தைப்பான் எல்ஆர்டி நிலையம்

கிளானா ஜெயா வழித்தடத்தில் இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம்

தைப்பான் எல்ஆர்டி நிலையம் அல்லது தைப்பான் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taipan LRT Station; மலாய்: Stesen LRT Taipan; சீனம்: 大班) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3]

 KJ32 
தைப்பான்

Taipan LRT Station
தைப்பான் எல்ஆர்டி நிலையம் (2017)
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Taipan (மலாய்)
大班 (சீனம்)
அமைவிடம்பெர்சியாரான் கெவாஜிப்பான், USJ6 47610 சுபாங் ஜெயா
சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°02′52″N 101°35′25″E / 3.04778°N 101.59028°E / 3.04778; 101.59028
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Rapid_KL_Logo ரேபிட் கேஎல்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம் கட்டணம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ32 
வரலாறு
திறக்கப்பட்டது30 சூன் 2016
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
யூஎஸ்ஜே 7
கோம்பாக் எல்ஆர்டி
 
கிளானா ஜெயா வழித்தடம்
 
வாவாசான்
புத்ரா அயிட்ஸ்

இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ6 சுற்றுப்புறங்களை இணைக்கிறது.[4]

அமைவு

தொகு

கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.

USJ6 பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், எஸ்எஸ்15 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.

சுபாங் ஜெயா SS12 - SS19; PJS7 / PJS9 / PJS11

தொகு

சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில், பண்டார் சன்வே (Bandar Sunway) நகர்ப் பகுதியைச் சேர்ந்த SS12 முதல் SS19 வரையிலான குடியிருப்புப் பகுதிகள்; PJS7 / PJS9 / PJS11 குடியிருப்புப் பகுதிகள்; ஆகியவற்றை இந்த மாநகரப் பகுதி கொண்டுள்ளது.

யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ Subang Jaya) அல்லது யூஇபி சுபாங் ஜெயா (UEP Subang Jaya) என்பது சுபாங் ஜெயா மாநகராட்சியின் கீழ் உள்ள நகர்ப்பகுதியாகும். யுனைடெட் புராஜெக்ட்ஸ் எஸ்டேட்ஸ் - சுபாங் ஜெயா (United Projects Estates Bhd. Subang Jaya) என்பதன் சுருக்கமே யூஎஸ்ஜே சுபாங் ஜெயா (USJ) ஆகும்.

கிளானா ஜெயா வழித்தடம்

தொகு

கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]

ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு

தொகு

இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.

கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6][7]

பேருந்து சேவைகள்

தொகு
பேருந்து தொடக்கம் இலக்கு பயண வழி
 T776   KJ31   SB7  யூஎஸ்ஜே 7 நிலையம் சுபாங் மேவா, யூஎஸ்ஜே 1  KJ32  தைப்பான் எல்ஆர்டி நிலையம்
 777   KJ32  தைப்பான் எல்ஆர்டி நிலையம்  KJ33  வாவாசான் எல்ஆர்டி நிலையம்  KJ33  வாவாசான் எல்ஆர்டி நிலையம்
 770  பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் சுபாங் மேவா, யூஎஸ்ஜே 1  KJ32  தைப்பான் எல்ஆர்டி நிலையம் யூஎஸ்ஜே 7  KJ31   SB7 
BET3 பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் சுபாங் மேவா, யூஎஸ்ஜே 1  KJ16  பங்சார் சாலை; யூஎஸ்ஜே 7;  KJ31   SB7  தைப்பான் எல்ஆர்டி நிலையம் யூஎஸ்ஜே 7  KJ32 
 SJ01   KJ28   KD09  சுபாங் ஜெயா நிலையம்  KJ31   SB7  யூஎஸ்ஜே 7 நிலையம்

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
  3. "SS18 LRT Station is a Light Rapid Transit station connects the SS15 and SS17 neighborhoods in Subang Jaya, Selangor. The Station is located at Jalan Jengka. It is operated under the Kelana Jaya Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 November 2024.
  4. "Taipan LRT station, station serving the neighborhood of USJ6 and USJ8 in UEP Subang Jaya in Subang Jaya – klia2.info" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  5. "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
  6. Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/. 
  7. "Projek Landasan Keretapi dari Subang ke Terminal Skypark Subang" [Railway Project from Subang to Subang Skypark Terminal]. Land Public Transport Commission of Malaysia.

வெளி இணைப்புகள்

தொகு