ஞானதாநந்தினி தேவி

ஞானதாநந்தினி தாகூர் (முகோபாத்யா) (1850 சூலை 26 -1941 அக்டோபர் 1) இவர் ஓர் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் பல்வேறு கலாச்சார கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக இருந்தார் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் வங்காளத்தில் பெண்கள் அதிகாரம்பெறுவதற்கான ஆரம்ப கட்டம் இவரால் வழிநடத்தப்பட்டது. இவர் ஜோராசங்கோ தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த சத்யேந்திரநாத் தாகூரை மணந்தார்.

ஞானதாநந்தினி தாகூர்
Jnanadanandini Devi.JPG
பிறப்புசூலை 26, 1850(1850-07-26)
நரேந்திரபூர், ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம்
(தற்போதைய வங்காளதேசம்)
இறப்பு1 அக்டோபர் 1941(1941-10-01) (அகவை 91)
பணிசமூக சீர்திருத்தவாதி
வாழ்க்கைத்
துணை
சத்யேந்திரநாத் தாகூர்

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

வங்காள மாகாணத்தின் ஜெஸ்சூர் நகரில் உள்ள நரேந்திரபூர் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களான அபய்ச்சரண் முகோபாத்யாய் மற்றும் நிசுதாரினி தேவி ஆகியோருக்கு ஞானதாநந்தினி பிறந்தார். அப்போது. நடைமுறையில் இருந்த வழக்கப்படி, ஞானதாநந்தினி ஏழு அல்லது எட்டு வயதில் தேபேந்திரநாத் தாகூரின் இரண்டாவது மகன் சத்யேந்திரநாத்தை 1857இல் திருமணம் செய்து கொண்டார்.[1] ஜெசோரில் தனது சுதந்திரமான வாழ்க்கைக்கு மாறாக, ஜோராசங்கோவில் உள்ள தாகூர் குடும்பத்தின் கண்டிப்பான பர்தாவின் பின்னால் தன்னை அடைத்து வைத்திருந்தார். [2] 1862ஆம் ஆண்டில், இந்திய ஆட்சிப் பணியில் தனது பயிற்சியிலிருக்கும்போது, சத்யேந்திரநாத் ஞானதாநந்தினியை தன்னுடன் இங்கிலாந்து அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவரது தந்தை தேபேந்திரநாத் தாகூர் இதை நிராகரித்தார். [3] இந்த நேரத்தில், ஞானதானந்தினியின் மைத்துனர் ஹேமேந்திரநாத் தாகூர் இவரது கல்விப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரபல பிரம்மக் கல்வியாளர் [4] அயோத்தியநாத் பக்ராசி அவர்களிடம் சிலகாலம் சுருக்கமாகப் பயிற்றுவிக்கப்பட்டார். [5] இந்திய ஆட்சிப்பணியின் முதல் இந்தியரான சத்யேந்திரநாத் 1864இல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியதும், ஞானதானந்தினி தனது கணவருடன் மும்பையில் வசிக்கச் சென்றார். [6]

