வீரம் (திரைப்படம்)

சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வீரம் (ஆங்கிலம்:Veeram) 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிவா இயக்கினார். உதவி நடன இயக்குனர் தயாபரன்.இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர். [3] இப்படம் தெலுங்கில் வீருடோக்கடே என்ற பெயரிலும், இந்தியில் வீரம் தி பெர்மன் என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

வீரம்
வீரம் திரைப்படத்தின் முதல் விளம்பரச் சுவரொட்டியின் தோற்றம்
இயக்கம்சிவா
தயாரிப்புபாரதி ரெட்டி
கதைபரதன் (வசனம்)
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஅஜித் குமார்
தமன்னா
ஒளிப்பதிவுவெற்றி
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்விஜயா புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 10, 2014 [1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு40 கோடி[2]
மொத்த வருவாய்130 கோடி[சான்று தேவை]

கதைச்சுருக்கம் தொகு

ஒட்டன்சத்திரத்தில் அஜித்குமார் (விநாயகம்) தனது நான்கு தம்பிகளுடன் வாழ்ந்து வருகிறார். தனக்கு திருமணம் செய்தால் தன்து மணைவி தனக்கும் தன் தம்பிகளுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்திவிடுவார் என்று கருதுவதால் அஜித் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரின் தம்பிகள் அஜித் குமாருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். தமன்னாவை (கோப்பெருந்தேவி) தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவருமாறு செய்கிறார்கள். அஜித்குமாருக்கும் தமன்னாவுக்கும் காதல் மலர முயன்று அதில் வெற்றி பெறுகிறார்கள். அஜித்தும் அவர் தம்பிகளும் சண்டைகளில் ஈடுபடுபவர்கள். தமன்னாவுக்கும் அவர் தந்தை நாசருக்கும் சண்டை என்றாலே பிடிக்காது. தமன்னாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். நாசர் அங்கு சில நாட்கள் தங்கி திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி சொல்கிறார். அங்கு நாசரை கொல்ல அதுல் குல்கர்னி அடியாட்களை அனுப்புகிறார். இது தெரிந்த அஜித் எவ்வாறு நாசர் குடும்பத்தினரை காப்பாற்றினார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.

நடிகர்கள் தொகு

பாடல் ஒலிப்பதிவு தொகு

இத்திரைப்படத்தின் இசை ஒலிப்பதிவை தேவி ஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். மேலும் அஜித் குமார் நடித்த திரைப்படத்தில் இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் பாடல்கள் விநியோக உரிமையை ஜுங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்பட இசைத்தொகுப்பு டிசம்பர் 20, 2013 அன்று அதிகாரபூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பாடல் பதிவுகள் டிசம்பர் 18, 2013 அன்று இணையத்தில் கசிந்துவிட்டது.

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் விவேகா. 

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "நல்லவன்னு சொல்லுவாங்க"  தேவி ஸ்ரீ பிரசாத் 4:35
2. "இவள் தானா"  சாகர், ஷ்ரேயா கோஷல் 4:14
3. "தங்கமே தங்கமே"  அட்னான் சாமி, பிரியதர்ஷினி 4:06
4. "ஜிங் ஜக்கான் ஜிங் ஜக்கான்"  சுபாஷ், மகிழினி மணிமாறன் 4:30
5. "ரத கஜ வீரம்..."  ஆனந்த், தீபக், கவுசிக், ஜகதீஷ் 2:48

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. http://www.sify.com/movies/kochadaiiyaan-stirs-the-pongal-pot-news-tamil-nlpmCCeccga.html
  2. "First Day Box Office Collections of 'Jilla' and 'Veeram'". Deccan Chronicle.
  3. http://www.indiaglitz.com/channels/tamil/article/86604.html

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரம்_(திரைப்படம்)&oldid=3738393" இலிருந்து மீள்விக்கப்பட்டது