ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம்
ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்க்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.
பின்னணி
தொகுஇந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைக்குப் பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில் நகர்ப்புறங்களில் மட்டும் 28 கோடி (அதாவது ஏறக்குறைய 28 சதவிகிதமாக) இருந்தது. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்குள் இது 40 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் அப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நகர்புறங்களின் பங்களிப்பு 69 சதவிகிதம் இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நகர்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதும் அவசிமெனக் கருதிய இந்திய அரசு நகர்புற மேம்பட்டுக்கான திட்டத்தை வகுத்தது.
திட்டத்தின் நோக்கம்
தொகு- தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.
- பயன்பெறும் நகரங்களில் புதிய சொத்துக்களை உருவாக்கி நிர்வகிப்பதில் ஒரு உட்தொடர்பை ஏற்படுத்துவதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் எக்காலத்திலும் வலுவிழந்துவிடாத வகையில் சுயசார்புடையதாக மாற்றுவதற்கு உதவிபுரிதல்.
- நகரில் நிரந்தரமாக இருந்து வரும் நெரிசல்களை சமாளிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல். தேவையானால் நிதியுதவி வழங்குதல்.
பயனடையும் நகரங்களை தேர்ந்தெடுக்கும் முறைகள்
தொகு2001ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாற்பது லட்சத்திற்குள் மேலாக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'A' பிரிவு பெருநகரங்களாக, ஒன்றிலிருந்து நான்கு லட்சம் வரையுள்ள நகரங்கள் 'B' பிரிவு நகரங்களாகவும் அடையளப்படுத்தப்பட்டுகின்றன. இவை தவிர மாநில தலைநகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியான நகரங்கள் ஆகும். இவ்வகை நகரங்கள் 'C' பிரிவாக கருதப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நகரங்கள் மற்றும் பெருநகரங்கள்
தொகுஇந்த திட்டத்தின்படி மக்கள் தொகை நாற்பது லட்சத்திற்குள் மேலாக உள்ள நகரங்கள் பெருநகரங்களாக அடையளப்படுத்தப்பட்டுகின்றன. அந்த அடிப்படையில் கீழே உள்ள நகரங்கள் அதிக நிதி ஒதுக்கீட்டை பெற தகுதியான பெருநகரங்கள் ஆகும்.