எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம்
எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம் அல்லது எஸ்எஸ்18 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: SS18 LRT Station; மலாய்: Stesen LRT SS18; சீனம்: SS18站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2][3]
எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம் (2017) | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT SS18 (மலாய்) SS18站 (சீனம்) | ||||||||||
அமைவிடம் | பெர்சியாரான் ஜெங்கா, SS18 47500 சுபாங் ஜெயா சிலாங்கூர் மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°04′33″N 101°35′10″E / 3.0758°N 101.5861°E | ||||||||||
உரிமம் | பிரசரானா | ||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | ||||||||||
தடங்கள் | கிளானா ஜெயா | ||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | ரேபிட் கேஎல் | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
நடைமேடை அளவுகள் | 3 | ||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KJ30 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 30 சூன் 2016 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, SS18 சுற்றுப்புறங்களை இணைக்கிறது; மற்றும் இந்த நிலையம் சுபாங் ஜெயா ஜெங்கா சாலையில் அமைந்துள்ளது.
அமைவு
தொகுகிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது.
SS18 பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், எஸ்எஸ்15 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது.
சுபாங் ஜெயா
தொகுSS18, சுபாங் ஜெயா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
கிளானா ஜெயா வழித்தடம்
தொகுகிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[4]
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
தொகுஇந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[5][6]
பேருந்து சேவைகள்
தொகுசுபாங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயண வழி | இணைப்பு |
---|---|---|---|---|
SJ02 | KJ30 எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம் | SP25 பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் | பந்தாய் புதிய நெடுஞ்சாலை >>> டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை | 506 சுங்கை பீசி; 600 602 கிள்ளான் லாமா சாலை |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd, which is responsible for overseeing the urban rail lines of Ampang Line and Sri Petaling Line, Kelana Jaya Line, other than the Monorail Line services". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Prasarana is the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, they are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Rapid Rail Explorer. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.
- ↑ "SS18 LRT Station is a Light Rapid Transit station connects the SS15 and SS17 neighborhoods in Subang Jaya, Selangor. The Station is located at Jalan Jengka. It is operated under the Kelana Jaya Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 November 2024.
- ↑ "The LRT Kelana Jaya Line (Laluan Kelana Jaya) is a Light Rapid Transit train route operated by Rapid Rail that is part of the Klang Valley Integrated Transit System running through Kuala Lumpur city centre from Gombak to Putra Heights". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
- ↑ Menon, Priya (8 August 2014). "Work on railway line from Subang airport to KL Sentral has begun". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Community/2014/08/08/Full-steam-ahead-Work-on-railway-line-from-Subang-airport-to-KL-Sentral-has-begun/.
- ↑ "Projek Landasan Keretapi dari Subang ke Terminal Skypark Subang" [Railway Project from Subang to Subang Skypark Terminal]. Land Public Transport Commission of Malaysia.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் SS18 LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- SS18 LRT station