மும்பைதொகு

மும்பையில் இருந்தபோது, ஞானதானந்தினி ஐரோப்பிய வட்டாரங்களில் சமூகமயமாக்கப்பட்டு ஓரளவு ஆங்கில பழக்கவழக்கங்களுக்கு மாறினார். சமூகப் பாத்திரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு அவர் சரியான ஆடை அணிய வேண்டியிருந்தது, இதற்காக பாரம்பரியமான பெங்காலி பாணியிலான புடவை அணிவது மிகவும் அரிதாகியது. [7] தனது கணவருடன் குசராத் சுற்றுப்பயணத்தின் போது, ஞானதானந்தினி பார்சி பெண்கள் அணியும் புடவையை மேம்படுத்தினார். [8] இவர் தனது பாணியில் புடவை அணிய மற்ற பெண்களுக்கு பயிற்சியளிப்பதற்காக மாதாந்திர இதழான [9] பமபோதினி பத்திரிக்கையில்] விளம்பரம் செய்தார். கொல்கத்தாவில் இவரது முதல் மாணவர்களில் ஒருவரான இந்திய ஆட்சிப் பணியாளரான பெகாரி லால் குப்தாவின் மனைவி திருமதி சௌதாமினி குப்தா இருந்தார். [10] இந்த பாணி விரைவில் கொல்கத்தாவின் பிரம்ம பெண்கள் மத்தியில் பிரம்மிகா புடவை என்ற பெயரை உருவாக்கியது. [11] கொல்கத்தாவில் இருந்தபோது, உயர் சாதியினரின் பழக்கவழக்கங்களை மீறி ஞானதானந்தினி, தனது கணவருடன் 1866இல் இந்தியாவின் தலைமை ஆளுநர் பிரபு லாரன்ஸ் என்பவரது அழைப்பின் பேரில் நடைபெற்ற ஒரு கிறிஸ்துமஸ் விருந்துக்கு சென்றார். அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான பதுரியகட்டாவைச் சேர்ந்த பிரசன்னா கூமர் தாகூர், ஞானதாநந்தினியின் தைரியத்தால் ஆத்திரமடைந்து, கோபத்தில் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறினார். [12] இவரது மாமனார், தேபேந்திரநாத் தாகூருக்கும் இவரது நடவடிக்கைகள் மனவருத்தத்தை அளித்தது. இதனால் தாகூர் குடும்பத்தில் பெரும் முரண்பாடு ஏற்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. [13] ஞானதானந்தினி 1868இல் ஜோராசங்கோவை விட்டு வெளியேறி, தேபேந்திரநாத்தின் இல்லத்தை ஒட்டியுள்ள பூங்கா தெருவில் உள்ள ஒரு மாளிகையில் தனியாக வசித்து வந்தார். அருகாமையில் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை. [14] இருப்பினும், இந்த நேரத்தில் இவர் தனது தம்பி இரவீந்திரநாத் தாகூர் மீது ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டார். தாகூர் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஞானதானந்தினி தனது கணவருடன் 1869இல் மும்பைக்கு திரும்பினார். அதே ஆண்டு பிறந்த சில நாட்களேயான தனது முதல் குழந்தையை இழந்தார். [15] ந்த இணை பூனாவில் வசித்து வந்தபோது, இவரது மகன், சுரேந்திரநாத் 1872ஆம் ஆண்டில் பிறந்தார். இ அடுத்த ஆண்டு, இவரது மகள் இந்திரா தேவி பிஜாப்பூரில் பிறந்தார். தைரியமாக, ஞானதானந்தினி ஒரு முஸ்லீம் பெண்ணை தனது குழந்தைகளுக்கு செவிலியராக நியமித்தார். [16] புதிதாகப் பிறந்த குழந்தைகளை செவிலியரின் பராமரிப்பிற்கு விட்டுவிடுவது   அன்றைய வசதியான இந்திய குடும்பங்களில் பொதுவான நடைமுறையாக இருந்தது. [17] இருப்பினும், ஞானதானந்தினி தனது குழந்தைகளை ஊழியர்களின் காவலில் வைப்பதை எதிர்த்தார்  . [18] இவரது மூன்றாவது மகன் கபீந்திரநாத் 1876இல் சிந்துவின் ஐதராபாத்தில் பிறந்தார். [19]

