கைத்தறி நகர்

மதுரை கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் குடியிருப்புகள்

கைத்தறி நகர், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நிலையூர் 1 பிட் ஊராட்சியில் அமைந்த, சௌராட்டிர கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான குடியிருப்புகள் ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625005 ஆகும். இராமகிருஷ்ணா நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், முன்னாள மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கே. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களது முயற்சியால், தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை நிதியுதவியுடன் 1985ல் நிறுவப்பட்ட கைத்தறி நகரில், கீழ்கண்ட எட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்காக, தலா 3 செண்ட் நிலத்தில் ஓட்டு வீடுகள் கட்டி வழங்கப்பட்டது. அவைகள்:

  1. இராமகிருஷ்ணா கூட்டுறவு நெசவாளர்கள் சங்க காலனி
  2. இராதகிருஷ்ணன் நெசவாளர் கூட்டுறவு சங்க காலனி
  3. மாருதி நெசவாளர் கூட்டுறவு சங்க காலனி
  4. நடனகோபாலநாயாகி நெசவாளர் கூட்டுறவு சங்க காலனி
  5. பகத்சிங் கூட்டுறவு நெசவாளர்கள் சங்க காலனி
  6. அங்கயற்கண்ணி கூட்டுறவு நெசவாளர்கள் சங்க காலனி
  7. நேரு கூட்டுறவு நெசவாளர்கள் சங்க காலனி
  8. பாலாஜி கூட்டுறவு நெசவாளர்கள் சங்க காலனி

அமைவிடம் தொகு

திருப்பரங்குன்றம் மலையின் பின்புறத்தின் அமைந்த கைத்தறி நகர், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் வழியாக 11 கிமீ தொலைவிலும்; மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் வழியாக 19 கிமீ தொலைவிலும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பழங்காநத்தம் வழியாக 12 கிமீ தொலைவிலும், திருப்பரங்குன்றத்திலிருந்து 3.8 கிமீ தொலைவிலும் உள்ளது.

அரசியல் தொகு

நிலையூர் 1 பிட் ஊராட்சியில் அமைந்த கைத்தறி நகர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

பண்பாடு, நாகரிகம் தொகு

கைத்தறி நகர் அனைத்து சௌராட்டிரா மக்கள் பேச்சு வழக்கில் சௌராட்டிர மொழியினை பேசுகின்றனர். மேலும் இம்மக்கள் தமிழ் மொழியில் நன்கு எழுதவும், பேசவும் செய்கின்றனர். கைத்தறி நகர் பாலாஜி நெசவாளர்கள் சங்க காலனியில் அமைந்த பாலாஜி வெங்கடேசப் பெருமாள் கோயில் மற்றும் அங்கயற்கண்ணி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க காலனியில் அமைந்த அங்கயற்கண்ணி கோயில் புகழ் பெற்றது.

அருகமைந்த ஊர்கள் தொகு

கைத்தறி நகரை சுற்றிலும் திருப்பரங்குன்றம், நிலையூர், வடபழஞ்சி, ஹார்விப்பட்டி, திருநகர், கூத்தியார்குண்டு, பெருங்குடி, தனக்கன்குளம் மற்றும் கருவேலம்பட்டி, தோப்பூர் மற்றும்கப்பலூர் போன்ற ஊர்கள் உள்ளது.

வங்கி மற்றும் அஞ்சலகம் தொகு

அருகமைந்த கல்வி நிலையங்கள் தொகு

போக்குவரத்து தொகு

அனுப்பானடி மற்றும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் கைத்தறி நகருக்கு செல்கிறது.

பேருந்து நிலையம் தொகு

கைத்தறி நகருக்கு அருகமைந்த பேருந்து நிலையம், திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

தொடருந்து நிலையம் தொகு

கைத்தறி நகரிலுருந்து 3 கிமீ தொலைவில் திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் உள்ளது. [1]

வானூர்தி நிலையம் தொகு

கைத்தறி நகரிலிருந்து மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் 9 கிமீ தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைத்தறி_நகர்&oldid=2621761" இலிருந்து மீள்விக்கப்பட்டது