ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை
ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை (Jaipur Zoo) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவாகும்.
ஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை | |
---|---|
26°54′44″N 75°49′17″E / 26.9122356°N 75.8214355°E | |
திறக்கப்பட்ட தேதி | 1877[1] |
அமைவிடம் | ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா |
நிலப்பரப்பளவு | 35 ஏக்கர் |
விலங்குகளின் எண்ணிக்கை | சுமார் 550 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 50 |
உறுப்புத்துவங்கள் | மத்திய விலங்கு காட்சியக ஆணையம்[2] |
பின்னணி
தொகுஜெய்ப்பூர் விலங்குக் காட்சிச்சாலை 1877-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் திறக்கப்பட்டது. இது ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகம் மற்றும் ராம் நிவாஸ் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ஒரு பகுதியில் பாலூட்டிகளும் மற்றொன்றில் பறவைகள் மற்றும் ஊர்வனவும் உள்ளன. உலகம் முழுவதிலுமிருந்தும் கொண்டுவரப்பட்ட சுமார் 50 வகையான பறவைகள் மற்றும் விலங்குகளை இங்குக் காணலாம். 1999ஆம் ஆண்டில், சொம்புமூக்கு முதலை வளர்ப்பு பண்ணை நிறுவப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது பெரிய வளர்ப்பு பண்ணையாகும். ராஜஸ்தானின் வனவிலங்குகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமும் மிருகக்காட்சிசாலைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் தேசிய முயற்சியை நிறைவு செய்வதே இந்த மிருகக்காட்சிசாலை அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். 2018ஆம் ஆண்டில், உயிரியல் பூங்கா அதிக எண்ணிக்கை கொண்ட பறவை பூங்காவாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து பெரிய மாமிச உண்ணிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டன.
காட்சி விலங்குகள்
தொகுஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 550 விலங்குகள் உள்ளன. இவற்றில் சில:
பாலூட்டிகள்
தொகு- கருஞ்சிறுத்தை (1)
- சிறுத்தை (3)
- நரி (11)
- குள்ளநரி (3)
- கழுதைப்புலி (3)
- ஓநாய் (10)
- இந்திய புணுகுப்பூனை (4)
- குரங்கு (2)
- பபூன் (1)
- ஆசியக் கறுப்புக் கரடி (6)
- இமயமலை கருப்புக் கரடி (7)
- காட்டுப்பன்றி
- புல்வாய் (43)
- கடமான் (11)
- புள்ளிமான் (84)
- இந்தியச் சிறுமான் (2)
- பன்றி மான் (17)
- கேளையாடு (11)
- இந்திய முள்ளம்பன்றி (4)
- முயல் (6)
பறவைகள்
தொகு- மயில் (24)
- காதல் பறவை (43)
- கூழைக்கடா (5)
- ஈமியூ (18)
- ஆந்தை (1)
- வாத்து (60)
- கிளி (35)
- அரிவாள் மூக்கன் (4)
- டீட்டர் (7)
- கின்னிக்கோழி (1)
- பூநாரை (5)
- கழுகு (1)
- கொக்கு (1)
- பெசண்ட் (7)
- கொண்டைக்கிளி (1)
- மஞ்சள் மூக்கு நாரை (4)
- செங்கால் நாரை (2)
- வாத்து (5)
- காதற்கிளி (64)
ஊர்வன
தொகு- இந்திய மலைப் பாம்பு (1)
- யூனெக்டெசு நோட்டேயசு (1)
- சொம்புமூக்கு முதலை (52)
- முதலை (11)
- ஆமை (23)
- நிலஆமை (14)
பாதுகாப்பு இனப்பெருக்கம் திட்டங்கள்
தொகுஇந்த மிருகக்காட்சிசாலையானது, மத்திய விலங்கு காட்சியக ஆணையம் மற்றும் ராஜஸ்தான் அரசாங்கத்தின் காரியால், சீட்டல் மற்றும் முதலைகளின் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
சம்பவங்கள்
தொகு- 2010ஆம் ஆண்டில், கடுமையான குளிர் காரணமாக பதினொன்று புள்ளி மான்கள் இறந்தன. சந்தேகத்திற்கிடமான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மான் சனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் உயிரிழந்தது.
- 2013 அக்டோபரில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அரியவகை வெள்ளைப் புலி உயிரியல் பூங்காவில் இறந்தது. ஏழு வயது மாதவ் உணவை மறுத்த 13 நாட்களுக்குப் பிறகு இது நடந்தது.
மேலும் பார்க்கவும்
தொகு- ராஜஸ்தானின் வனவிலங்குகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com. Kuchbhi. Archived from the original on 21 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
- ↑ "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.