தமிழக வெற்றிக் கழகம்

இந்திய அரசியல் கட்சி

தமிழக வெற்றிக் கழகம்[6] (Tamilaga Vettri Kazhagam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[7][8] 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் இக்கட்சியைத் தொடங்கினார்.[9][10]

தமிழக வெற்றிக் கழகம்
சுருக்கக்குறிதவெக
தலைவர்விஜய்
நிறுவனர்விஜய்
பொதுச் செயலாளர்புஸ்சி ஆனந்த்
குறிக்கோளுரைபிறப்புக்கும் எல்லா உயிருக்கும்
தொடக்கம்2 பிப்ரவரி 2024
தலைமையகம்சென்னை –(பனையூர்) 600019, தமிழ்நாடு, இந்தியா.
கொள்கைசமூக நீதி
மதச்சார்பின்மை[1][2]
சமத்துவம்[3]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்[4][5]
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்பட்டது
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
0 / 234
இந்தியா அரசியல்

வரலாறு

  • விஜய் தனது இரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று தனது ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அவர்களது நற்பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தொடங்கினார்.[11][12]
  • 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஆதரித்து விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். விஜய் ரசிகர் நற்பணி மன்ற ரசிகர்களும் தேர்தல் களத்தில் வேலை செய்தனர். இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, விஜய் மற்றும் அவரது ரசிகர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.[சான்று தேவை]
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த வேட்பாளர்கள் 170 தொகுதிகளில் போட்டியிட்டு 115 தொகுதிகளில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர்களாக தேர்வாகினர்.[13][14]
  • 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி துவங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது.

தேர்தல்

  • தமிழக வெற்றிக் கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் தற்போது ஆதரவு அளிக்காது என்றும் விஜய் தெரிவித்தார்.[15]
  • வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தலைவர் விஜய் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தனது கட்சியின் இலட்சியம், நோக்கம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற உயர்ந்த திருக்குறள் வரிகளுக்கு ஏற்றார் போல் தன் கட்சியின் முழக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.[16]

கட்சியின் பெயர்

தமிழக வெற்றி கழகம் என முதலில் பெயரிடப்பட்ட இக்கட்சியின் பெயரானது இலக்கணப் பிழையுடன் உள்ளது என சமூக ஊடகங்கள் கருத்து தெரிவித்தன் அடிப்படையில் கட்சியின் தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.[17]

முதல் மாநில மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை என்ற இடத்தில் 2024 அக்டோபர் 27 அன்று நடைபெற்றது.[18] ஏறத்தாழ 80,000 இருக்கைகள் வரை போடப்பட்டிருந்த நிலையில் இருக்கைகளைத் தாண்டியும் தொண்டர்களின் கூட்டம் இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.[19] மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 100 அடி நீளமுள்ள கொடிக்கம்பத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றிய பின் நடிகர் விஜய் தொண்டர்களிடம் உரையாற்றினார். கட்சியின் கொள்கைகளைப் பற்றி விரிவாகப் பேசிய அவர் தமிழ் தேசியமும், பெரியாரின் திராவிடமும் தனது கட்சியின் இரு முக்கிய கொள்கைகளாக பிரகடனப்படுத்தினார். மாநாட்டின் போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.[20][21] இம்மாநாட்டில், எட்டு இலட்சம் பேர் பங்கேற்றதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.[22] இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூகவுடைமை (சோசலிசம்) மற்றும் மக்களாட்சி (ஜனநாயகம்) போன்ற கொள்கைகளை கட்சி நிலைநிறுத்தும் என்று விஜய் கூறினார்.[3][4] பெரியார், அம்பேத்கர், காமராசர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலி அம்மாள் ஆகியோரை சித்தாந்த வழிகாட்டிகளாக தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்டதாக அவர் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், பெரியாரின் இறைமறுப்பு சித்தாந்தத்தை தவிர்த்து பிற (பெண்களுக்கு அதிகாரமளித்தல், பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி, சமத்துவம்) கொள்கைகளில் கவனம் செலுத்தபோவதாகக் கூறினார்.[23][24]

