தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்

தென் இந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெப்சி) (Film Employees Federation of South India) என்பது என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் தமிழ் தமிழகத் திரைப்படத்துறையைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒரு அமைப்பு ஆகும். இந்த கூட்டமைப்பில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த மொத்தம் 23 தொழிற்சங்கங்களின் சுமார் 25,000 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
உருவாக்கம்1967; 57 ஆண்டுகளுக்கு முன்னர் (1967)[1]
தலைமையகம்வடபழநி, சென்னை
தலைமையகம்
  • இந்தியா
முக்கிய நபர்கள்
ஆர். கே. செல்வமணி
பொதுச் செயலாளர்: அங்கமுத்து சண்முகம்,
பொருளாளர்: பி. என். சுவாமிநாதன்
சார்புகள்தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம்

வேலைநிறுத்தங்கள்

தொகு

ஜூன் 1997

தொகு

1997 சூனில் பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா படத்தின் படப்பிடிப்பின் போது பெப்சி சங்கத்தின் சில உறுப்பினர்கள் திடீர் வேலை நிறுத்தத்ததில் ஈடுபட்டனர். பினர் பெப்சி காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது. இது பின்னர் ஒரு பெரிய நெருக்கடிக்கு வழிவகுத்தது. இது மற்ற திரைப்பட அலகுகளையும் பாதித்தது. [2] தமிழ்நாடு அரசு தலையிட்டதால், ஒரு வாரத்திற்கு பிறகு பெப்சியின் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது. என்றாலும், தயாரிப்பாளர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக, பெப்சியுன் தொடர்புடைய எந்த தொழில்நுட்ப வல்லுநரையோ, பணியாளரையோ பணியில் ஈடுபடுத்த மாட்டோம் என்று கூறினர். தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் கலைஞர்களின் ஊதிய உயர்வால் 1997 இல் தமிழ் திரைப்படங்களுக்கு வணிக ரீதியான சுமையாக மாறியதாக அவர்கள் புகார் கூறினர். [3] கேரளம், ஆந்திராவில் உள்ள அமைப்புகளைப் போலவே தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பிற்காக தனியான புதிய அமைப்புகளை தொழிலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். பெப்சி அமைப்பின் தலைவர் விஜயன் தனது நிலையில் இருந்து பின்வாங்க மறுத்தது, முக்கிய நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் ஆதரவை திரட்ட முடியாதது போன்றவற்றால் பிரச்சினை அதிகரித்தது. [4] இந்த வேலைநிறுத்தத்தால் விஜயன் முக்கிய நபரானார். இது சில உறுப்பினர்களின் தற்கொலைக்கு காரணமாயிற்று. சிலர் இந்த வேலைநிறுத்தத்தால் தங்கள் சொத்துக்களை இழந்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் தாமதமான திரைப்படங்களில் மருதநாயகம், ஜீன்ஸ், சேது, காதல் ரோஜாவே ஆகியவை அடங்கும். திரைப்பட தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் தனது படமான ரட்சகன் ( ராஜாஜி ஹாலின் பிரம்மாண்டமான மாதிரி) படத்திற்காக அமைத்த ஒரு பெரிய கட்டமைப்பு மழையில் அழிந்தது. இதனால் அவரது இழப்பு 3 இலட்சம் என்று கூறினார். அந்த கட்டமைப்புக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல புதிய சியோலோ மகிழுந்துகளும் சேதமடைந்தன. இதன் விளைவாக மேலும் 7 லட்சம் இழப்பு ஏற்பட்டது, என்று அவர் கூறினார். [5] வேலைநிறுத்தம் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால் பல படங்களின் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டது. 1998 சூனில், பெப்சி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இரு அமைப்புகளின் பிரதிநிதிகளால் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. [6]

ஜூன் 2011

தொகு

பெப்சி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே ஊதியம் மற்றும் வேலை நேரம் குறித்து 2011 துவக்கத்தில் ஒரு சூடான சிக்கலாக மாறியது. மேலும் பெப்சி உறுப்பினர்கள் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினையில் உடனடியாக தீர்வு காண விரும்பினர். 2011 சூனில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர் [7]