இங்கிலாந்துதொகு

1877ஆம் ஆண்டில், ஞானதானந்தினி தேவி தனது மூன்று குழந்தைகளுடன் இங்கிலாந்துக்கு பயணம் செய்தார். [20] அந்த காலத்தில் ஒரு இந்தியப் பெண் கடல் கடக்கும் செயல் - ஒரு ஆண் துணை இல்லாமல் - என்பது இவருடைய வலிமையை உணர்த்தியது. [21] இலண்டனில் இவரது கணவரின் மாமா ஞானேந்திரமோகன் தாகூர் இவரை வரவேற்றார். அவர் முதல் ஆசிய பாரிஸ்டர் மற்றும் ஒரு கிறிஸ்தவராக மதமாற்றம் செய்துகொண்டவராவார். [22] கென்சிங்டன் பூங்காவில் உள்ள ஞானேந்திரமோகன் தாகூரின் வீட்டில் சிறிது காலம் தங்கிய பின்னர், ஞானதானந்தினி சசெக்ஸின் கடற்கரை நகரமான பிரைட்டனில் ஒரு வீட்டிற்கு சென்றார். சத்யேந்திரநாத் 1878 அக்டோபரில் இவரது இளைய சகோதரர் இரவீந்திரநாத் தாகூருடன் இங்கிலாந்து வந்து இவருடன் சேர்ந்தார். [23] இங்கிலாந்தில் இவரது ஆரம்ப ஆண்டுகளில் இறந்தே பிறந்த ஒரு குழந்தை மற்றும் இவரது இளைய மகன் கபீந்திரநாத்தின் மறைவு ஆகியவற்றால் துக்கத்தால் சூழப்பட்டிருந்தது. இலண்டனில் உள்ள கென்சல் பசுமை கல்லறையில் துவாரகநாத் தாகூரின் கல்லறைக்கு அருகில் கபீந்திரநாத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். [24] இவரும் இவரது குழந்தைகளும் இரவீந்திரநாத்துடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டனர். [25] இவரது மகள் இந்திரா இறுதியில் இரவீந்திரநாத்தின் வாழ்நாள் நம்பிக்கைக்குரியவராக மாறினார். சத்யேந்திரநாத்தின் பயிற்சி முடிந்ததும், அவர் சூரத்தில் ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார் .அதே நேரத்தில் ஞானதானந்தினி தனது குழந்தைகளுடன் கொல்கத்தா திரும்பினார்.

கொல்கத்தாதொகு

 
நிற்பவர்கள் இடதிலிருந்து வலது: ஞானதானந்தினி தேவி, சத்யேந்திரநாத் தாகூர், காதம்பரி தேவி . அமர்ந்தவர்: ஜோதிரிந்திரநாத் தாகூர்

கொல்கத்தாவில், ஞானதானந்தினி கீழ் வட்டச் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வந்தார். ஆனாலும், இவரது மகள் இந்திரா மற்றும் மருமகள் சரளா தேவி சாதுராணி ஆகியோரின் நினைவுக் குறிப்புகளிலிருந்து, ஞானதானந்தினி ஒருபோதும் ஜோராசங்கோவுடனான தொடர்பை விட்டுவிடவில்லை என்பதை அறிகிறோம் . [26] [27] இரவீந்திரநாத்தின் திருமணத்தில் இவர் ஒரு சுறுசுறுப்பான பாத்திரத்தை வகித்தார். மேலும் இளம் மணமகள் மிருணாளினிக்கு வழிகாட்டினார். [28] காலப்போக்கில், இரவீந்திரநாத்துடனான இவரது உறவு அவரது படைப்பாற்றலின் களத்தில் பரவியது. ஞானதாநந்தினி அவரது நாடகங்களில் அவருக்கு உதவத் தொடங்கினார். பெரும்பாலும் மற்ற வீட்டு பெண்களை பங்கேற்க ஊக்குவித்தார். இதனால் வால்மீகி-பிரதிபா, கால்மிரிகாயா, ராஜா ஓ ராணி, மாயர் கேலா மற்றும் பிசார்ஜன் போன்றவை வெளியானது. [29] இந்திரா தேவியின் நினைவிலிருந்து, ஞானதானந்தினி அவரது காலத்தின் கொல்கத்தா கிளிட்டெராட்டியுடன் பழகவில்லை என்பதையும் அறிகிறோம். [30] கொல்கத்தா சமூகம் ஞானநந்தினியிடம் அக்கறை காட்டவில்லை என்பதும் பிரபலமான வங்காள இதழான பங்கபாசியின் அக்டோபர் 1889 இதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்துள்ளது. அது ராஜா ஓ ராணி நாடகத்தில் நடித்ததற்காக இவரை அவதூறாக பேசியது. [31]

