ரெசினால்டு டையர்

பிரிட்டிஷ் இந்திய ராணுவ ஜெனரல்

கெனல் ரெஜினால்டு எட்வர்டு ஹார்ரி டையர் (Colonel Reginald Edward Harry Dyer, 9 அக்டோபர் 1864 – 23 சூலை 1927) பிரித்தானியப் படைத்துறை அதிகாரியாவார். பஞ்சாப் மாகாணத்தின் அமிருதசரசு நகரில் நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு காரணமானவர். இதற்காக பதிவியிலிருந்து நீக்கப்பட்ட போதும் பிரித்தானியாவில், குறிப்பாக பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் தொடர்புள்ளவர்களால், நாயகராக கொண்டாடப்படுகின்றார்.[1] சில வரலாற்றாளர்கள் இந்த நிகழ்வு இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி முடிவுற தீர்மானமான நகர்வாக இருந்ததாக கருதுகின்றனர்.[2]

ரெஜினால்டு எட்வர்டு ஹார்ரி டையர்
பட்டப்பெயர்(கள்)அமிருதசரசின் இறைச்சி வெட்டுநர்
ஜெனரல் டையர்
பிறப்பு(1864-10-09)9 அக்டோபர் 1864
இறப்பு24 சூலை 1927(1927-07-24) (அகவை 62)
சார்புஐக்கிய இராச்சியம்
சேவை/கிளைபிரித்தானிய இராணுவம்
சேவைக்காலம்1885–1920
தரம்துணைமைத் தலைவர்
கட்டளைசியெஸ்தான் படை
25வது பஞ்சாபியர்
போர்கள்/யுத்தங்கள்மூன்றாம் ஆங்கில-பர்மிய போர்
சித்ரால் படையெடுப்பு
முதல் உலகப் போர்
ஜாலியன்வாலா பாக் படுகொலை
துணை(கள்)அன்னி டையர் (1904–1938+)

இளமையும் கல்வியும்

தொகு

டையர் பிரித்தானிய இந்தியாவில் தற்போதைய பாக்கித்தானில் உள்ள இம்யூரி என்றவிடத்தில் 1864இல் பிறந்தார். தனது சிறுவயதில் சிம்லாவில் வாழ்ந்த டையர் அங்கிருந்த பிஷப் காட்டன் பள்ளியில் துவக்கக் கல்வியைப் பெற்றார். சிப்பாய்க் கிளர்ச்சிக்கு ஆறு ஆண்டுகள் கழித்துப் பிறந்திருந்தார். பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து நடந்த அந்த கிளர்ச்சிக்குப் பிறகு பிரித்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே அச்சமும் ஐயமும் இருந்து வந்தன; இதனால் இனவாரியாக பிரிவுபட்டு வாழ்ந்தனர். இது டையரின் இளமனதில் தாக்கமேற்படுத்தியிருந்தது.

1875இலிருந்து 1881 வரை இங்கிலாந்தின் கார்க் கவுன்ட்டியிலிருந்த மிடில்டன் கல்லூரியில் படித்தார். பின்னர் சாண்டுயர்சுட்டில் உள்ள அரச படைத்துறை கல்லூரியில் பயின்று 1885இல் அரசியாரின் அரச படைப்பிரிவில் துணைநிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.[3] 1886இல் பெல்பாஸ்ட்டிலும் 1886-87இல் மூன்றாம் பர்மிய போரிலும் கிளர்ச்சி அடக்கு பணிகளில் பணியாற்றினார். பின்னர் பிரித்தானிய இந்தியப் படைத்துறையில் சேர்ந்தார். 1887இல் வங்காளப் பணியாளர் படைக்குழுவில் இணைந்தார்.[4][5] பினர் 39வது வங்காள காலாட்படையிலும் அதன் பின்னர் 29வது பஞ்சாபியர் பிரிவிலும் மாற்றப்பட்டார்.

