டக்கர்
டக்கர் (Takkar (2023 film)) என்பது இந்திய தமிழ் மொழி காதல் அதிரடித் திரைப்படமாகும், இதனை கார்த்திக் ஜி. கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.[1] இப்படத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌசிக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அபிமன்யு சிங், முனிஷ்காந்த் மற்றும் விக்னேஷ்காந்த் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2]
டக்கர் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | கார்த்திக் ஜி. கிரிஷ் |
தயாரிப்பு |
|
கதை | ஸ்ரீநிவாச கவிநயம் கார்த்திக் ஜி. கிரிஷ் |
இசை | நிவாஸ் கே. பிரசன்னா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வாஞ்சிநாதன் முருகேசன் |
படத்தொகுப்பு | ஜி.ஏ.கௌதம் |
கலையகம் | பேஷன் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 9 சூன் 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் 9 சூன் 2023 அன்று வெளியிடப்பட்டது.[3]
கதை சுருக்கம்
தொகுகுணசேகர் ஒரு மகிழ்ச்சியான இளைஞன், அவன் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறான், அவன் ஒரு சூழ்நிலையில் பணக்கார பெண்ணிடம் சிக்கிக்கொள்கிறான், அதன் பின் அந்த பணமே துன்பத்திற்கு மூல காரணம் என்று நம்புகிறான். சாலைப் பயணத்தில் பயணம் செய்யும் போது, இருவரும் மாந்தக் கடத்துகை வலையில் சிக்கிக் கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன.
நடிகர்கள்
தொகு- சித்தார்த் - குணசேகர் என்கிற "கன்ஸ்"
- யோகி பாபு
- திவ்யான்ஷா கௌசிக்
- அபிமன்யு சிங்
- முனீஷ்காந்த் ராமதாஸ்
- விக்னேஷ்காந்த்
- சுஜாதா சிவகுமார்
தயாரிப்பு
தொகுஇத்திரைப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ஜி. கிரிஷ், இவர் இதற்கு முன்னர் 2014யில் கப்பல் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[4] இத்திரைப்படம் பேஷன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை வாஞ்சிநாதன் முருகேசன், படத்தொகுப்பை ஜி.ஏ.கௌதம் செய்துள்ளார்.[5] இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிக்கிமில் நடைபெற்றது.[6] முதல் பார்வை சுவரொட்டி மற்றும் மோஷன் சுவரொட்டி ஆகியவை 23 டிசம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[7][8] படத்தின் விளம்பரம் சித்தார்த்தின் பிறந்த நாளான 17 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டது.[9][10][11] படத்தின் முன்னோட்டம் 21 மே 2023 அன்று வெளியிடப்பட்டது.[12][13]
இசை
தொகுஇத்திரைப்பபடத்திற்கு இசையமைத்தவர் நிவாஸ் கே.பிரசன்னா.[14] முதல் தனிப்பாடலான "ரெயின்போ திரலில்" 21 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.[15] இரண்டாவது தனிப்பாடலான "மரகத மாலை" 31 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.[16] மூன்றாவது தனிப்பாடலான "நிரா" 27 பிப்ரவரி 2020 அன்று வெளியிடப்பட்டது மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[17][18] மில்லி வலைப்பதிவில் இருந்து எழுத்தாளர் ஒருவர், "கவனிக்க மற்றும் விரும்புவதற்கு நிறைய இருக்கிறது, இங்கே: சித் ஸ்ரீராமின் முன்னணி குரல், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மாளவி சுந்தரேசனின் பாடலின் பிற்பகுதி!" என்று எழுதினார்.[19] மேலும் பிஹைண்ட்வுட்ஸ் வலைப்பதிவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர், "சித் ஸ்ரீராம் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறார், அவர் பாடும்போது, ஒரு விடயம் மிகவும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது." என்று எழுதினார்.[20]
டக்கர் | ||
---|---|---|
ஒலிச்சுவடு
| ||
வெளியீடு | 2020, 2023 | |
ஒலிப்பதிவு | 2020 | |
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |
நீளம் | 24:01 | |
மொழி | தமிழ் | |
இசைத்தட்டு நிறுவனம் | திங்க் மியூசிக் | |
இசைத் தயாரிப்பாளர் | நிவாஸ் கே. பிரசன்னா | |
டக்கர்-இலிருந்து தனிப்பாடல் | ||
எண். | தலைப்பு | பாடல் வரிகள் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|---|
1. | "ரெயின்போ திரலில்" | அறிவரசன் | சிலம்பரசன், ஆண்ட்ரியா ஜெரெமையா | 4:20 |
2. | "மரகத மாலை" | உமா தேவி | பிரதீப் குமார், விஜய் யேசுதாஸ், சின்மயி | 5:45 |
3. | "நிரா" | கு கார்த்திக் | சித் ஸ்ரீராம், கௌதம் மேனன், மாளவி சுந்தரேசன் | 5:04 |
4. | "கொய்யாலே" | கு கார்த்திக் | ஆண்ட்ரியா ஜெரெமையா | 3:31 |
5. | "சாகிறேன்" | கு கார்த்திக் | அபய் ஜோத்புர்கர், சுவேதா மோகன் | 4:26 |
6. | "டக்கர் தீம்" | — | — | 0:55 |
முழு நீளம்: | 24:01 |
திரைப்பட வெளியீடு
