தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் (Tamil University) என்பது தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம்.
குறிக்கோளுரை | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் |
---|---|
வகை | தமிழ் - பொது |
உருவாக்கம் | செப்டம்பர் 15 1981 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | வி. திருவள்ளுவன்[2] |
அமைவிடம் | , |
இணையதளம் | www.tamiluniversity.ac.in |
தமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம்
தொகுதமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம் (emblem) பற்றிய விளக்கம் பின்வருமாறு அமையும்.[3]
“ | எங்குமுள தமிழருக்கும் உரியதாகும் என்பதனை உலகுருண்டை எடுத்துக்காட்டும்; தங்கிவளர் இடம் தஞ்சை என்ற உண்மை தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் காட்டும்; |
” |
துணைவேந்தர்கள்
தொகு- வ. அய். சுப்பிரமணியம் (19.9.1981 - 19.6.1984, 22.9.1984 - 31.7.1986)
- ச. அகத்தியலிங்கம் (1.12.1986 - 30.11.1989)
- சி. பாலசுப்பிரமணியன் (4.12.1989 - 3.12.1992)
- ஔவை நடராசன் (16.12.1992 - 15.12.1995)
- கி. கருணாகரன் (11.1.1996 - 3.9.1998)
- கதிர் மகாதேவன் (19.2.1999 - 14.9.2001)
- இ. சுந்தரமூர்த்தி (19.12.2001 - 18.12.2004)
- சி. சுப்பிரமணியம் (6.6.2005 - 5.6.2008)
- ம. இராசேந்திரன் (19.6.2008 - 18.6.2011)
- ம. திருமலை (10.2.2012 - 9.2.2015)
- க. பாஸ்கரன் (6.8.2015 - 5.8.2018)
- கோ. பாலசுப்பிரமணியன் (4.10.2018 - 3.10.2021)
- வி. திருவள்ளுவன் (13.12.2021 முதல்)
புலங்கள்
தொகுகலைப்புலம்
தொகுபழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன.
சிற்பத்துறை
தொகுஇசைத்துறை
தொகுநாடகத்துறை
தொகுசுவடிப்புலம்
தொகுதமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
ஓலைச்சுவடித்துறை
தொகுஅரிய கையெழுத்துச்சுவடித்துறை
தொகுகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
தொகுகடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை
தொகுவளர்தமிழ்ப்புலம்
தொகுபலவிடங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவானஅடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது இப்புலம்.
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை
தொகுமொழிபெயர்ப்புத் துறை
தொகுஅகராதியியல் துறை
தொகுசமூக அறிவியல் துறை
தொகுஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை
தொகுகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை
தொகுமொழிப் புலம்
தொகுஇலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன.
இலக்கியத் துறை
தொகுமொழியியல் துறை
தொகுமெய்யியல் துறை
தொகுபழங்குடி மக்கள் ஆய்வு மையம்
தொகுநாட்டுப்புறவியல் துறை
தொகுஇந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
தொகுஅறிவியற் புலம்
தொகுபழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.
சித்த மருத்துவத்துறை
தொகுதொல்லறிவியல் துறை
தொகுதொழில் மற்றும் நில அறிவியல் துறை
தொகுகட்டடக்கலைத்துறை
தொகுகணிப்பொறி அறிவியல் துறை
தொகுசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை
தொகு- பெருஞ்சொல்லகராதிகள் (5 தொகுதிகள்)
- கலைக்களஞ்சியங்கள் (30 தொகுதிகள்)
- சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(3)
- பல துறைசார் கலைச் சொல்லகராதிகள்(12)
- பொறியியல் நூல்கள் (13)
- மருத்துவ நூல்கள் (14)
தமிழ் எழுத்து வடிவில் கட்டடங்கள்
தொகுதமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் "தமிழ்நாடு" என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்படும்.[5] அவ்வகையில் தமிழ்நாடு என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் நிலையில் ஒவ்வொரு எழுத்துக்கும் (த, மி, ழ், நா, டு) ஒவ்வொரு கட்டடம் அமையும்.[6][7] 'த' வடிவக்கட்டடத்தில் கலைப்புலத்துறைகளும், 'நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலத் துறைகளும் அமையும். 'ழ்' வடிவக் கட்டடத்தில் மொழிப்புலம் செயல்பட்டுவருகிறது. 'மி' வடிவக் கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைய உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. 'டு' வடிவக் கட்டடம் இறுதிக்கட்டத்தையடைந்தது.[8] 'டு' வடிவக்கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது. தற்போது 'மி' வடிவத்திலுள்ள அறிவியல் புலக்கட்டடம் 8 பிப்ரவரி 2016இல் திறக்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம்". Dailythanthi.com. 2021-12-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ தமிழ்ப்பல்கலைக்கழக வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2006, ப.viii
- ↑ மொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய.சுப்பிரமணியம் - முனைவர் இராம.சுந்தரம்
- ↑ தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒரு கண்ணோட்டம், 1986
- ↑ Varsity to have buildings in Tamil letter form, The Hindu, November 26, 2009
- ↑ புதுமை: எழுத்து வடிவில் கட்டடங்கள்!, தினமணி, ஜனவரி 9, 2011
- ↑ தமிழ்ப் பல்கலை.யில் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி அனுமதி, தினமணி, 26 ஜுலை 2014
- ↑ தமிழ்ப் பல்கலை.யில் அறிவியல் புலக் கட்டடம் திறப்பு தினமணி, 9 பிப்ரவரி 2016
வெளி இணைப்புகள்
தொகு- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பரணிடப்பட்டது 2006-12-20 at the வந்தவழி இயந்திரம்
- மொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் - முனைவர் இராம.சுந்தரம்
தமிழ்நாடு என்ற சொல்லின் அமைப்பில் அமைந்த ஐந்து புலக் கட்டடங்கள்
தொகு-
'த' வடிவ கலைப்புலக் கட்டடம்
-
'மி' வடிவ அறிவியல் புலக்கட்டடம்
-
'ழ்' வடிவ மொழிப்புலக்கட்டடம்
-
'நா' வடிவ சுவடிப் புலக்கட்டடம்
-
'டு' வடிவ வளர்தமிழ் புலக்கட்டடம்