சின்மயானந்தா
சுவாமி சின்மாயானந்தா (Swami Chinmayananda, மலையாளம்: സ്വാമി ചിന്മയാനന്ദന്, மே 8, 1916 - ஆகஸ்ட் 3, 1993) ஒரு இந்திய ஆன்மீகவாதி. சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர்.
சுவாமி சின்மயானந்தா | |
---|---|
சுவாமி சின்மயானந்தா | |
பிறப்பு | மே 8,1916 எர்ணாகுளம், கேரளா, இந்தியா |
இறப்பு | ஆகஸ்ட் 3,1993 சான் டியேகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | ஆன்மீகத் தலைவர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசின்மயானந்தா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற இடத்தில் "பூதம்பள்ளி" என்ற பெயரைக் கொண்ட ஓர் இந்துக் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியேறியவர் ஊடகவியல் துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் "நாஷ்னால் ஹெரால்ட்" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். ரிசிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர் இந்து சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டார்[1].
சுவாமி சிவானந்தரினால் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 சிவராத்திரி நாளன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டு "சுவாமி சின்மயானந்தா" என்ற பெயரையும் பெற்றார். இமயமலையில் சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் 8 ஆண்டுகள் இந்து தத்துவத்தைப் பயின்றார். சுவாமிகளின் ஆசியுடன் வேதாந்தத்தை உலகெங்கும் பரப்ப இமாலயத்தை விட்டு சின்மயானந்தர் புறப்பட்டார்.
உலகெங்கும் பல ஆசிரமங்களையும் மையங்களையும் ஆரம்பித்தார். பல பாடசாலைகளையும், மருத்துவ மனைகளையும் ஆரம்பித்தார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவென கிராம நலத் திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கினார்.
சுவாமி சின்மயானந்தா ஆகஸ்ட் 3, 1993 இல் சான் டியேகோ, கலிபோர்னியாவில் மறைந்தார். இவரது சீடர்கள் இவர் அவ்விடத்தில் மகா சமாதி அடைந்ததாகக் கருதுகின்றனர். இவர் ஆரம்பித்த சின்மயா மிஷன் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அமைப்பாகும். 350 மையங்களில் இது இயங்குகிறது. இந்தியப் பண்பாடு, மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது.
சுவாமிஜியின் முதன்மையான சீடர்களில் சுவாமி தயானந்தர், தமது குருவின் அத்வைத தத்துவத்தை பரப்புவதில் இன்றளவும் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். மேலும் அத்வைத தத்துவத்தை பரப்ப இதுவரை 250க்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- சின்மயா மிசன் பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம்
- CORD பரணிடப்பட்டது 2019-05-04 at the வந்தவழி இயந்திரம்
- சுவாமி சின்மயானந்தாவின் சுயசரிதம்