ஜமாலியா (சென்னை)

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

ஜமாலியா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இவ்வூர், இரயில் பெட்டிகள் தயாரிக்கும் பெரம்பூர் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே உள்ளதால், இங்குள்ள மக்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜமாலியா மேனிலைப் பள்ளிக்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை கால்பந்து விளையாட்டு மைதானம் ஆக்க நடவடிக்கை எடுக்க, இவ்வூர் அடங்கிய சட்டமன்றத் தொகுதியான திரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராக உள்ள தாயகம் கவி தமிழக சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.[1] அதற்கு பதிலளித்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கின்ற சிவ. வீ. மெய்யநாதன் திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதியின் ஜமாலியாவில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முசுலிம் மக்களும் இங்கு அதிகம் வாழ்கின்றனர். இந்துக் கோயில்கள், ஜமாலியா பள்ளிவாசல், கிறித்தவ ஆலயங்கள் (வாட்டர்பரி நினைவு தெலுங்கு பாப்தித்து தேவாலயம், மலபார் தனித்த சிரியன் செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், T.E.L.C. பெத்தேல் தேவாலயம் உட்பட) என எல்லா மதத்தினரும் வழிபாடு செய்ய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இங்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால், அவற்றை ஆய்வு செய்ய, தமிழக அமைச்சர்கள் மற்றும் மாநகர மேயர், அதிகாரிகள் அடங்கிய குழு கண்காணிப்பு மேற்கொண்டது.[2] ஜமாலியாவில் கூக்ஸ் மற்றும் ஸ்டீஃபன்சன் சாலைகள் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் சென்னையின் அதிஉயர கட்டடமான SPR Highliving District Towers, வசிப்பிடங்கள் மற்றும் வணிகங்கள் சார்ந்த கட்டடங்கள் என்றளவிலும், சென்னையின் உயரமான கட்டடங்கள் வரிசையில் முதலிடம் என்றளவிலும் இருக்கும். ஸ்டீஃபன்சன் சாலையிலிருக்கும் 'நார்த் டவுன்' அடுக்கு மாடி குடியிருப்புகள், ஒரு கோயிலையும் உள்ளே கொண்டுள்ளன.

ஜமாலியா (சென்னை)
ஜமாலியா
புறநகர்ப் பகுதி
ஜமாலியா (சென்னை) is located in சென்னை
ஜமாலியா (சென்னை)
ஜமாலியா (சென்னை)
ஜமாலியா (சென்னை) is located in தமிழ் நாடு
ஜமாலியா (சென்னை)
ஜமாலியா (சென்னை)
ஜமாலியா (சென்னை) is located in இந்தியா
ஜமாலியா (சென்னை)
ஜமாலியா (சென்னை)
ஆள்கூறுகள்: 13°06′17.3″N 80°15′11.9″E / 13.104806°N 80.253306°E / 13.104806; 80.253306
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்
28 m (92 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600012
தொலைபேசி குறியீடு044xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, புரசைவாக்கம், செம்பியம், ஜவஹர் நகர்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவடசென்னை
சட்டமன்றத் தொகுதிதிரு. வி. க. நகர்
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்தாயகம் கவி
இணையதளம்https://chennaicorporation.gov.in

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் உயரத்தில், 13°06'17.3"N 80°15'11.9"E என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது, ஜமாலியா.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் ஆகிய ஊர்களுக்கும், அவ்வழியே எழும்பூர், கீழ்ப்பாக்கம், வியாசர்பாடி, மூலக்கடை, மாதவரம், பாரிமுனை, சென்னை மத்திய தொடருந்து நிலையம், சென்னை மத்திய மெட்ரோ நிலையம், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் மற்றுமுள்ள அனைத்து இடங்களுக்கும் செல்ல ஜமாலியா வழியாகப் பயணிக்க, பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன. பெரம்பூருக்கு அருகில் ஜமாலியா அமைந்துள்ளதால், பெரம்பூருக்கும் அவ்வழியே செல்லும் மற்ற ஊர்களுக்கும் ஜமாலியா வழியாகப் பயணிக்க வேண்டும். பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு), கூக்ஸ் சாலை, ஸ்டீஃபன்சன் சாலை ஆகியவை முக்கியமான சாலைகள். முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூரிலிருந்து ஜமாலியா வந்து செல்ல இணைப்புப் பாலமாகும். வாகனங்கள் எரிபொருட்கள் நிரப்ப வசதியாக Propel (Indian oil Petronos) Auto LPG நிலையம் மற்றும் நயாரா பெட்ரோல் நிலையமும் உள்ளன.

தொடருந்து போக்குவரத்து

தொகு

பெரம்பூர் தொடருந்து நிலையம் மற்றும் வியாசர்பாடி ஜீவா தொடர் வண்டி நிலையம் ஆகிய மிக அருகிலுள்ள இரயில் நிலையங்கள் மூலம் சென்னை மற்றும் தொலைதூர ஊர்களுக்கும் பயணிக்கும் வசதிகள் உள்ளன. மேலும், சென்னை மத்திய மெட்ரோ நிலையம், சென்னை மத்திய தொடருந்து நிலையம், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், சென்னை பூங்கா தொடருந்து நிலையம்]], நேரு பூங்கா மெட்ரோ நிலையம் ஆகிய இரயில் நிலையங்கள் செல்வதற்கும் தொடருந்து வசதிகள் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து விமான நிலையம் செல்லவும், பேருந்து மற்றும் தொடருந்து போக்குவரத்து வசதிகள் அதிகமுள்ளன.

கல்வி

தொகு

பள்ளிகள்

தொகு

சென்னை மாநகராட்சி பெண்கள் பள்ளி, ஜமாலியா மேனிலைப் பள்ளி, எவர்வின் வித்யாஷ்ரம், ஹைதர் கார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சனா ஸ்மார்ட் பள்ளி ஆகிய பள்ளிகள் இவ்வூர் மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன.

கல்லூரி

தொகு

இங்கு அமைந்துள்ள ஜமாலியா அரபிக் கல்லூரி மூலம் ஜமாலியா வாழ் முசுலிம்கள் பயன்பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ வசதிகள்

தொகு

இங்குள்ள குறிப்பிடத்தக்க மருத்துவமனைகள்:

    • ஜூலியன் மருத்துவமனை
    • பேகம் சஃபியா நஸீர் ஹூசைன் மருத்துவமனை
    • டாக்டர். ஷப்பீர் உயர் சிறப்பு பல் மருத்துவமனை

பொழுதுபோக்கு

தொகு

பூங்காக்கள்

தொகு

இராஜீவ் காந்தி பூங்கா, இங்குள்ள மக்களுக்கு பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தாலும், ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பலவித வசதிகளுடன் கூடிய முரசொலி மாறன் பூங்காவிற்கு இங்கிருந்து செல்லும் மக்களே அதிகம்.

விளையாட்டு மைதானம்

தொகு

சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. கால்பந்து விளையாட்டு மைதானம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமாலியா_(சென்னை)&oldid=3787830" இலிருந்து மீள்விக்கப்பட்டது