1890 ஆம் ஆண்டில், ஞானதானந்தினி 1884இல் தனது மனைவி காதம்பரி தேவியை இழந்த ஜோதிரிந்திரநாத் தாகூருடன் சென்றார். 1891 ஆம் ஆண்டில், ஞானதானந்தினி தேவி தனது மருமகன் அபானிந்திரநாத் தாகூரை ஈ.பி. ஹேவலுக்கு அறிமுகப்படுத்தினார், அவர் அப்போது அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். இந்த இரு கலைஞர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இறுதியில் வங்காள கலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. [32] தாகூர் குடும்பத்தில் ஞானதானந்தினியின் நிலையை நிலைநிறுத்துவது கடினமாகும். ஒருபுறம், பிரம்ம சமாஜத்தில் மாகா உத்சவ கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஒரு சில பெண்களில் இவரும் ஒருவராக இருந்தார். மேலும் இவர் பிராமணரல்லாத கூச்-பெகார் அரச குடும்பத்தினருடன் திருமணத்தை ஆதரித்ததாக அறியப்படுகிறது. இது அவளை மீண்டும், தேபேந்திரநாத் தாகூருடன் அழைத்துச் சென்றது. [33] [34] ஒரு முறை தனியாக இங்கிலாந்து சென்ற ஒரு பெண்ணான் இவர் தன் மகன் சுரேந்திரநாத்தை உயர் படிப்புக்காக இங்கிலாந்து செல்ல அனுமதிக்கவில்லை. [35]

1907 ஆம் ஆண்டில், ஞானதாநந்தினியும் சத்யேந்திரநாத்தும் இராஞ்சியில் உள்ள மொராபாதி மலையில் உள்ள அவர்களது வீட்டில் இவரது மாமனார் தேபேந்திரநாத்துடன் வாழத் தொடங்கினர். [36] ஞானதாநந்தினி1941 இல் இறந்தார்.

குறிப்புகள்தொகு

 1. Sengupta, p. 74
 2. Devi, Jnanadanandini (2012) (in bn). Puratani. Ananda Publishers. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5040-066-1. 
 3. Sengupta, p. 75
 4. http://www.thebrahmosamaj.net/impact/educationalimpact.html
 5. Deb, p. 18
 6. Bandyopadhyay, Hiranmay (1966) (in bn). Thakurbarir Katha. Sishu Sahitya Samsad. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7476-355-4. 
 7. Indian Fashion: Tradition, Innovation, Style. https://books.google.com/books?id=63seBQAAQBAJ&pg=PA33&dq=Jnanadanandini+Devi&hl=en&sa=X&ved=0CDoQ6AEwBWoVChMItYDiiOzyxgIViaOUCh1fPgu4#v=onepage&q=Jnanadanandini%20Devi&f=false. 
 8. The Sari. https://archive.org/details/sari0000bane_p8w9/page/254. 
 9. http://www.bpedia.org/B_0087.ph[தொடர்பிழந்த இணைப்பு]
 10. Smritisamput. 
 11. "Jnanadanandini Devi". bdlinks. 24 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
 12. Deb, p. 21
 13. Pal, Prasanta Kumar (2006). "Rabijibani" (Bengali). Ananda Publishers. pp. 48–49. ISBN 978-81-7215-274-1.
 14. Sengupta, p. 284
 15. Sengupta, p. 75
 16. Devi, p. 31
 17. Chaudhurani, Saraladevi (1975). Jibaner Jharapata, Dey's Publishing, p. 13
 18. Devi, p. 31
 19. Devi, p. 32
 20. Sengupta, p. 76
 21. Indira Devi, p. 82
 22. Deb, p. 21
 23. Anathnath Das, p. 38
 24. Devi, p. 34
 25. Tagore, Rabindranath. Europe-Prabasir Patra (Letter 6). Visva-Bharati, 1935
 26. Sarala Devi Chaudhurani, p. 55
 27. Indira Devi Chaudhurani, Prabasi, February 1942
 28. Sengupta, p. 76
 29. Upendranath Bhattacharjee, Rabindra-Natya-Parikrama, Orient Book Company (2008) p. 37. ISBN 978-81-89801-01-4
 30. Indira Devi Chaudhurani, Prabasi, February 1942
 31. Sengupta, p. 77
 32. Sengupta, p. 77
 33. Deb, p. 188
 34. Deb, p. 142
 35. Sengupta, p 77
 36. Sengupta, p. 286

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானதாநந்தினி_தேவி&oldid=3214350" இருந்து மீள்விக்கப்பட்டது