பணிவாழ்வு

தொகு

29வது பஞ்சாபியர் பிரிவில் பொறுப்பாற்றியபோது 1888இல் நடந்த கருமலை போரிலும் 1895இல் நடந்த சித்ரால் சண்டையிலும் பங்கேற்றார். 1896இல் கலபதியாக பதவியேற்றம் பெற்றார்.[6] 1901இல் மேலும் ஒரு உயர்வு பெற்று 1901க்கும் 1902க்கும் இடையில் நடந்த மகசூது சூழடைப்பில் போரிட்டார்.[7]

பின்னர் டையர் 25ஆம் பஞ்சாபியர் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 1908இல் சாக்கா கேல் படையெடுப்பிலும் பங்கேற்றார். இந்தியாவிலும் ஆங்காங்கிலும் இருந்த 25ஆம் பஞ்சாபியப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1910இல் துணைநிலை கேனலாக பதிவியேற்றம் பெற்றார்.[8]

முதல் உலகப் போரின்போது (1914–18), செயஸ்டியன் படைக்கு பொறுப்பாக இருந்தார்.[9] 1915இல் கேனலாகப் பதிவியேற்றம் பெற்றார்.[10][11] 1916இல் தற்காலிக பிரிகேடியர்-செனரலாக பொறுப்பேற்றார்.[12][13]

1919இல் அம்ரித்சர் படுகொலைக்கு ஒரு மாதம் கழித்து இவரது படைப்பகுதி மூன்றாம் ஆங்கில ஆப்கானியப் போரில் தால் பாலைவனக் காவலரணையின் பொறுப்பேற்றது.[14] சூலை 17 1920இல் கேனலாக பதவி உயர்வு பெற்றிருந்த டையர் பணிஓய்வு பெற்றார்.[15]

ஜாலியன்வாலா பாக் படுகொலை

தொகு

பின்னணி

தொகு

1919இல் பஞ்சாபிலிருந்த பிரித்தானிய மக்கள் இந்தியர்கள் பிரித்தானிய அரசை கவிழ்க்க சதி செய்வதாக அஞ்சினர். கிளர்ச்சி குறித்தும் ஐரோப்பியர்களின் உயிருக்கு ஆபத்து என்றும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. பஞ்சாபு மாகாணத்தின் துணைநிலை ஆளுநர், சேர் மைக்கேல் ஓ டயர், போராட்டம் நடத்திய இந்தியர்களை பஞ்சாபிலிருந்து வெளியேற்ற முடிவு செய்தார்.

முதல் உலகப் போரின் போது படைத்துறை மருத்துவ சேவையில் பணியாற்றிய மரு.சத்தியபால், அறப் போராட்டம், குடியியற் சட்டமறுப்புக்கு ஆதரவளித்தார்; இதனால் அவர் பொதுமேடைகளில் பேச தடை விதித்தனர். முனைவர்.கிட்ச்லா என்ற முசுலிம் வக்கீலும் அரசியல் மாற்றத்தையும் வன்முறையற்ற போராட்டத்தையும் ஆதரித்தார். இவர்கள் இருவரையும் குறித்து சரியாக அறியாத காவல்துறை துணை ஆணையர் மைல்சு இர்விங் இருவரையும் பிரித்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதாக கைது செய்தார்.

இந்தக் கைதினால் பஞ்சாபு மக்கள் பொங்கியெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். பொதுவிடங்களில் கூடிய மக்கள் கூட்டம் கைதானவர்களை விடுதலை செய்ய கோரியது. இதனால் கிலி கொண்ட படைத்துறை தொடர்வண்டி மேம்பாலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பலர் இறந்தனர். இதில் ஆத்திரமுற்ற கூட்டம் நகர மையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. மேலும் பல துருப்புக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கோபத்துடன் அலைந்த கூட்டம் ஐரோப்பியர்களை குறிவைத்து தாக்க முற்பட்டனர். ஏப்ரல் 9 1919 அன்று பெண்களுக்கான மிசன் டே பள்ளியில் பணியாற்றி வந்த மார்செல்லா செர்வுட் என்ற ஆசிரியை மிதிவண்டியில் நகரை வலம் வந்து பள்ளிகளை மூடச்சொல்லி வருகையில் ஓர் குறுகலான சாலையில் கூட்டம் அவரைத் தாக்கியது. இதனால் காயமுற்ற செர்வுட்டை அச்சாலையில் குடியிருப்போர் சிலர் காப்பாற்றி கூட்டத்திலிருந்து மறைத்து அவரது இடத்திறுகு அனுப்பி வைத்தனர். ஒரு பெண்மணி மீதான இந்தத் தாக்குதல் ஜலந்தர் நகரப் பாசறையின் படைத்தலைவர் டையருக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது.

