ஜகதாத்ரி (Jagadhatri , பெங்காலி : জগদ্ধাত্রী, Devanagri : जगद्धात्री, ஒடியா : ଜଗଦ୍ଧାତ୍ରୀ, 'உலகினைத் தாங்குபவர்'[1]) என்பது இந்து மதத்தில் வணங்கப்படும் துர்கா தேவியின் ஒரு அம்சமாகும். குறிப்பாக இந்திய மாநிலங்களில் மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய பகுதிகளில் இவர் வணங்கப்படுகிறார்.[2] அவரது வழிபாட்டு முறை தாந்திரீகத்திலிருந்து நேரடியாகப் பெறப்படுகிறது.[3] அவள் சத்துவ குணத்தின் ஒரு சின்னமாக வணங்கப்படுகிறாள். துர்காவும் காளியும் முறையே இராட்சத குணம் மற்றும் தாமச குணங்களின் சின்னங்களாக தத்துவங்களில் வணங்கப்படுகிறார்கள்.[3]  

ஜகதாத்ரி

தோற்றம்

தொகு

ஜகதாத்ரி காலைச் சூரியனின் நிறத்தில்காட்சி தருபவள், மூன்று கண்கள் கொண்டவள்; நான்கு ஆயுதங்களான, சக்கரம், சங்கு, வில் மற்றும் அம்புகளை வைத்திருக்கிறாள். சிவப்பு, பிரகாசமான நகைகளும் பாம்பினை முப்புரி நூலாகவும் தரித்தவள்; (புனித நூலாக ஒரு பாம்பு யோகா மற்றும் பிரம்மத்தின்.ஒரு அடையாளமாக சித்தரிக்கப்படுகிறது) அவள் யானை அரக்கனான கரிந்திரசூரன் மீது நின்று கொண்டிருப்பவள்:[1] சிங்கத்தின் மீது சவாரி செய்கிறாள்; "ஜகதாத்ரி, மனம் என்று அழைக்கப்படும் வெறித்தனமான யானையை கட்டுப்படுத்தக்கூடியவளாக ஒரு நபரின் இதயத்தில் எழுகிறாள்." என ராமகிருஷ்ணர் கூறுகிறார்.[2] லலிதா சகஸ்ர நாமத்தில் 173 ஆம் பாடலில் லலிதாம்பிகை ”ஜகதாத்ரீ” என அழைக்கப்படுகிறார்.[4]

மகிசாசுர அரக்கனைக் கொல்ல துர்கா தெய்வத்தை உருவாக்கிய பிறகு இந்திரன், வருணன், வாயு மற்றும் பிற கடவுள்கள் அனைவரும் அகந்தையால் தங்களை மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று நினைத்தார்கள். அவர்கள் எல்லாம் வல்லவர் என்றும் தங்கள் சக்தியால் எதையும் செய்ய முடியும் என்றும் நினைத்தார்கள். எனவே அவர்களில் உண்மையான சக்தி யார் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எனவே ஆதி சக்தி அவர்களை சோதனை செய்ய எண்ணியது. அவள் அவர்கள் முன் மாயா என்ற தோற்றத்தில் தோன்றினாள். அவர்களுக்கு முன்னே ஒரு புல் உருவாக்கப்பட்டது. அவள், "ஓ வலிமைமிக்க தேவர்களே தயவுசெய்து அந்தப் புல்லை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றாள். அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள், பின்னர் இந்திரன் அனுப்பிய வாயு புல்லை வெளியே எடுக்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். இந்திரன், வருணன், அக்னி தேவன் என ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொருவராக முயற்சி செய்து தோல்வியடைந்தனர். பின்னர் மாயா வடிவில் வந்த ஆதி சக்தி தேவி அவர்கள் முன் வந்து இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சக்தியும் அவளுடையதே என்று சொன்னார். அவள் முழு உலகத்தின் சக்தி. எனவே எல்லா கடவுள்களும் தங்கள் தவறை புரிந்து கொண்டனர். ஜகதாத்ரி தேவி ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி அவர்களுக்குக் காட்சியளித்தார். அவர்களின் அகந்தை ஒரு யானையாக மாறியது.[3] எனவே தான் நாம் காணும் ஜகதாத்ரி தேவி ஒரு சிங்கம் மற்றும் ஒரு யானை மீது அமர்ந்திருக்கிறாள்.

