ஜெர்டன் பாறு

ஜெர்டன் பாறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
அ. ஜெர்டோனி
இருசொற் பெயரீடு
அவிசெடா ஜெர்டோனி
(பிளைத், 1842)

ஜெர்டன் பாறு (Jerdon's baza)(அவிசெடா ஜெர்டோனி ) என்பது ஒரு மிதமான அளவிலான பழுப்பு நிற பருந்து ஆகும். இது ஒரு மெல்லிய வெள்ளை-முனை கருப்பு முகடு பொதுவாக நிமிர்ந்து இருக்கும்.[2] இது தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. இது தெராய் மலையடிவாரத்தில் வாழ்கிறது. மேலும் இவை பசுமையான காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் அரிதாகவே காணப்படுகிறது.[2]

இதன் பொதுவான பெயர் மற்றும் இலத்தீன் இருசொற்கள் அறுவை சிகிச்சை நிபுணர் தாமஸ் சி. ஜெர்டனை நினைவுபடுத்துகின்றன.[3]

விளக்கம்

தொகு

ஜெர்டன் பாறுவின் உடல் நீளம் சுமார் 46 செ.மீ. ஆகும். இதனைக் கொண்டை வல்லூறு அல்லது குடுமிப் பருந்துடன் இனங்காண்பதில் குழப்பமடையக்கூடாது. நீண்ட நேரான முகடு, மிகவும் பரந்த மற்றும் வட்டமான துடுப்பு வடிவ இறக்கைகள்[2] மற்றும் பெரும்பாலும் நிறமற்ற வெளிறிய அடிப்பகுதிகளால் இவை வேறுபடுத்தப்படுகிறது. இது வெள்ளை கன்னம் மற்றும் தடித்த கருப்பு நிற உடலின் மையப்பகுதியில் பட்டை ஒன்றைக் கொண்டது.[4]

பல துணையினங்கள் இதன் பரவலான வரம்பிற்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் அடங்கும் துணையினங்கள்:[5]

பரவல்

தொகு

ஜெர்டன் பாறு வட இந்தியாவின் தெராய் மற்றும் கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் கிழக்கு நேபாளம் மற்றும் வங்காள தெராயிலிருந்து அசாம் பள்ளத்தாக்கு, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், இலங்கை, வங்காளதேசம்,[6][7] மியான்மர், தாய்லாந்து,[4] சுமத்ரா,[8] சிங்கப்பூர்[9] மற்றும் பிலிப்பீன்சு[10] வாழ்கின்றது.

பழக்கவழக்கங்கள்

தொகு

ஜெர்டன் பாறு பொதுவாக இணையாகப் பறந்துகொண்டே இறைகளைப் பிடிக்க வல்லது. எப்போதாவது, 3 முதல் 5 பறவைகள் வரை குடும்பமாகக் காடுகளின் ஓரங்களில் காணப்படும்.[4] பறவைகள் கூட்டின் அருகே 'உயர்ந்து மற்றும் அலையடிக்கும்' காட்சிகளில் பறக்கும்போது ஈடுபடுகின்றன.[2] இனவிருத்தி காலம் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களைத் தவிர்த்து ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும்.[4] உணவில் பல்லிகள், வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பெரிய பூச்சிகள் அடங்கும். குர்சியோங்கில் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியின் வயிற்று உள்ளடக்கங்களில் அகமிட் பல்லி, ஜபாலுரா வேரிகாட்டா, பல நீளமான வண்டுகள் மற்றும் கும்பிடுபூச்சி ஆகியவை இருந்துள்ளன.[11]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2020). "Aviceda jerdoni". IUCN Red List of Threatened Species 2020: e.T22694956A181759887. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22694956A181759887.en. https://www.iucnredlist.org/species/22694956/181759887. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 Rasmussen, PC & Anderton JC 2005.
  3. Beolens, Bo (2003). Whose Bird? Men and Women Commemorated in the Common Names of Birds. Christopher Helm.
  4. 4.0 4.1 4.2 4.3 Ali, S & Ripley, SD 1983.
  5. Peters, James Lee (1931). Check-list of birds of the world. Volume 1. Cambridge: Harvard University Press. pp. 195–196.
  6. Bird Checklist of Bangladesh from the Website of Bangladesh Biodiversity Research Group Link பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  7. Buij, R. 2003 Breeding behaviour of Jerdon’s Baza Aviceda jerdoni at Gunung Leuser National Park, Sumatra, Indonesia: the first nesting record for Sumatra.
  8. Buij, R. 2003 Breeding behaviour of Jerdon’s Baza Aviceda jerdoni at Gunung Leuser National Park, Sumatra, Indonesia: the first nesting record for Sumatra.
  9. Chan, YM, Wang, LK & We, YC (2007) Jerdon's Baza Aviceda jerdoni in Singapore.
  10. del Hoyo, J., Elliot, A. and Sargatal, J. (1994) Handbook of the birds of the world.
  11. D'abreu ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்டன்_பாறு&oldid=3812048" இலிருந்து மீள்விக்கப்பட்டது