தேவபூமி துவாரகை மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம்
(தேவபூமிதுவாரகை மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேவபூமி துவாரகை மாவட்டம், (Devbhumi Dwarka district) குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியான, சௌராஷ்டிர தீபகற்பத்தில், கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் காம்பாலியம் நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் துவாரகாதீசர் கோயில் மற்றும் பேட் துவாரகை அமைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்
தேவபூமி துவாரகை மாவட்டம்
દેવભૂમિ દ્વારકા
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவிய நாள்15 அகஸ்டு 2013
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
இணையதளம்https://devbhumidwarka.nic.in

ஜாம்நகர் மாவட்டத்திலிருந்து துவாரகை போன்ற சில பகுதிகளை பிரித்து, 67-வது இந்திய சுதந்திர தினமான 15-08-2013-இல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கிர்சோம்நாத் மாவட்டம் உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏழு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது குசராத்து மாநிலம் 33 மாவட்டங்களுடன் உள்ளது[1][2]

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் காம்பாலியம் மற்றும் துவாராகை என இரண்டு வருவாய்க் கோட்டங்களும், காம்பாலியம், பவன்வாத், துவாரகை, ஜாம் கல்யாண்பூர் என 4 வருவாய் வட்டங்களும், நான்கு தாலுக்கா பஞ்சாயத்துகளும், 249 கிராமப் பஞ்சாயத்துகளும், 6 நகராட்சிகளையும் கொண்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 4,051 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொன்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,52,484 ஆகும். மாவட்டத்தின் ச்ராசரி எழுத்தறிவு 69:00% ஆக உள்ளது.

பார்க்கவேண்டிய இடங்கள்

தொகு
 
ஓகா துறைமுகம்

மகாபாரதத்தில் தேவபூமி துவாரகை

தொகு
 
துவாரகை கடற்கரை
 
துவாரகை கிருஷ்ணர் கோயில்

துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மகாபாரதத்தில் துவாரகை ஆனர்த்தா அரசின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், துவாரகை
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33
(91)
35
(95)
38
(100)
41
(106)
42
(108)
37
(99)
35
(95)
31
(88)
39
(102)
39
(102)
37
(99)
33
(91)
42
(108)
உயர் சராசரி °C (°F) 25
(77)
26
(79)
27
(81)
29
(84)
31
(88)
31
(88)
30
(86)
29
(84)
29
(84)
30
(86)
30
(86)
27
(81)
28.7
(83.6)
தாழ் சராசரி °C (°F) 15
(59)
17
(63)
21
(70)
24
(75)
27
(81)
27
(81)
27
(81)
26
(79)
25
(77)
24
(75)
20
(68)
16
(61)
22.4
(72.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5
(41)
8
(46)
7
(45)
17
(63)
20
(68)
22
(72)
21
(70)
21
(70)
22
(72)
17
(63)
9
(48)
8
(46)
5
(41)
பொழிவு mm (inches) 0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
50
(1.97)
170
(6.69)
60
(2.36)
30
(1.18)
0
(0)
0
(0)
0
(0)
310
(12.2)
ஈரப்பதம் 53 65 71 79 80 79 81 82 80 74 64 53 71.8
சராசரி மழை நாட்கள் 0 0 0 0 0 4 11 6 3 0 0 0 24
ஆதாரம்: Weatherbase[4]

இவற்றையும் காண்க

தொகு

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.dnaindia.com/ahmedabad/1874372/report-seven-new-districts-as-gujarat-s-i-day-gift
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 2013-09-13.
  3. Devbhumi Dwarka District Administration
  4. "Dwarka Climate Record". பார்க்கப்பட்ட நாள் 2 May 2012.

வெளி இணைப்புகள்

தொகு