திருப்பத்தூர் இலக்கியத் திருவிழா 2022
திருப்பத்தூர் இலக்கியத் திருவிழா 2022 (Tirupathur literature Festival 2022) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதிய மாவட்டமான திருப்பத்தூரில் முதன் முறையாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் திருப்பத்தூர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
திருப்பத்தூர் நகரிலுள்ள தூயநெஞ்சக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விழா நடைபெற்றது.[1][2] இலக்கியத் திருவிழாவாகவும், புத்தக கண்காட்சியாகவும்[3] [4]நடைபெற்ற இவ்விழாவில் முக்கிய தமிழ் வெளியீடு நிறுவனங்கள் 54 அரங்குகளை அமைத்திருந்தன. எழுத்தாளர்கள், கவிஞர்கள், உரையாளர்கள், இயக்குனர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என 42 இலக்கியஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.[5] இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றன. இலக்கியத் திருவிழா பணிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா ஒருங்கிணைத்து முக்கியப் பங்கு வகித்தார்.[6]
கிராமப்புற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில்,கண்காட்சிக்கும் திருவிழாவுக்கும் நுழைவு இலவசமாக அனுமதிக்கப்பட்டது. நிகழ்வு தினமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஒரு சாதாரண புத்தகக் கண்காட்சியாக அல்லாமல் ஆகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளின் ஊடாடும் குழு விவாதங்கள் மற்றும் பிற போட்டிகள் என பன்முகத்தன்மை கொண்டஓர் இலக்கியத் திருவிழாவாக நடந்து முடிந்தது. செய்ப்பூர் இலக்கியத் திருவிழாவால் ஈர்க்கப்பட்டதே திருப்பத்தூர் இலக்கிய விழா என்று மாவட்ட ஆட்சியர் அமர் குசுவாகா தனது உரையின்போது தெரிவித்தார்.
20 பேர் கொண்ட உள்ளகக்குழுவும், 50 பேர் கொண்ட பொதுக் குழுவும் விருந்தினர்களாக அழைக்க வேண்டிய இலக்கிய ஆளுமைகள் மற்றும் தலைப்புகள் குறித்து முடிவு செய்தன. தமிழ் இலக்கியத்தை மட்டுமே மையமாகக் கொண்டதாக விழா அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. விழா நாட்களில் மூன்று பேர் கொண்ட விருந்தினர் குழு முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு தலைப்பில் அறிமுக உரையை நிகழ்த்தின. பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இக்குழுவினர் பதிலளித்தனர். சிறந்த கேள்விகளுக்கு விருதும் வழங்கப்பட்டது. தினசரி நிகழ்வுகள் அனைத்தும் இப்போக்கில் நடைபெற்றன.
ஒவ்வொரு நாளும் இரண்டு குழு விவாதங்கள் நடத்தப்பட்டன. முக்கிய எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.நவீனதமிழ் இலக்கியத்தில் விழாகவனம் செலுத்தியது. பெண்கள் அதிகாரம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள், வரலாறு, கலை மற்றும் கலாச்சாரம், சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. ஜெயமோகன், பவா செல்லத்துரை, பெருமாள் முருகன், பாரதி கிருஷ்ணகுமார், அழகிய பெரியவன், ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் தி.மு.அப்துல் காதர், இளம்பிறை, ச.விஜயலட்சுமி, கே.வி.ஜெயசிறீ, சுகிர்தராணி, சல்மா, மனுஷ்யபுத்திரன், சமஸ், மு.முருகேஷ், கம்பீரன், இராசி அழகப்பன், தேவேந்திர பூபதி, இயக்குநர் பாஸ்கர் சக்தி போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
இலக்கியத் திருவிழா நிகழ்வுகள்
தொகுஏப்ரல் 2
தொகுதொடக்க விழா
தொகு2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று எழுத்தாளர் ஜெயமோகன் திருப்பத்தூர் இலக்கியவிழாவையும் புத்தக் கண்காட்சியையும் தொடங்கிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். தனது உரையில் இவர் திருப்பத்தூர் பகுதியின் எழுத்தாளர்களான மு.வரதராசன், மு. குலசேகரன், யாழன் ஆதி, சிறீநேசன் உள்ளிட்டவர்களை முன்னிறுத்தி நினைவுகூர்ந்தார். மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியம் இடையேயான வேறுபாடுகளை விளக்கிப் பேசினார். சூழியல் குறித்து மருத்துவர் டி.ஆர்.செந்தில் எழுதிய ‘இறுதியாய் ஒரு வார்த்தை உங்களோடு’ என்ற நூலும், மருத்துவர் விக்ரம் குமார் எழுதிய ‘பழமிருக்க பயமேன்’ என்ற நூலும் விழாவில் வெளியிடப்பட்டன.