ஜகதாத்ரி பூஜை

தொகு
 
கிருஷ்ணநகர் ராயல் பேலஸில் ஜகதத்ரி பூஜை

ஜகதாத்ரி பூஜை முதன்முதலில் வங்காளத்தின் நதியா மாவட்டம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த மகாராஜா கிருஷ்ணச்சந்திரரால் தொடங்கப்பட்டது. இப்பூஜை தெகத்தா, ரிஷ்ரா, சந்தன்நகர், பத்ரேஸ்வர், ஹூப்ளி, போயிஞ்சி, அசோக்நகர்-கல்யாண்கர், கிருஷ்ணாநகர், நாடியா, ராஜேஸ்வாரி ஆகிய பகுதிகளில் மிகவும் புகழ்பெற்றதாகும். ஜகதாத்ரி பூஜை வங்காளத்தின் பழமையான ஜகதாத்ரி பூஜைகளில் ஒன்றாகும். ஒருமுறை வங்காளத்தில் நவாப் ராச்சிய காலத்தில் மகாராஜா கிருஷ்ணச்சந்திர ராய் சரியான நேரத்தில் வரி செலுத்தாததற்காக நவாப் சிராஜ்-உத்-துல்லாவால் கைது செய்யப்பட்டார் என்பது புராணக்கதை. விஜய தசாமி நாளில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், இதன் காரணமாக அவரது ராச்சியத்தில் துர்கா பூஜையின் முழு விழாவும் கெட்டுப்போனது, எனவே மகாராஜா மீண்டும் மகிழ்ச்சியடைய இந்த ஜகதாத்ரி பூஜையின் சடங்கைத் தொடங்கினார். மாலோபரா பரோவரியில் மா ஜலேஸ்வரி என்று அழைக்கப்படும் ஜகதாத்ரி பூஜை, மகாராஜா கிருஷ்ணசந்திராவால் நன்கொடைஅளிக்கப்படுவதற்கு முன், முதன்மையாக ராஜமாதாவான ராஜ ராஜேஸ்வரியால் பெங்காலி மொழியில் செய்யப்பட்டது

 
சந்தன்நகர் நவமி பூஜை நாளில் ஜகதாத்ரி தேவி

கார்த்திகை மாத சுக்லபட்ச சப்தமி நாளில் இப்பூஜை தொடங்கப்படுகிறது.[1]

சந்தனநகரில் திருவிழாவின் அழகு முக்கியமாக பிரெஞ்சு மற்றும் வங்காளிகளுக்கு இடையிலான ஒற்றுமையைக் கருத்தாகக் கொண்டதாகும். ரியோ டி ஜெனிரோவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய ஊர்வலமாக ஜகதாத்ரி பூஜை விளங்குகிறது. அதன் ஊர்வலத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக, அதன் அற்புதமான விளக்குகளுடன் செல்லும் ஊர்வலத்தைக் குறிப்பிடுகிறார்கள் [5] நவம்பர் 21 முதல் தொடங்கப்பட்டது. ஆனால் மேளா நவம்பர் 26 முதல் டிசம்பர் 7 வரை தொடர்ந்தது . துர்கா பூஜை தனது 60 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக வைர விழாவை கொண்டாடியது போல முதல் முறையாக இது 13 நாட்கள் நீண்டது.

2013 ஆம் ஆண்டில், சர்வஜனினா மா ஜகதத்ரி பூஜை நவம்பர் 11 முதல் தொடங்கப்பட்டது. ஆனால் ஒடிசாவின் இழப்பை நினைவுகூரும் வகையில், குறிப்பாக மயூர்பஞ்ச் மாவட்டம் மற்றும் பாரிபாடா பைலின் பைலின் வெள்ளம் காரணமாக, இந்த (2013) ஆண்டின் ஜகதாத்ரி பூஜையில், கலாச்சார நிகழ்ச்சிகள் அல்லது நேரடி ஒளிபரப்பு இடம்பெறவில்லை. ஆனால் மேளா 2013 நவம்பர் 14 முதல் 25 வரை தொடர்ந்தது.

நுழைவு வாயில்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் அதன் முக்கிய ஈர்ப்பு இதற்காக அலங்கரிக்கப்படும் பூஜை தோரணங்களும் (நுழைவுவாயில்) அலங்கார அணிகளும் ஆகும் இவை ஒரு பிரபலமான நினைவுச்சின்னமாக அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளன. 2011 இல் அமெரிக்காவின் சட்டமன்றக் கட்டிடத்தின் ஒரு மினியேச்சராக இது இருந்தது. 2012 இ இது மைசூர் லலிதா மஹால் . 2000 ஆம் ஆண்டு முதல் தோரணாவை ஒரு சிறப்பு உள்கட்டமைப்பாக அலங்கரிப்பது ஒரு பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. தாஜ்மஹால், விக்டோரியா மெமோரியல் (இந்தியா), டைட்டானிக் கப்பல்; தாமரை கோயில், புது தில்லி ; 2000 முதல் 2006 வரையிலான முந்தைய ஆண்டுகளில் பொற்கோயில், போன்றவை பிரதிபலிக்கப்பட்டன. 26/11 இல் மும்பை தாக்குதலுக்கு உள்ளான தாஜ்மஹால் பேலஸ் மற்றும் டவர் விடுதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2009 ஆம் ஆண்டின் தோரண வாயில் அந்த விடுதியின் தோற்றமாக இருந்தது.

குறிப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதாத்ரி&oldid=3710570" இலிருந்து மீள்விக்கப்பட்டது