பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pusat Bandar Puchong LRT Station; மலாய்: Stesen LRT Pusat Bandar Puchong; சீனம்: 蒲種市中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
SP25 பண்டார் பூச்சோங் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| எல்ஆர்டி Pusat Bandar Puchong LRT Station | ||||||||||||||||
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் (2021) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை பண்டார் பூச்சோங் 47160, பூச்சோங், சிலாங்கூர் மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°1′59.8″N 101°36′57.7″E / 3.033278°N 101.616028°E | |||||||||||||||
உரிமம் | பிரசரானா | |||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில்[1] | |||||||||||||||
தடங்கள் | செரி பெட்டாலிங் | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | SP25 உயர்த்திய நிலை | |||||||||||||||
தரிப்பிடம் | 120 (கட்டணம்)[2] | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | 20 (கட்டணம்)[3] | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | SP25 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 31 மார்ச் 2016[4] | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
பொது
தொகு2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.[5][6]
11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாகக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.
அமைவு
தொகுஇந்த நிலையத்திற்கு முன்னதாக SP26 பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
கோலாலம்பூருக்கு தெற்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள இந்த நிலையத்திற்கு அருகில் தெஸ்கோ பேரங்காடி (Tesco Puchong) உள்ளது. டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் மீது ஒரு பாதசாரி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம், தாமான் வாவாசான் பூச்சோங் (Taman Wawasan Puchong) மற்றும் பண்டார் புத்திரி பூச்சோங்கின் (Bandar Puteri Puchong) குடியிருப்புகளுக்கு சேவை செய்கிறது. பூச்சோங் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
கட்டுமானம்
தொகுசெரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம்[7] ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd);[8] ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.
2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன[9]. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.[10][11]
கட்டிடக்கலை
தொகுபசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.[12]
நுழைவாயில்கள்
தொகுபண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் மொத்தம் இரண்டு நுழைவாயில்கள் / வெளியேறு வாயில்கள் உள்ளன
நிலைய அமைப்பு
தொகுP | பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும் | |
நடைபாதை 1 செரி பெட்டாலிங் | → செரி பெட்டாலிங் (→) செந்தூல் தீமோர் எல்ஆர்டி (பூச்சோங் ஜெயா எல்ஆர்டி ) | |
நடைபாதை 2 செரி பெட்டாலிங் | ← செரி பெட்டாலிங் (→) புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (பூச்சோங் பூங்கா) | |
பக்க மேடை, கதவுகள் இடதுபுறம் திறக்கும் | ||
C | ஒருங்கிணைவு நிலை | பயணச்சீட்டு தானியங்கி, தானியங்கி கட்டணக் கடவுகள், வாடிக்கையாளர் சேவை நிலையம், பாதசாரி பாலம் |
G | தெருநிலை | தரிப்பிடம், பேருந்து நிறுத்தம், பேருந்து தகவல் நிலையம், பல்பொருள் விற்பனைக் கடை |
* ஊனமுற்றோருக்கான சுமைதூக்கி |
சேவைகள்
தொகுஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.
திறப்பு | மூடுதல் | இறுதித் தொடருந்து | செந்தூல் தொடருந்து | புத்ரா தொடருந்து |
---|---|---|---|---|
காலை 06:00 மணி | இரவு 11:40 (திங்கள் - சனி) / இரவு 11:40 (ஞாயிறு) | சான் சோவ் லின் நிலையம் தொடருந்து மாற்றம் | இரவு11:45 (திங்கள் - சனி) / இரவு 11:10 (ஞாயிறு) | இரவு 12:36 (திங்கள் - சனி) / இரவு 12:36 (ஞாயிறு ) |
பேருந்து சேவைகள்
தொகுபேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
T600 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி | SP25 பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ⇌ பூச்சோங் ஜெயா[13][14] |
T604 | SP26 பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி | SP25 பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ⇌ பூச்சோங் ஜெயா[15] |
SJ02 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி | SP25 பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ⇌ KJ29 எஸ்எஸ்18 எல்ஆர்டி[16] |
506 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி | PY41 புத்ராஜெயா சென்ட்ரல் ⇌ பண்டார் உத்தாமா[17] |
600 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி | பூச்சோங் உத்தாமா ⇌ KJ14 பசார் செனி[18] |
601 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி | பூச்சோங் உத்தாமா ⇌ SBK16 பசார் செனி[19] |
602 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி | பூச்சோங் பெர்மாய் ⇌ SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி[20] |
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
தொகுஅம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
தொகுபண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2011 - 2019)
-
2017
-
2011
-
2011
-
2011
-
2019
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Park N' Ride - Rapid KL". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Bike N' Ride - Rapid KL". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ Ahmad, Azyyati (28 March 2016). "Empat stesen baharu LRT di Puchong beroperasi 31 Mac ini" (in ms). http://www.astroawani.com/berita-malaysia/empat-stesen-baharu-lrt-di-puchong-beroperasi-31-mac-ini-100151.
- ↑ "New Ampang LRT line to begin operations in 2015". Astro Awani. February 27, 2014.
- ↑ "Month-long free ride at four new LRT stations - Prasarana". Astro Awani. October 28, 2015.
- ↑ "George Kent's LRT line extension project worth RM955.84m". The Edge Markets. 2012-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
- ↑ "George Kent-Lion Pacific JV gets Ampang Line extension job". 2017-09-12. Archived from the original on 2017-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
- ↑ "Delay in Kelana Jaya-Ampang LRT line extension". The Edge Markets. 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
- ↑ Ahmad, Azyyati (March 28, 2018). "Empat stesen baharu LRT di Puchong beroperasi 31 Mac ini". Astro Awani (in மலாய்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
- ↑ "Najib: LRT extension project to benefit two million Klang Valley residents". The Star. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
- ↑ "As part of a green initiative, Kinrara BK5 LRT Station includes green practices. Energy-efficient lights and rainwater harvesting systems were installed in this Station. Windows were designed to allow sunlight into the stations". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 17 December 2024.
- ↑ "Bus - Rapid KL". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Number - Bus". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Number - Bus". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Bus Smart Selangor". portal.mpsj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Number - Bus". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Number - Bus". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Malaysia online express bus ticketing in Johor Bahru and Singapore". www.causewaylink.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
- ↑ "Number - Bus". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் IPusat Bandar Puchong LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Pusat Bandar Puchong LRT Station - KL MRT Line Integrations