அமர்வு 1
தொகு- தலைப்பு - இலக்கியத்தின் வளர்ச்சி-தற்காலமும் எதிர்காலமும்
- எழுத்தாளர் பெருமாள் முருகன்
- எழுத்தாளர் பா. தேவேந்திர பூபதி
- எழுத்தாள அழகிய பெரியவன்
ஏப்ரல் 3
தொகுஅமர்வு 2
தொகு- தலைப்பு - பெண் மேம்பாடும் இலக்கியமும்
- எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி
- கவிஞர் இளம்பிறை
- எழுத்தாளர் ச விஜயலட்சுமி
அமர்வு 3
தொகு- தலைப்பு - பெண் எழுத்தும் பெண் எழுத்தாளர்களும்
- கவிஞர் சல்மா
- மொழிபெயர்ப்பாளர் கே. வி. ஜெயசிறீ
- கவிஞர் சுகிர்தராணி
ஏப்ரல் 4
தொகுஅமர்வு 4
தொகு- தலைப்பு - சூழலியலும் நாமும்
- சூழலியலாளர் சுந்தரராஜன்
- எழுத்தாளர் நக்கீரன்
- கவிஞர் ஜெயபாஸ்கரன்
அமர்வு 5
தொகு- தலைப்பு - திறன் பேசிகளிலிருந்து புத்தகத்திற்கு
- கவிஞர் மனுஷ்யப்புத்திரன்
- எழுத்தாளர் பாமரன்
- வழக்கறிஞர் அருண்மொழி
ஏப்ரல் 5
தொகுஅமர்வு 6
தொகு- தலைப்பு - கதை எழுதுதல் - கதை சொல்லுதல்
- எழுத்தாளர் பவா செல்லத்துரை
- பேராசிரியர் சு. வேணுகோபால்
- இயக்குநர் பாஸ்கர் சக்தி
அமர்வு 7
தொகு- தலைப்பு - கட்டுரை எழுத்து – ஊடகம்
- எழுத்தாளர் அ. ராமசாமி
- எழுத்தாளர் சமஸ்
- எழுத்தாளர் பழ அதியமான்
ஏப்ரல் 6
தொகுஅமர்வு 8
தொகு- தலைப்பு - இலக்கியத்தில் மனித விழுமியங்கள்
- இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்
- கவிஞர் யாழன் ஆதி
- பேராசிரியர் விமலா அண்ணாதுரை
அமர்வு 9
தொகு- தலைப்பு - மனித உரிமைகள் & இலக்கியம்
- கவிஞர் அப்துல் காதர்
- வழக்கறிஞர் ம.ஆ. சினேகா
- மனித உரிமை செயற்பாட்டாளர் டோக்ரா
ஏப்ரல் 7
தொகுஅமர்வு 10
தொகு- தலைப்பு - அறிவியல் அடிப்படையிலான இலக்கியம்
- ஆயிஷா இரா நடராஜன்
- எழுத்தாளர் தமிழ்மகன்
- விஞ்ஞானி நெல்லை சு. முத்து
அமர்வு 11
தொகு- தலைப்பு - இலக்கியத்தில் வரலாறு, கலை மற்றும் பண்பாடு
- பேராசியர் மு ராமசாமி
- பேராசிரியர் பக்தவத்சல பாரதி
- ஆய்வாளர் மனோன்மணி
ஏப்ரல் 8
தொகுஅமர்வு 12
தொகு- தலைப்பு - ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்
- வழக்கறிஞர் ச. பாலமுருகன்
- எழுத்தாளர் கரன் கார்க்கி
- எழுத்தாளர் கல்கி சுப்பிரமணியம்
அமர்வு 13
தொகு- தலைப்பு - இலக்கியமும் திரைப்படமும்
- கவிஞர் அறிவுமதி
- இயக்குநர் ஞான ராஜசேகரன்
- இயக்குநர் சந்திரா தங்கராஜ்
ஏப்ரல் 9
தொகுஅமர்வு 14
தொகு- தலைப்பு - சிறார் இலக்கியம்
- கவிஞர் ராசி அழகப்பன்
- எழுத்தாளர் கம்பீரன்
- கவிஞர் மு. முருகேஷ்
நிறைவு விழா
தொகுதிருப்பத்தூர் இலக்கியத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில், புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கியவர்களை ஊக்குவிக்கும் விதமாக வாசகர்களுக்கு புத்தக நேசர், புத்தகக் காவலர், புத்தகக் காதலர், புத்தகச் சோலை போன்ற பலவிருதுகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நினைவுப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.
காவல்துறை அரங்கு
தொகுதிருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் காவல் துறை சார்பாக தனி அரங்கு அமைக்கப்பட்டு அதில் தமிழ்நாடு காவல் துறையால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலி குறித்து பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்தும் செயலியின் பயன்பாடுகள் குறித்தும் காவலர்கள் விளக்கமளித்தனர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tirupattur literature fest to begin today". The Hindu (in Indian English). 2022-04-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
- ↑ "2-ந் தேதி முதல் இலக்கியத் திருவிழா, புத்தக கண்காட்சி Literary Festival and Book Fair from the 2nd". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
- ↑ "திருப்பத்தூரில் இலக்கிய, புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2022/apr/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3818788.html. பார்த்த நாள்: 11 April 2022.
- ↑ non_nj_2602 (2022-04-01). "Tirupattur literature fest to begin today - New On News" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "48 writers to attend Tirupathur literature fest from April 2-9". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
- ↑ "திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா ஏற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2022/mar/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3817642.html. பார்த்த நாள்: 11 April 2022.
- ↑ "கல்லூரி விழாவில் தனி அரங்கு அமைத்து காவல் உதவி செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு". Police Media Tamil (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-04-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.