செர்டாங் மருத்துவமனை
செர்டாங் மருத்துவமனை அல்லது செர்டாங் சுல்தான் இட்ரிஸ் சா மருத்துவமனை (மலாய்: Hospital Sultan Idris Shah Serdang; ஆங்கிலம்: Serdang Hospital அல்லது Sultan Idris Shah Serdang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம், பாங்கி புறநகர்ப் பகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஆகும்.
அமைவிடம் | பூச்சோங் சாலை, காஜாங், சிலாங்கூர் Jalan Puchong, Kajang, Selangor, காஜாங், சிலாங்கூர் மலேசியா, |
---|---|
ஆள்கூறுகள் | 2°58′36″N 101°43′13″E / 2.97667°N 101.72028°E |
மருத்துவப்பணி | பொது மருத்துவச் சேவை |
நிதி மூலதனம் | மலேசிய அரசு நிதியுதவி |
வகை | மாவட்ட மருத்துவமனை |
இணைப்புப் பல்கலைக்கழகம் | மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் சைபர்ஜெயா பல்கலைக்கழகம் கோலாலம்பூர் பல்கலைக்கழகம் |
அவசரப் பிரிவு | 24 மணி நேர சேவை |
படுக்கைகள் | 763 |
நிறுவல் | 2006 |
வேறு இணைப்புகள் | மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் |
சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, காஜாங், பாங்கி, சிப்பாங், செரி கெம்பாங்கான், புத்ராஜெயா, சைபர்ஜெயா பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது. 8 மே 2023 அன்று, சுல்தான் சராபுதீன் இட்ரிஸ் சா அவர்களின் பெயரால் சுல்தான் இட்ரிஸ் சா செர்டாங் மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டது.[1]
பொது
தொகுஇந்த மருத்துவமனையின் கிழக்கில் தென் கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (South Klang Valley Expressway) (SKVE); மேற்கில் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (UPM) மருத்துவப் பயிற்சி மருத்துவமனை ஆகியவை உள்ளன. மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு வழித்தடம் வழியாகப் பயணிக்கும் போது, காஜாங் சந்திப்பில் (Kajang Interchange) செர்டாங் மருத்துவமனையைக் காண முடியும்.
செர்டாங் மருத்துவமனை, 15 டிசம்பர் 2005-இல் செயல்படத் தொடங்கியது. செர்டாங், புத்ராஜெயா, காஜாங் மற்றும் பாங்கியில் உள்ள ஏறக்குறைய 570,000 மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. 129,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மருத்துவமனை 620 படுக்கைகளைக் கொண்டுள்ளது.
நவீனத் தொழில்நுட்ப அமைப்பு
தொகுமலேசிய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட மின்னணு மருத்துவமனை அமைப்பில் (Electronic Hospital Networks) ஒன்றாகக் கருதப்படும் இந்த மருத்துவமனையைக் கட்டுவதற்கு RM 690 மில்லியன் ரிங்கிட் செலவானது. 'மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு' (Total Hospital Information System) எனும் நவீனத் தொழில்நுட்ப அமைப்பை இந்த மருத்துவமனை பயன்படுத்துகிறது.
திட்டமிடல் முதல் கட்டுமானம் வரையில், 'எதிர்கால மருத்துவமனை' என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டது. பளபளப்பான வெளிப்புறத் தோற்றத்தைக் கொடுப்பதற்காக அலுமினியப் பூச்சுகளைப் பயன்படுத்திய முதல் மலேசிய மருத்துவமனை என அறியப்படுகிறது. மற்றும் வெப்பநிலையைப் பராமரிக்கவும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கவும் நவீனக் குளிரூட்டும் முறையைப் பயன்படுத்தும் மலேசியாவின் முதல் மருத்துவமனை எனவும் அறியப்படுகிறது. [2]
புள்ளி விவரங்கள்
தொகு- எஃகு கட்டுமான அமைப்பு (6100 டன்கள்)[3]
- நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் - (Modular Operation Theatre)
- மேல்தளக் கூரைத் தோட்டம் (5 ஏக்கர்)
- 45 ஏக்கர் பரப்பளவில் நோயாளிகள் பூங்கா
- 20 அறுவை சிகிச்சை அரங்குகள்
- 19 நோயாளிகள் தங்கும் வார்டுகள்
- 620 படுக்கைகள்
முகவரி
தொகுHospital Sultan Idris Shah Serdang
Jalan Puchong, 43000 Kajang, Selangor
Tel : +603-8947 5555
Emel : hsis@moh.gov.my
இணையத் தளம்: jknselangor
காட்சியகம்
தொகு-
இதய சிகிச்சை மையம்
-
இதய சிகிச்சை மையம் 2
-
பயிற்சி மருத்துவமனை
-
பொதுத் தோற்றம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hospital Serdang renamed Hospital Sultan Idris Shah Serdang". The Star. 8 May 2023 இம் மூலத்தில் இருந்து 2023-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230602224458/https://www.thestar.com.my/news/nation/2023/05/08/hospital-serdang-renamed-hospital-sultan-idris-shah-serdang.
- ↑ "Sultan Idris Shah Serdang Hospital heavily relies on information technology and uses the 'Total Hospital Information System'". jknselangor.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 18 July 2024.
- ↑ "Pengenalan". Hospital Serdang. Archived from the original on 16 October 2022. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Serdang Hospital தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Ministry of Health, Malaysia