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் நடந்த கருத்தரங்கத்தின் பொழிவுரை ஆகும்.[13]

மேற்கோள்கள் தொகு

  1. Arundhati Roy. "The Doctor and the Saint". caravanmagazine.in. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.
  2. "Annihilating caste". Frontline. 16 July 2011. http://www.frontline.in/static/html/fl2815/stories/20110729281509500.htm. பார்த்த நாள்: 22 March 2014. 
  3. "Annihilating caste". Frontline. 16 July 2011. http://www.frontline.in/static/html/fl2815/stories/20110729281509500.htm. பார்த்த நாள்: 22 March 2014. 
  4. "Annihilating caste". Frontline. 16 July 2011. http://www.frontline.in/static/html/fl2815/stories/20110729281509500.htm. பார்த்த நாள்: 22 March 2014. 
  5. "Annihilating caste". Frontline. 16 July 2011. http://www.frontline.in/static/html/fl2815/stories/20110729281509500.htm. பார்த்த நாள்: 22 March 2014. 
  6. Deepak Mahadeo Rao Wankhede (2009). Geographical Thought of Doctor B.R. Ambedkar. Gautam Book Center. பக். 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87733-88-1. https://books.google.com/books?id=1QT2oec2u3oC&pg=PA6. 
  7. "We Need Ambedkar--Now, Urgently..." Outlook. The Outlook Group. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.
  8. Timothy Fitzgerald. The Ideology of Religious Studies. Oxford University Press. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195167696. https://books.google.com/books?id=R7A1f6Evy84C&pg=PA124. 
  9. "A Vindication Of Caste By Mahatma Gandhi". Columbia University. Harijan. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
  10. "Annihilating caste". ஃபிரன்ட்லைன். 16 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  11. 11.0 11.1 "சாதியை ஒழிக்கும் வழி ~ அம்பேத்கர்", தமிழினியன் (in அமெரிக்க ஆங்கிலம்), 2014-07-11, பார்க்கப்பட்ட நாள் 2018-04-02
  12. Fitzgerald, Timothy (16 December 1999). The Ideology of Religious Studies. Oxford University Press. பக். 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-534715-9. https://books.google.com/books?id=R7A1f6Evy84C&pg=PA124. 
  13. 13.0 13.1 B. R. Ambedkar. "The Annihilation of Caste". Columbia University. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.

வெளியிணைப்புகள் தொகு

சாதியை ஒழிக்கும் வழி