பிப்ரவரி 2012

தொகு

2012 பிப்ரவரி தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு வார வேலைநிறுத்தம் நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமானது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை அமல்படுத்தக் கோரி கிட்டத்தட்ட 5000 பெப்சி தொழிலாளர்கள் வடபழனியில் உள்ள இசைக் கலைஞர் சங்கத்தில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012 ஏப்ரலில் வேலைநிறுத்தம் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதனால் பெரிய செலவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களின் வேலைகள் கெடவில்லை. பின்னர் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ். டி. செல்லபாண்டியனின் தலையீட்டால் விரைவில் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. [8] [9] [10]

ஜூன் 2013

தொகு

ஒளிப்படமி குழுவைச் சேந்த ஒருவர் தங்கள் தளவாடங்களுக்காக பெப்சி சங்கத்துக்கு உட்பட்ட ஓட்டுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு தனியார் நிறுவனத்தை வேலைக்கு அமர்த்தியதை ஓட்டுநர் சங்கம் அறிந்ததும் மோதல் ஏற்பட்டது. [11] 2013 மேயில் ஏற்பட்ட சில குழப்பங்களுக்குப் பிறகு, பெப்சி ஓட்டுநர் சங்கத்தினர் அனைத்து வாகனங்களையும் புறக்கணிக்கும் முடிவை அறிவித்தனர். 2013 சூலையில் பெப்சி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது. அதன்பிறகு திரைப்பட படப்பிடிப்புக்காக தானிகளில் உணவு ஏற்றி கொண்டு செல்ல முயன்றபோது, ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள் நெற்குன்றம் பாதையில் தாக்கியதாகக் கூறப்பட்டது. [12] இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

வேலைநிறுத்தத்தின் காரணமாக, தமிழ்நாடு சின்னத் திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராதிகா பெப்சியிலிருந்து விலகுவதாக சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். [13]

தலைவர்கள்

  • மே 2009 - எழுத்தாளர் வி. சி. குகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிலைமையை மேம்படுத்த்வதாகவும், தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் உறுதியளித்தார். [14] 2011 தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் அவர் 2011 இல் விலகினார். மேலும் பெப்சியில் இருந்து வெளியேறிய ராம நாராயணனுடன் ஒரே நேரத்தில் தனது பதவியை விட்டு வ்விலகினார்.
  • மே 2011 - குகநாதன் விலகியதைத் தொடர்ந்து எம். ஏ. ராமதுரை அப்பதவிக்கு வந்தார். ஜி. சிவா செயலாளராகவும், அங்கமுத்து சண்முகம் பொருளாளராகவும் இருந்தனர். [15]
  • ஜூன் 2012 - இயக்குனர் அமீர் பெப்சி தலைவர் தேர்தலில் மூத்த இயக்குனர் விசுவை தோற்கடித்தார். சிவா செயலாளராகவும், சண்முகம் பொருளாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [16] [17]

இதையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

 

  1. http://shodhganga.inflibnet.ac.in:8080/jspui/bitstream/10603/8930/14/14_chapter%209.pdf
  2. "Rediff On The NeT: Madras film strike: Producers demand their pound of flesh". m.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  3. "Rediff On The Net, Movies: Strike paralyses Madras film industry". m.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  4. "Archived copy". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Rediff On The Net, Movies:". m.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  6. "The Tribune...Nation". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  7. "FEFSI to strike from Monday?". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2011-06-08. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  8. "Clash brings Kollywood to a standstill!, FEFSI, strike". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  9. "FEFSI strike fails as Tamil movies carry on". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  10. "FEFSI calls off strike, Rumblings in TFPC". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2012-04-13. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  11. "Clash brings Kollywood to a standstill!, FEFSI, strike". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  12. "Unions’ clash puts film shoots on hold". https://www.thehindu.com/news/cities/chennai/unions-clash-puts-film-shoots-on-hold/article4760404.ece. 
  13. Ramakrishnan, Deepa H. (2013-05-30). "Film technicians’ union calls off strike, shoots to resume" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/chennai/film-technicians-union-calls-off-strike-shoots-to-resume/article4763699.ece. 
  14. "Archived copy". Archived from the original on 19 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  15. "Fefsi Workers To Fast - Fefsi - Producers Council - G Siva - Ma Ramadurai - Tamil Movie News - Behindwoods.com". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  16. "- Tamil Movie News". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  17. "Director Ameer elected as FEFSI president". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.