தபால் அலுவலக கடவுஅட்டை சேவை மையம்

தபால் அலுவலக கடவு அட்டை சேவை மையம் ( lit. POPSK என்பதின் விரிவாக்கம் ' போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்போர்ட் சேவை மையம் ') என்பது இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சகம் (இந்தியா) (MEA) மற்றும் தபால் துறை (DoP)யின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்,[1] இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக தலைமை தபால் அலுவலகங்கள் (HPO) மற்றும் தபால் அலுவலகங்கள் "தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையமாகப்" (POPSK) பயன்படுத்தப்படுகின்றன.[2][3][4][5] இந்த முன்முயற்சியின் நோக்கமானது, பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெரிய அளவில் மேம்படுத்துவதும், பரந்த பகுதியிலுள்ள மக்களை சென்றடைவதை உறுதி செய்வதும் ஆகும்.[6] நவம்பர் 2019 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 424 POPSKகள் செயல்படத் தொடங்கியுள்ளன.[7]

வரலாறு தொகு

பொதுமக்கள் 50கி.மீட்டர் தொலைவிற்குள் கடவுஅட்டை தொடர்பான சேவைகளை நாடு முழுவதும் பெற வேண்டும் என்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவின் படி நாட்டின் முதல் தபால் அலுவலக கடவு அட்டை சேவை மையமானது கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரிலும்,குஜராத் மாநிலத்தின் தாகோத் நகரிலும் முன்னோடி திட்டமாக ஜனவரி 25, 2017ல் துவங்கப்பட்டது.[8]

கர்நாடகாவில் உள்ள மைசூர் மற்றும் குஜராத்தில் உள்ள தாகோத் POPSK-ன் முன்னோடி திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 2017ல் 64 கூடுதல் POPSK திறக்க முடிவு செய்யப்பட்டது [வெளியுறத்துறை அமைச்சகமும், தபால் அலுவல்கமும் இணைந்து அதில் முதல் தொகுதியாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 56 கிளைகளைத் திறப்பதற்கான முடிவை பிப்ரவரி மாதம் 9ம் தேதி 2017லிம், இரண்டாவது தொகுதியாக 8 கிளைகளைத் திறப்பதற்கான முடிவை 28 பிப்ரவரி 2017 அன்று அறிவித்தனர். இதில் முதல் கட்டமாக 10 கிளைகள் அசன்சோல் (மேற்கு வங்கம்),கவரத்தி (லட்சத்தீவு), கோட்டா (ராஜஸ்தான்), முசாபர்பூர் (பீகார்), பத்தனம்திட்டா (கேரளா), ராய்கஞ்ச் (மேற்கு வங்காளம்), ராவுர்கேலா(ஒடிசா), சேலம் (தமிழ்நாடு), உதம்பூர் (ஜம்மு & காஷ்மீர்), விதிஷா (மத்தியப் பிரதேசம்) போன்ற நகரங்களின் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, நாட்டின் மொத்த POPSK எண்ணிக்கையை 12 ஆக கொண்டு சென்றது.[9]. முதல் கட்டத்தில் 86 POPSK அலுவலகம் அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 17 ஜீன் 2017 அன்று 149 POPSK அலுவலகங்கள் திறக்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பின்வரும் நகரங்கள் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர், கன்னியாகுமரி(வடக்கு) தேர்ந்தெடுக்கப்பட்டன.[10]

மேலும் பார்க்கவும் தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. "Opening of the third batch of new Post Office Passport Seva Kendra (POPSK)". http://mea.gov.in/press-releases.htm?dtl/28180/Opening_of_the_third_batch_of_new_Post_Office_Passport_Seva_Kendra_POPSK. 
  2. "Passport Enquiry - Passport Status, Passport Tracking, Passport Login". Passport Enquiry (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-03.
  3. "Passport issuance getting delayed". http://timesofindia.indiatimes.com/city/aurangabad/passport-issuance-getting-delayed/articleshow/59259567.cms. 
  4. "Government Announces 149 New Post Office Passport Seva Kendras". http://www.ndtv.com/india-news/government-announces-149-new-post-office-passport-seva-kendras-1713576. 
  5. "Govt to open 56 Post Office Passport Seva Kendra facilities". http://www.hindustantimes.com/india-news/govt-to-open-56-post-office-passport-seva-kendra-facilities/story-zXHMeSEkRzEDRAycE7RMaL.html. 
  6. "Opening of new Post Office Passport Seva Kendras (POPSK) in the Second Phase". http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=165717. 
  7. "Consular| Passport and Visa Division | Passport Seva". portal2.passportindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
  8. "முன்னோடி திட்டம் POPSK - Passport Status, Passport Tracking, Passport Login". Passport Enquiry (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  9. "முதலாம் கட்டம் POPSK - சேலம் நகரம், இரண்டாவது தொகுதியில்" (PDF). Passport Enquiry (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  10. "இரண்டாம் கட்டம் POPSK - தமிழ்நாட்டிலிருந்து 11 நகரங்கள்". Passport Enquiry (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.