துவாரகா விரைவுச்சாலை

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை

துவாரகா விரைவுச்சாலை அல்லது வடக்கு சுற்றுச்சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 248பிபி, இந்தியாவின் தலைநகரான தில்லி]]யில் உள்ள துவாரகாவையும், அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரத்தையும் இணைக்கும் 27.6 கிலோ மீட்டர் நீளமும், 8 வழித்தடங்களும் கொண்ட உயர்மட்ட விரைவுச்சாலை ஆகும். தில்லி-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48ன் 20 கிலோ மீட்டர் தொலைவின் ஒரு பகுதியாக துவாரகா விரைவுச்சாலை உள்ளது.[1]

துவாரகா விரைவுச்சாலை
வடக்கு சுற்றுச்சாலை
Map
சிவப்பு நிறத்தில் துவாரகா விரைவுச்சாலை
வழித்தட தகவல்கள்
நீளம்:27.6 km (17.1 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சிவமூர்த்தி, மகிபால்பூர், துவாரகா, தில்லி
முடிவு:கேர்க்கி தௌலா பிளாசா, குருகிராம், அரியானா
அமைவிடம்
மாநிலங்கள்:தில்லி, அரியானா
நெடுஞ்சாலை அமைப்பு

எதிர்காலத் திட்டம்

தொகு

துவாரகா விரைவுச்சாலையின் நீட்சியாக அமையவிருக்கும் தில்லி-ஜெய்ப்பூர் நகரங்களை இணைக்கும் 195 கிலோ மீட்டர் நீளமும், 6 வழித்தடங்களும் கொண்ட அதிவிரைவுச்சாலையான தேசிய நெடுஞ்சாலை 352 பி ரூபாய் 6,530 கோடி மதிப்பில் அமையவுள்ளது.[2]இது தேசிய நெடுஞ்சாலை 48க்கு பக்கவாட்டில் நிறுவப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 352 பி திட்டம் நிறைவேறிய பின், தில்லி-ஜெய்ப்பூர் இடையேயான தொலைவு 40 கிலோ மீட்டர் குறைவதுடன், பயண நேரம் 2 மணி நேரமாக இருக்கும்.[3]இத்திட்டம் 2025ஆம் ஆண்டில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா_விரைவுச்சாலை&oldid=3778272" இலிருந்து மீள்விக்கப்பட்டது