மேற்கோள்கள்

  1. "My party is committed to secular social justice principles: Vijay". thehindu.com. தி இந்து. 28 October 2024. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
  2. Nair, Shilpa (27 October 2024). "Actor Vijay bats for secularism, Tamil, and removing Governor in first political rally". indiatoday.in. India Today. பார்க்கப்பட்ட நாள் 27 October 2024.
  3. 3.0 3.1 Bureau (The Hindu), The Hindu (2024-10-27). "My party is committed to secular social justice principles: Vijay" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/my-party-is-committed-to-secular-social-justice-principles-vijay/article68804189.ece#:~:text=The%20party's%20principles,%20announced%20by,secular%20administration;%20a%20two-language. "The party’s principles, announced by Mr. Vijay, include equality; transcending religion, caste, ethnicity, language, and gender; promotion of egalitarian principles; upholding democratic rights and opposing the misuse of law by the State and the Union; equal rights for all; a secular administration" 
  4. 4.0 4.1 "Misleading people under guise of Dravidian mode: Actor-turned-politician Vijay's veiled jibe at DMK". The Economic Times. 2024-10-27. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/misleading-people-under-guise-of-dravidian-mode-actor-turned-politician-vijays-veiled-jibe-at-dmk/articleshow/114661530.cms?from=mdr. "He further said that Tamilaga Vetri Kazhagam reflects left-leaning Dravidian ideology in major aspects and questioned the governor's position, "two language policy, upholding Social Justice, equality, socialism, secularism and democracy."" 
  5. Tamilarasu, Prabhakar (2024-09-04). "'Thalapathy' Vijay is busy reading Ambedkar as his party plans to lean Left of Centre. Right's a no go". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-26.
  6. "கட்சி பெயரில் மாற்றம் செய்யும் நடிகர் விஜய் - நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்". Zee News. https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-shifts-gears-actor-plans-new-name-for-tamil-nadu-vetri-kazhagam-party-488845. பார்த்த நாள்: 17 February 2024. 
  7. "தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/1192744-tamilaga-vettri-kazhagam-actor-vijay-s-political-party-name-is-official-announcement.html. பார்த்த நாள்: 2 February 2024. 
  8. https://www.dailythanthi.com/News/State/tamilaka-vetri-kazhagam-actor-vijay-launched-a-new-party-1092413
  9. https://www.puthiyathalaimurai.com/tamilnadu/actor-vijay-announces-his-party-name-as-thamilaga-vetri-kalagam
  10. https://www.hindutamil.in/news/tamilnadu/1192744-tamizhaga-vetri-kazhagam-actor-vijay-s-political-party-name-is-official-announcement.html
  11. "Vijay's fan club to take 'new dimension', hints at his political plunge".
  12. "Vijay Makkal Iyakkam was launched in 2009". The Times of India. 28 September 2015. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/vijay-makkal-iyakkam-was-launched-in-2009/articleshow/49134646.cms?from=mdr. 
  13. "'Makkal Iyakkam won't be a political outfit'". 16 May 2012.
  14. "Actor Vijay speaks to students at meet in Chennai, takes a potshot at political parties". 17 June 2023.
  15. https://www.bbc.com/tamil/articles/c51w53dx1lno
  16. "நடிகர் விஜய்: தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் - முழு விவரம்", BBC News தமிழ், 2024-02-02, பார்க்கப்பட்ட நாள் 2024-02-02
  17. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1200953-actor-vijay-adds-ik-to-party-name.html
  18. https://www.bbc.com/tamil/articles/cd7nn3pxgepo
  19. https://zeenews.india.com/tamil/tamil-nadu/live-updates/tamil-superstar-thalapathy-vijay-tamilaga-vetri-kazhagam-first-state-conference-live-updates-tvk-political-party-535752
  20. https://www.hindutamil.in/news/tamilnadu/1332046-vijay-tvk-maanadu-highlights.html
  21. https://www.bbc.com/tamil/articles/cn7mm2z3p2yo
  22. மலர், மாலை (2024-10-27). "த.வெ.க. மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வருகை - 7 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க காவல்துறை அறிவுறுத்தல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
  23. https://timesofindia.indiatimes.com/city/chennai/vijay-attacks-dmk-in-first-conference-says-corrupt-forces-are-tvks-political-enemy/articleshow/114659584.cms
  24. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Oct/27/inside-vijays-big-bang-political-entry
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_வெற்றிக்_கழகம்&oldid=4154570" இலிருந்து மீள்விக்கப்பட்டது