பெருங்குடி, மதுரை
பெருங்குடி என்பது மதுரை மாவட்டத்தின் தெற்கு வருவாய் வட்டத்தில் அமைந்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். பெருங்குடி கிராமம், மதுரை நகரத்திற்கு தெற்கில், 12 கி.மீ. தொலைவில், மதுரை வானூர்தி நிலையம் செல்லும் வழியில், மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. பெருங்குடி கிராமம், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்; விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1][2]
பெருங்குடி, மதுரை Perungudi , Madurai | |
---|---|
ஆள்கூறுகள்: 9°51′20″N 78°05′29″E / 9.8555°N 78.0915°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 180 m (590 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,081 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625022 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
வாகனப் பதிவு | TN 58 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, நிலையூர், பசுமலை, விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | விருதுநகர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | மாணிக்கம் தாகூர் |
சட்டமன்ற உறுப்பினர் | வி. வி. ராஜன் செல்லப்பா |
இணையதளம் | https://madurai.nic.in |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 180 மீட்டர் உயரத்தில், 9°51′20″N 78°05′29″E / 9.8555°N 78.0915°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெருங்குடி புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது. அவனியாபுரம் எனும் ஊர் பெருங்குடி கிராமத்திற்கு அருகில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625022 ஆகும்.[3]
மக்கள்தொகை பரம்பல்
தொகு973.75 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெருங்குடி கிராமத்தின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,397 வீடுகள் உடைய பெருங்குடி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 9,081 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 1,824 (20.09 %) ஆக உள்ளனர். 4,122 தொழிலாளர்கள் இக்கிராமத்தில் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.99% ஆகும். மக்கள்தொகையில் ஆறு வயதிற்குட்பட்டோர் 1,104 ஆக உள்ளனர். இக்கிராமாத்தில் தமிழ், சௌராட்டிரம் மற்றும் தெலுங்கு மொழிகள் பேசப்படுகிறது. [4]
அருகில் உள்ள நகரங்களும், ஊர்களும்
தொகுஅவனியாபுரம், மதுரை, திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, நிலையூர், பசுமலை, விளாச்சேரி, தனக்கன்குளம், தோப்பூர் ஆகியவை பெருங்குடி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
அருகில் உள்ள நிறுவனங்கள்
தொகு- இந்திய அஞ்சல் பயிற்சி நிறுவனம்
- சரஸ்வதி நாராயணன் கலை & அறிவியல் கல்லூரி
- மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Perungudi village, Madurai district
- ↑ Perungudi village
- ↑ "PERUNGUDI Pin Code - 625022, Madurai South All Post Office Areas PIN Codes, Search MADURAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
- ↑ Perungudi Population - Madurai, Tamil Nadu