நிலையூர் (மதுரை மாவட்டம்)

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி



நிலையூர், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நிலையூர் 1 பிட் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1]

நிலையூர்
நகர்புறம்
நிலையூர் is located in தமிழ் நாடு
நிலையூர்
நிலையூர்
தமிழ்நாட்டில் நிலையூரின் அமைவிடம்
நிலையூர் is located in இந்தியா
நிலையூர்
நிலையூர்
நிலையூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9.51°0′0″N 78.3°0′0″E / 9.51000°N 78.30000°E / 9.51000; 78.30000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்12,438
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்625005
வாகனப் பதிவுTN-
அருகமைந்த நகரம்மதுரை
பாலின விகிதம்1006 /
எழுத்தறிவு65.76%
மக்களவைத் தொகுதிவிருதுநகர்
சட்டமன்றத் தொகுதிதிருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
சராசரி கோடை வெப்பம்36 °C (97 °F)
சராசரி குளிகால வெப்பம்22.8 °C (73.0 °F)

இக்கிராமம், மதுரைக்கு தெற்கில், 12 கிமீ தொலைவில், திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறத்திலும்; திருமங்கலத்திற்கு வடக்கில், 15 கிமீ தொலைவிலும், திருப்பரங்குன்றத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ளது.

நிலையூர் அஞ்சல் நிலையத்தின் அஞ்சல் சுட்டு எண் 625022; தொலைபேசி குறியீடு எண் 04549 ஆகும். நிலையூர், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகமைந்த ஊர்களும், நகரங்களும் தொகு

நிலையூரின் கிழக்கில் பெருங்குடி, தெற்கில் கருவேலம்பட்டி, மேற்கில் தோப்பூர் கூத்தியார்குண்டு, வடக்கில் திருப்பரங்குன்றம் உள்ளது. நிலையூருக்கு அருகில் அமைந்த நகரங்கள், மதுரை மற்றும் திருமங்கலம் ஆகும்.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்க்கெடுப்பின்படி, 491 வீடுகள் கொண்ட நிலையூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,789 ஆகும். மக்கள்தொகையில் ஒடுக்கப்பட்டோர் 67.30% ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.44 % ஆகும். [2] நிலையூர் கிராமத்தின் எல்லையில் அமைந்த, சௌராட்டிர மக்களைக் கொண்ட கைத்தறிநகர் மக்கள்தொகை 6,444 ஆகும். அதில் ஆண்கள் 3,184; பெண்கள் 3,260 ஆக உள்ளனர்.

தொழில் தொகு

வேளாண்மை மற்றும் கைத்தறி நெசவுத் தொழில் நிலையூரின் முக்கியத் தொழிகளாகும். நிலையூர் கண்மாய் இக்கிராமத்தின் நீர் ஆதாரம் ஆகும்.

போக்குவரத்து தொகு

நிலையூர் அருகமைந்த தொடருந்து நிலையங்கள், திருப்பரங்குன்றம், மதுரை மற்றும் திருமங்கலம் ஆகும். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்துகள் திருப்பரங்குன்றம் வழியாக நிலையூர் மற்றும் கைத்தறிநகருக்கு செல்கிறது.

நிலையூர் கைத்தறிநகர் நெசவாளர் குடியிருப்புகள் தொகு

  • இராமகிருஷ்ணா காலனி
  • பாலாஜி காலனி
  • இராதாகிருஷ்ணன் காலனி
  • மாருதி காலனி
  • நடனகோபாலநாயகி காலனி
  • நேரு காலனி
  • அங்கயற்கண்ணி காலனி
  • பகத்சிங் காலனி
  • டீச்சர்ஸ் காலனி

வழிபாட்டுத் தலங்கள் தொகு

  • காளி அம்மன் கோயில்
  • அய்யனார் கோவில்
  • பாலாஜி வெங்கடேஸ்வரா கோயில்
  • விநாயகர் கோயில்
  • முருகன் கோயில்
  • அங்கயற்கண்ணி கோயில்
  • சிவன் கோயில்
  • அனுமார் கோயில்
  • பராசக்தி கோயில்

வங்கி மற்றும் அஞ்சலகம் தொகு

அருகமைந்த கல்வி நிலையங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. Nilaiyur Population

வெளி இணைப்புகள் தொகு