செம்மார்புக் கிளி

செம்மார்புக் கிளி (Red-breasted parakeet)(Psittacula alexandri) என்ற சிற்றினம் சிடாகுல பேரினத்தில் மிகவும் பரவலாகக் காணப்படும் சிற்றினங்களில் ஒன்றாகும். இது புவியியல் மாறுபாடுகளை அதிகமாகக் கொண்ட சிற்றினமாகும்.

செம்மார்புக் கிளி
பெண் (இடது) ஆண் வலது
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
சிட்டாசிபார்மிசு
குடும்பம்:
சிட்டாசிடே
பேரினம்:
சிட்டாகுலா
இனம்:
P. columboides
இருசொற் பெயரீடு
Psittacula columboides
(லின்னேயஸ், 1758)
சிட்டாகுல அலெக்சாண்ட்ரி துணைச்சிற்றின பரம்பல்
வேறு பெயர்கள்

சிட்டாகசு அலெக்சாண்ட்ரி லின்னேயஸ் 1758

விளக்கம்

தொகு

செம்மார்புக் கிளியின் மார்பில் காணப்படும் பெரிய சிவப்புத் திட்டினால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். மீசைக் கிளி என்பது இதனுடைய துணையினங்களைப் பொறுத்து வழங்கப்படும் மாற்றுப் பெயராகும். பெரும்பாலான துணையினங்கள் இந்தோனேசியாவில் உள்ள சிறிய தீவுகள் அல்லது தீவுக்கூட்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இதனுடைய ஒரு துணையினம் அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. மேலும் ஒரு துணையினம் தென்கிழக்காசியக் கண்டத்தில் காணப்படுகிறது. தெற்காசியாவின் வடகிழக்கு பகுதியான இமயமலை அடிவாரத்திலும் இவை காணப்படுகின்றன. காட்டுப் பறவை வர்த்தகத்தால் சில தீவு இனங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளன. சாவகம் தீவில் நியமன சிற்றினம் அழிவை அண்மித்துள்ளது.

இந்த சிற்றினத்தின் காட்டு வாழிட உயிரிகள் தற்போது மும்பை போன்ற நகரங்களில் தங்கள் வாழ்வை வாழக் கற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பிற நகரங்களில் சிறிய எண்ணிக்கையில் இவை உள்ளன.

வகைப்பாட்டியல்

தொகு
 
பெண், வங்காளதேசம்

செம்மார்புக் கிளிகள் 1758-ல் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸால் சிசுடமா நேச்சரேவின் பத்தாவது பதிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. சிட்டாகசு பேரினத்தில் வைக்கப்பட்டு சிட்டாகசு அலெக்சாண்ட்ரி என்ற இருசொல் பெயரை உருவாக்கினார். இதன் வாழிடமானது சாவகம் தீவு ஆகும். 1800ஆம் ஆண்டில் பிரான்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜஸ் குவியரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிட்டாகுலா பேரினத்தில் செம்மார்புக் கிளி தற்போது வைக்கப்பட்டுள்ளது.[2] பேரினப் பெயர் "கிளி" என்பதற்கான லத்தீன் வார்த்தையான சிட்டாகசு என்பதற்குக் கிளி என்ற பொருளாகும். அலெக்சாண்ட்ரி என்ற குறிப்பிட்ட பெயர் பேரரசர் அலெக்சாந்தர் என்பவரின் நினைவாக இடப்பட்டது.

எட்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: அவை:[2]

  • சி. அ. பேசியாட்டா (முல்லர், 1776) - வட இந்தியா முதல் தெற்கு சீனா வரை மற்றும் இந்தோசீனா
  • சி. அ. அபோட்தி (ஓபர்ஹோல்சர், 1919) - அந்தமான் தீவுகள்
  • சி. அ. காலா (ஓபர்ஹோல்சர், 1912) - சிமியூலு (வடக்கு சுமத்ராவின் மேற்கு)
  • சி. அ..மேஜர் (ரிச்மண்ட், 1902) - லாசியா மற்றும் பாபி தீவுகள் (வடக்கு சுமத்ராவின் மேற்கு)
  • சி. அ. பெரியோன்கா (ஓபெர்ஹோல்செர், 1912) – நியாஸ் (வடக்கு சுமத்ராவின் மேற்கு)
  • சி. அ. அலெக்ஸாண்ட்ரி (லின்னேயஸ், 1758) - ஜாவா, பாலி மற்றும் தெற்கு போர்னியோ
  • சி. அ. தாம்மெர்மணி சாசென் & கிளாசு, 1932 – கரிமுன்ஜாவா தீவுகள் (மத்திய ஜாவாவின் வடக்கு)
  • சி. அ. கான்ஜெனானென்சிசு ஹோஜெர்வெர்ப், 1962 – காங்கேயன் தீவுகள் (பாலியின் வடக்கு)

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Psittacula alexandri". IUCN Red List of Threatened Species 2017: e.T22685505A111371703. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22685505A111371703.en. https://www.iucnredlist.org/species/22685505/111371703. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Parrots, cockatoos". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மார்புக்_கிளி&oldid=3538700" இலிருந்து மீள்விக்கப்பட்டது