துவாரகா, தில்லி
துவாரகா[1]இந்தியாவின் தேசியத் தலைநகர் பகுதியான தில்லியில் அமைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும்.[2][3] இது புது தில்லிக்கு தென்மேற்கே 21.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. துவாரகாவிற்கு கிழக்கே 11.2 கிலோ மீட்டர் தொலைவில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. துவாரகாவிற்கு தெற்கே 18.8 கிலோ மீட்டர் தொலைவில் அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரம் உள்ளது. இது துவராகா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
துவாரகா, தில்லி | |
---|---|
தில்லியின் பகுதிகள் | |
தேசியத் தலைநகர் பகுதியான தில்லியில் துவாரகாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°35′4.278″N 77°02′57.044″E / 28.58452167°N 77.04917889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | தென்மேற்கு தில்லி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தில்லி மாநகராட்சி |
• தில்லி சட்டமன்ற உறுப்பினர் | விநய் மிஸ்ரா, துவாரகா சட்டமன்ற உறுப்பினர் |
• மாவட்ட ஆட்சியர் | ராகுல் சிங், இந்திய ஆட்சிப் பணி |
பரப்பளவு | |
• மொத்தம் | 56.48 km2 (21.81 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 12,00,000 |
• அடர்த்தி | 21,000/km2 (55,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி & ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 110075, 110077, 110078 |
அருகமைந்த நகரம் | குருகிராம் |
மக்களவை தொகுதி | மேற்கு தில்லி |
சட்டமன்ற தொகுதி | துவாரகா |
திறன்மிகு நகரம் திட்டத்தில் துவாராக இணைந்து செயல்படுகிறது.[4] துவாரகா மற்றும் குருகிராம் நகரத்தை இணைக்கும் 27.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.[5]
போக்குவரத்து
தொகுதில்லி மெட்ரோ நிலையங்கள்
தொகுதுவாரகா பகுதியில் 8 தில்லி மெட்ரோ நிலையங்கள் உள்ளது. இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் துவாரகா பகுதியை தில்லி மெட்ரோவின் துவாரகா மெட்ரோ நிலையம் இணைக்கிறது. துவாரகாவுடன் நொய்டா, ஆனந்த விகார் மற்றும் காசியாபாத் நகரங்களுடன் இணைக்கிறது. துவாரகா விரைவுச் சாலை அரியானாவின் குருகிராம் நகரத்தை இணைக்கிறது.
கல்வி
தொகுபல்கலைக்கழகம் & கல்லூரிகள்
தொகு- தில்லி பல்கலைக்கழகம்
- தில்லி பல்கலைக்கழக சட்டக் கல்லூரி
- தில்லி பல்கலைக்கழக மேலாண்மைக் கல்லூரி
- தில்லி பல்கலைக்கழக வேதியியல் தொழில்நுடபக் கல்லூரி
- தில்லி பல்கலைக்கழக தகவல் தொழில்நட்பக் கல்லூரி
- லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை & சட்டப் பல்கலைக்கழகம்
- நேதாஜி சுபாஷ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- குரு கோவிந்த சிங் இந்திரப்பிரஸ்தம் பல்கலைக்கழகம்
- பாஸ்கராச்சாரியா பயன்பாட்டு அறிவியல் கல்லூரி
- தீன தயாள் உபாத்தியாயா கல்லூரி [6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "When Dwarka was Pappankalan...". தி இந்து. 30 July 2006. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-dwarka-was-pappankalan/article3197105.ece.
- ↑ "Dwarka could be your next dream destination". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Delhi/dwarka-could-be-your-next-dream-destination/article6750951.ece.
- ↑ "Sub-cities to act as counter-magnets". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/delhi/Sub-cities-to-act-as-counter-magnets/articleshow/980879.cms.
- ↑ "DDA to turn Dwarka into smart sub-city". 3 August 2016. http://www.thehindu.com/news/cities/Delhi/DDA-to-turn-Dwarka-into-smart-sub-city/article14549712.ece.
- ↑ ‘1 கி.மீ-க்கு ரூ.251 கோடி செலவு’ - துவாரகா விரைவுச் சாலை குறித்த சிஏஜி அறிக்கைக்கு மத்திய அரசின் பதில் என்ன?
- ↑ "DDUC to shift to new Dwarka campus by mid-June". 14 June 2016.
- ↑ "Deen Dayal Upadhyaya College gets a new campus - The Hindu". 21 July 2016. http://www.thehindu.com/news/cities/Delhi/Deen-Dayal-Upadhyaya-College-gets-a-new-campus/article14502907.ece.
மேலும் படிக்க
தொகு- District Magistrate/DM South West Delhi Government of Delhi
- "Cabinet approves transfer of land from DDA to L&DO for the proposed Second Diplomatic Enclave". Prime Minister of India. Archived from the original on 4 January 2017.
- Dwarka at Delhi Development Authority website DDA
- Complete Dwarka Expressway by 2022: PM Narendra Modi to road transport minister Times of India
- DDA plans international sports complex in Dwarka sub-city The Indian Express
- DDA plans Delhi's first adventure park for cycle sports in Dwarka The Times of India
- DDA, Indian Navy to develop old-age homes in Dwarka The Economic Times
- DDA plans Delhi to get new cricket stadium near Dwarka The Times of India