யூஎஸ்ஜே 7 நிலையம்
யூஎஸ்ஜே 7 நிலையம் (ஆங்கிலம்: USJ 7 Station; மலாய்: Stesen USJ 7; சீனம்: USJ 7 站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT); மற்றும் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடத்தின் (BRT Sunway Line) (BRT) விரைவுப் பேருந்து போக்குவரத்து; ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலையமாகும்.[2][3]
யூஎஸ்ஜே 7 நிலையம் (2015) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | பெர்சியாரான் கெவாஜிப்பான், USJ7 47610 சுபாங் ஜெயா சிலாங்கூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°03′18″N 101°35′31″E / 3.054888°N 101.591880°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில் ரேபிட் பேருந்து (BRT)[1] | |||||||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா
சன்வே பேருந்து | |||||||||||||||
நடைமேடை | 1 தீவு மேடை; 1 பக்க மேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
இணைப்புக்கள் | KJ31 SB7 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | KJ31 SB7 உயர்த்தப்பட்ட நிலையம் | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | KJ31 SB7 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | மே 2, 2015 மே 30, 2016 (LRT) | (BRT)|||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ 7 பகுதியில் அமைந்துள்ளது.
அமைவு
தொகுஇந்த நிலையத்திற்கு கிழக்கே அமைந்துள்ள யூஎஸ்ஜே 7 குடியிருப்புப் பகுதியின் (USJ 7 Neighbourhood) பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. 2 சூன் 2015-இல், சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் இந்த நிலையத்திற்கு சேவை செய்யத் தொடங்கியபோது இந்த நிலையமும் திறக்கப்பட்டது.[4]
பின்னர், நிலையத்தின் கிளானா ஜெயா வழித்தடத்தில் இலகுரக விரைவுப் போக்குவரத்து 30 சூன் 2016-இல் திறக்கப்பட்டது.[5] இந்த நிலையம் விரைவுப் பேருந்து; மற்றும் [[இலகு தொடருந்து|இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களுக்கான பரிமாற்ற நிலையமாக செயல்படுகிறது.
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[6]
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
தொகுஇந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[7][8]
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு | பயண வழி |
---|---|---|---|
T776 | KJ31 SB7 யூஎஸ்ஜே 7 நிலையம் | சுபாங் மேவா, யூஎஸ்ஜே 1 | KJ32 தைப்பான் எல்ஆர்டி நிலையம் |
770 | பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் | சுபாங் மேவா, யூஎஸ்ஜே 1 | KJ31 SB7 KJ32 தைப்பான் எல்ஆர்டி நிலையம் யூஎஸ்ஜே 7 |
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
தொகுசன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் அல்லது பிஆர்டி சன்வே வழித்தடம் (ஆங்கிலம்: BRT Sunway Line (BRT) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் பேருந்து வழித்தடம் ஆகும்.
இந்த வழித்தடம் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.
உலகின் முதல் முழு மின்சார விரைவுப் பேருந்துச் சேவை என்றும் பெயர் பெற்றுள்ளது.[9] இந்த வழித்தடம் ரேபிட் கேஎல் பேருந்து நிறுவனத்தால் இயக்கப்படுகிறது; மற்றும் பண்டார் சன்வே மற்றும் சுபாங் ஜெயாவில் மக்கள் அதிக அடர்த்தியான பகுதிகளுக்குச் சேவை செய்வதற்காக 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "SS18 LRT Station is a Light Rapid Transit station connects the SS15 and SS17 neighborhoods in Subang Jaya, Selangor". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 November 2024.
- ↑ Meor Riduwan Meor Ahmad (1 Jun 2015). "PM lancar BRT pertama Malaysia" (in ms) இம் மூலத்தில் இருந்து 18 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190518093127/https://www.hmetro.com.my/node/54980.
- ↑ "New LRT Kelana Jaya line extension to open June 30 as scheduled". 15 Apr 2016 இம் மூலத்தில் இருந்து 8 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190508072540/http://english.astroawani.com/malaysia-news/new-lrt-kelana-jaya-line-extension-open-june-30-scheduled-102490.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/.
- ↑ "Projek Landasan Keretapi dari Subang ke Terminal Skypark Subang" [Railway Project from Subang to Subang Skypark Terminal]. Land Public Transport Commission of Malaysia.
- ↑ "Malaysia Launches World's First Elevated Electric Bus Rapid Transit System". INSIDEEVs. Archived from the original on 6 April 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் USJ7 LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- USJ7 LRT station