செம்ஸ்போர்டு பிரபு

செம்ஸ்போர்டு பிரபு (1st Viscount Chelmsford), (12 ஆகஸ்டு 1868 – 1 ஏப்ரல் 1933) பிரித்தானியப் பேரரசின் அரசியல்வாதியும், பிரித்தானிய காலனி ஆதிக்க நாடுகளின் ஆளுநரும் ஆவார்.

செம்ஸ்போர்டு
பிரபு
வைஸ்ராய் மற்றும் இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
4 ஏப்ரல் 1916 – 2 ஏப்ரல் 1921
ஆட்சியாளர்மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
முன்னையவர்வாரன் ஹேஸ்டிங்ஸ்
பின்னவர்ஐசக்
22வது [[ஆளுநர், நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா]]
பதவியில்
28 மே 1909 – 11 மார்ச் 1913
ஆட்சியாளர்கள்மன்னர் ஏழாம் எட்வர்டு
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
Lieutenantசர் பிரடெரிக் டார்லி
சர் வில்லியம் கூல்லன்
முன்னையவர்சர் ஹாரி ராவ்சன்
பின்னவர்ஜெரால்டு ஸ்டிரிக்லாண்ட்
First Lord of the Admiralty
பதவியில்
28 சனவரி1924 – 7 நவம்பர் 1924
பிரதமர்இராம்சே மெக்டொனால்டு
முன்னையவர்லியோ அமெரி
பின்னவர்வில்லியம் பிரிட்ஜ்மேன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1868-08-12)12 ஆகத்து 1868
லண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு1 ஏப்ரல் 1933(1933-04-01) (அகவை 64)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துணைவர்தமே பிரான்செஸ் சார்லொட்டி கெஸ்ட்
முன்னாள் கல்லூரிமெக்தலான் கல்லூரி, ஆக்ஸ்போர்டு
தொழில்அரசியல்வாதி, பிரித்தானிய காலனிகளின் நிர்வாகி

செம்ஸ்போர்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஆளுநராகவும், (1905 - 1909), நியூ சௌத் வேல்ஸ் மாகாண ஆளுநராகவும் (1909 – 1913), முதல் உலகப் போருக்குப் பின்னர் 29 பிப்ரவரி 1916ல் கோமறை மன்ற உறுப்பினராக பணியாற்றியவர். பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1916 முதல் 1921 முடிய வைஸ்ராயாக பணியாற்றியவர்.[1][2]

1919ல் வைஸ்ராய் செம்ஸ்போர்டு, மாண்டேகுவுடன் இணைந்து அறிவித்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் நன்கு அறியப்பட்டவர்.

இவரது சீர்திருத்தங்களின் படி, இந்தியர்களுக்கு அரசியலில் படிப்படியாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பின்னணி தொகு

இந்திய விடுதலைப் போராட்டங்களை அடக்க வேண்டி, இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டு மார்ச், 1919ல் ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தார். இச்சட்டப்படி, எவரையும் ஆதாரம் அல்லது விசாராணையின்றி கைது செய்த் சிறையில் அடைக்க முடியும் என்பதால், இச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.

ரௌலட் சட்டதிற்கு எதிராக அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் எனும் தோட்டத்தில் 13 ஏப்ரல் 1919ல் கூடிய மக்களை, ரெசினால்டு டையர் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் சுட்டதில், 379 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

செம்ஸ்போர்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பிரித்தானியப் பேரரசின் தலைமை முகவராக பணியாற்றினார்.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Frederic John Napier Thesiger, 1st Viscount Chelmsford
  2. Frederic Thesiger, 1st Viscount Chelmsford
  3. "Chelmsford, third Baron (1868–1933)". Australian Dictionary of Biography. பார்க்கப்பட்ட நாள் 11 July 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்ஸ்போர்டு_பிரபு&oldid=3858767" இலிருந்து மீள்விக்கப்பட்டது