அம்ரித்சரசு படுகொலை

தொகு

ஜாலியன் வாலா பாக்கிற்கு வைசாக்கி புத்தாண்டு விழாவினைக் கொண்டாடுவதற்காக ஏப்ரல் 13 1919 அன்று பெருந்திரளானோர் கூடியிருந்தனர். இது சமயம் மற்றும் பண்பாட்டுத் திருவிழாவாக இருந்தது. பாக் 6-7 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றிவர சுவர்களுடன் இருந்தது. இந்தச் சுவர்களில் மிகச்சிறிய நுழைவாயில்கள் இருந்தன. இவை முலம் சிறிய எண்ணிக்கையிலேயே நுழையவும் வெளிவரவும் இயலும்.

படைத்தலைவர் டையரிடம் 90 துருப்புகள் இருந்தனர்; 25 கூர்க்காக்கள், 25 பஷ்தூன் மக்கள் மற்றும் பலூச்சிய மக்கள் இவர்களில் இருந்தனர். அனைவரிடமும் .303 லீ-என்பீல்டு துப்பாக்கிகள் இருந்தன. ஆயுதமேதும் இல்லாத பொதுமக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்த டையர் இவர்களுக்கு ஆணையிட்டார். அங்கு கூடியிருந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவே பின்னாளில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என அறியப்பட்டது. தங்களிடம் துப்பாக்கி இரவைகள் இருந்தவரை துருப்புக்கள் சுட்டவண்ணம் இருந்தனர். மொத்தம் 1650 சுற்றுக்கள் சுடப்பட்டன. [16] இந்த துப்பாக்கிச் சூடு பத்து நிமிடங்களுக்கு நீடித்தது.[17]

இந்த பத்து நிமிடத் துப்பாக்கிச் சூட்டின் போது டையர் தனது துருப்புக்கள் எவ்வாறு சுடுகின்றனர் என்பதை கவனித்த வண்ணமிருந்தார். எங்கு மிகக் கூடுதலான மக்கள் இருந்தனரோ அங்கு சுடுமாறு துருப்புக்களை ஏவினார்.[16] கூட்டம் மெதுவாகக் கலைந்தது என்பதற்காக அவர் இவ்வாறு செய்யவில்லை; அங்கு கூடியதற்கு தண்டனை கொடுக்க விரும்பினார்.[16]

சில துருப்புக்கள் மக்கள் மீது இல்லாது வானை நோக்கிச் சுட்டனர். இதனைக் கண்ணுற்ற டையர் கீழே சுடு. உன்னை எதற்காக இங்கு அழைத்து வந்துள்ளேன் ? எனக் கூவினார்.[18]

பிந்நாளில் டையரே கூட்டத்திற்கு கலைந்து செல்லுமாறு எந்தவொரு முன்னறிவிப்பும் தரவில்லை என ஒப்புக்கொண்டார். தனது துருப்புக்களுக்கு சுட ஆணையிட்டதற்கு தனக்கு எவ்வித மனவருத்தமும் இல்லை என்றார்.[19]

உயிரிழப்பும் காயமுற்றோரும்

தொகு

பிரித்தானியப் படை 379 பேர் இறந்ததாகவும் மற்ற அறிக்கைகள் 1000க்கும் கூடுதலானவர்கள் இறந்ததாகவும் தெரிவிக்கின்றன.[20] உள்நாட்டு அரசியல் அறிக்கையில் 1000 பேர் எனவும் காயமுற்றவர்கள் 1200 பேர் எனவும் கூறப்பட்டுள்ளது.[21] அம்ரித்சரசில் இருந்த பிரித்தானிய மருத்துவர் , மரு.இசுமித், 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.[22] இத்தகைய மிகக் கூடுதலான உயிரிழப்புக்களையும் காயங்களையும் விளைவித்ததால் அதிகாரி டையர் "அம்ரித்சரசின் இறைச்சி வெட்டுநர் " என இந்தியாவில் அறியப்படுகின்றார்.