தொகுஇத்திரைப்படம் 17 ஏப்ரல் 2020 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது, ஆனால் கோவிட்-19 தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு [21] பின்னர் 9 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டது.[22][23]
வீட்டு ஊடகம்
தொகுஇத்திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையினை ஸ்டார் நெட்வொர்க்கும் மற்றும் படத்தின் இணைய வழி ஒளிபரப்பு உரிமையினை நெற்ஃபிளிக்சுகும் விற்கப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ Bureau, Dt Next (21 May 2023). "Trailer of Siddharth's Takkar to release today". DT next (in ஆங்கிலம்). Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Siddharth's Takkar teaser is here". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Takkar release date locked! Siddharth's film to hit screens on this date". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 18 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "First look of Takkar unveiled". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 25 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Vishal releases first look of Siddharth starrer 'Takkar'". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). 25 December 2019. Archived from the original on 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Location Diaries: All weather girl— Divyansha Kaushik for Takkar". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ Hymavati, Ravali (23 December 2019). "Actor Siddharth's 'Takkar' First Look Poster". The Hans India (in ஆங்கிலம்). Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Actor Siddharth Looks Suave And Serious In The First Look Poster Of 'Takkar'". Silverscreen India. 24 December 2019. Archived from the original on 2 December 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ மலர், மாலை (17 April 2023). "சித்தார்த் பிறந்தநாள் பரிசாக டக்கர் பட டிரைலரை வெளியிட்ட படக்குழு". மாலை மலர். Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Chithha and Takkar: Two Siddharth films announced on his birthday". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 17 April 2023. Archived from the original on 4 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Watch: Teaser of actor Siddharth's Takkar released". The News Minute (in ஆங்கிலம்). 17 April 2023. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ Hymavati, Ravali (19 May 2023). "Siddharth's Bilingual 'Takkar' Movie Trailer Will Be Out On This Date…". The Hans India (in ஆங்கிலம்). Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Siddharth's Takkar trailer to be out on this date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Takkar Songs Download - Tamil Songs Online @JioSaavn". JioSaavn. 21 January 2020. Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ 15.0 15.1 Anumaggie (21 January 2020). "STR AND ANDREA REUNITES - PEPPY AND ROMANTIC TRACK FROM SIDDHARTH'S TAKKAR, HERE!".
- ↑ 16.0 16.1 Anumaggie (31 January 2020). "SIDDHARTH'S TAKKAR: A NEW ROMANTIC DOSE OF LOVE OUT! WATCH!".
- ↑ "Takkar | Nira Song Lyric Video | Siddharth | Sid Sriram | Gautham Menon | Nivas K Prasanna". YouTube (in ஆங்கிலம்). 27 February 2020.
- ↑ Rahavan MJ; Sushmetha. "BEST OF TAMIL MUSIC IN FEBRUARY 2020 - CHECK IF YOUR FAVORITES HAVE MADE IT TO THE LIST!". Behindwoods.
- ↑ "Milliblog Weeklies, Week 108 – Mar.1, 2020". milliblog. 1 March 2020.
- ↑ Raghavan MJ (27 February 2020). "SIDDHARTH'S TAKKAR SONG NIRA: MUSIC REVIEW HERE!". Behindwoods.
- ↑ "Here's when a glimpse from the long-delayed Takkar, starring Siddharth and Divyansha, will be unveiled". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 18 January 2022. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ மலர், மாலை (21 May 2023). "சித்தார்த்தின் டக்கர் பட டிரைலர் வெளியானது". மாலை மலர். Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
- ↑ "Takkar trailer is here: Siddharth is on the run to make money". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 21 May 2023. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.