திரிபிரங்கோடு
திரிபிரங்கோடு (Triprangode) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். [1] 2001[update] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திரிபிரங்கோடின் மொத்த மக்கள் தொகை 37175 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 17422 என்றும், பெண்களின் எண்ணிக்கை 19753 என்றும் உள்ளது. [1] இக்கிராமமானது மூன்று பக்கமும் நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது.
திரிபிரங்கோடு | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அரசு | |
• நிர்வாகம் | திரிபிரங்கோடு ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 20.67 km2 (7.98 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 37,176 |
• அடர்த்தி | 1,800/km2 (4,700/sq mi) |
மொழிகள் | |
• அதிகார்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676108 |
தொலைபேசி குறியீடு | 0494-256**** |
வாகனப் பதிவு | KL-55 |
அருகில் உள்ள நகரம் | திரூர் |
எழுத்தறிவு | 88.14% |
மக்களவைத் தொகுதி | பொன்னாணி |
சட்டமன்றத் தொகுதி | தாவனூர் |
குடிமை முகமை | திரிபிரங்கோடு ஊராட்சி |
பண்பாடு
தொகுதிரிபிரங்கோடு கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. [2]
போக்குவரத்து
தொகுதிரிபிரங்கோடு கிராமம் திரூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 எடப்பல் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூரில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
- ↑ "Malappuram News, Malappuram District Map, Malappuram Muslim, Malappuram Hospitals, Malappuram College, Malappuram Directory". Archived from the original on 1 April 2016. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.