தவழ்தல் ஆணை

தொகு

மிஸ் மார்செல்லா செர்வுட் தாக்கப்பட்ட குறுகலான சந்துக்கு தனது துருப்புக்களை அனுப்பி, எந்தவொரு இந்தியரும் அந்த சந்தில் (150 கசங்கள்) தவழ்ந்துதான் செல்ல வேண்டும் என கட்டளையிட்டார். இதில் மார்செல்லாவிற்கு உதவி புரிந்து காப்பாற்றிய இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வில்லை.

இந்தக் கட்டளையால் சாலை மூடப்பட்டது; இந்த சந்தில் இருந்த வீடுகளுக்கு பின்பக்க கதவுகள் இருக்கவில்லை. தங்கள் கூரைகள் வழியாக இறங்கி செல்ல வேண்டியிருந்தது. மருத்துவரோ, பிற வணிக வழங்குதலோ அனுமதிக்கப்படவில்லை. சாலை நடுவில் ஓர் சவுக்கடி சாவடி அமைக்கப்பட்டு இந்த ஆணை செயலாக்கப்பட்டது.[23]

மறைவு

தொகு

டையர் தனது 62 வயதில் தீவிர பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு 1927ஆம் ஆண்டு உயிரிழந்தார்.[24]

மேற்சான்றுகள்

தொகு
 1. Derek Sayer, "British Reaction to the Amritsar Massacre 1919–1920," Past & Present, May 1991, Issue 131, pp 130–164
 2. Brain Bond, "Amritsar 1919," History Today, Sept 1963, Vol. 13 Issue 10, pp 666–676
 3. "No. 25506". இலண்டன் கசெட். ஆகஸ்டு 28 1885. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 4. "No. 25766". இலண்டன் கசெட். டிசம்பர் 13 1887. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 5. "No. 25883". இலண்டன் கசெட். டிசம்பர் 14 1888. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 6. "No. 26795". இலண்டன் கசெட். நவம்பர் 17 1896. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 7. "No. 27362". இலண்டன் கசெட். அக்டோபர் 4 1901. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 8. "No. 28362". இலண்டன் கசெட். மே 3 1910. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 9. "No. 30360". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). அக்டோபர் 30 1917. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 10. "No. 29924". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). ஜனவரி 30 1917. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 11. "No. 31787". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). பெப்ரவரி 17 1920. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 12. "No. 29509". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). மார்ச் 14 1916. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 13. "No. 30617". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). ஏப்ரல் 5 1918. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 14. "No. 31823". இலண்டன் கசெட் (invalid |supp= (help)). மார்ச் 12 1920. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 15. "No. 32047". இலண்டன் கசெட். செப்டம்பர் 10 1920. {{cite magazine}}: Check date values in: |date= (help)
 16. 16.0 16.1 16.2 See: Report of Commissioners,Vol I, II, Bombay, 1920, Reprint New Delhi, 1976, p 56.
 17. Disorder Inquiry Committee Report, Vol II, p 191.
 18. Jallianwala Bagh Massacre, A Premeditated Plan, Punjab University Chandigarh, 1969, p 89, Raja Ram; A Saga of Freedom Movement and Jallianwala Bagh, Udham Singh, 2002, p 141, Prof (Dr) Sikander Singh.
 19. See: Report of Commissioners, Vol I, II, Bombay, 1920, Reprint New Delhi, 1976, p 55-56.
 20. Home Political, Sept 1920, No 23, National Archive of India, New Delhi
 21. Home Political Deposit, September, 1920, No 23, National Archives of India, New Delhi; Report of Commissioners, Vol I, New Delhi.
 22. Report of Commissioners, Vol I, New Delhi, p 105
 23. http://www.sscnet.ucla.edu/southasia/History/British/Crawling.html
 24. Collett, Nigel (2006). The Butcher of Amritsar: General Reginald Dyer. Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781852855758.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசினால்டு_டையர்&oldid=3403657" இலிருந்து மீள்விக்கப்பட்டது