பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்

ஐஓஐ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்

ஐஓஐ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: IOI Puchong Jaya LRT Station; மலாய்: Stesen LRT IOI Puchong Jaya; சீனம்: IOI 蒲种再也) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.

 SP24 
பூச்சோங் ஜெயா
| எல்ஆர்டி
IOI Puchong Jaya LRT Station
பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (2023)
பொது தகவல்கள்
அமைவிடம்டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை பூச்சோங் ஜெயா 47170, பூச்சோங்,
சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°3′17.2″N 101°39′23.2″E / 3.054778°N 101.656444°E / 3.054778; 101.656444
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  செரி பெட்டாலிங் 
நடைமேடை2 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை SP24  உயர்த்திய நிலை
தரிப்பிடம் 464 (கட்டணம்)
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு SP24 
வரலாறு
திறக்கப்பட்டது31 மார்ச் 2016[2]
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
கின்ராரா பிகே5
செந்தூல் தீமோர்
 
 ரேபிட் கேஎல் 
செரி பெட்டாலிங்
 
பண்டார் பூச்சோங்
புத்ரா அயிட்ஸ்
அமைவிடம்
Map
பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்

இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.

பொது

தொகு

2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.[3][4]

11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையத்திற்கு அருகில் ஐஓஐ வணிக வளாகம் (IOI Mall) உள்ளது. பூச்சோங் ஜெயா நகரின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.

கட்டுமானம்

தொகு

செரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம்[5] ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd);[6] ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.5

2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன[7]. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.[8][9]

கட்டிடக்கலை

தொகு

பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.[10]

சேவைகள்

தொகு

ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.

திறப்பு மூடுதல் இறுதித் தொடருந்து செந்தூல் தொடருந்து புத்ரா தொடருந்து
காலை 06:00 மணி இரவு 11:40 (திங்கள் - சனி) / இரவு 11:40 (ஞாயிறு) சான் சோவ் லின் நிலையம் தொடருந்து மாற்றம் இரவு11:45 (திங்கள் - சனி) / இரவு 11:10 (ஞாயிறு) இரவு 12:36 (திங்கள் - சனி) / இரவு 12:36 (ஞாயிறு )

பேருந்து சேவைகள்

தொகு
பேருந்து தொடக்கம் இலக்கு
 T600   SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி தாமான் வாவாசான் ⇌ பூச்சோங் ஜெயா
 600   SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி பூச்சோங் உத்தாமா ⇌ பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்
 602   SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி பூச்சோங் பெர்மாய் ⇌ பூச்சோங் ஜெயா
 T604   SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி கோத்தா ராயா ⇌ பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்பூச்சோங் ஜெயா
 SJ02   SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம்

அமைவு

தொகு

இந்த நிலையத்திற்கு முன்னதாக  SP25  பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக  SP22  கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையமும் உள்ளன.

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

தொகு

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

காட்சியகம்

தொகு

பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. Ahmad, Azyyati (28 March 2016). "Empat stesen baharu LRT di Puchong beroperasi 31 Mac ini" (in ms). http://www.astroawani.com/berita-malaysia/empat-stesen-baharu-lrt-di-puchong-beroperasi-31-mac-ini-100151. 
  3. "New Ampang LRT line to begin operations in 2015". Astro Awani. February 27, 2014.
  4. "Month-long free ride at four new LRT stations - Prasarana". Astro Awani. October 28, 2015.
  5. "George Kent's LRT line extension project worth RM955.84m". The Edge Markets. 2012-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  6. "George Kent-Lion Pacific JV gets Ampang Line extension job". 2017-09-12. Archived from the original on 2017-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  7. "Delay in Kelana Jaya-Ampang LRT line extension". The Edge Markets. 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  8. Ahmad, Azyyati (March 28, 2018). "Empat stesen baharu LRT di Puchong beroperasi 31 Mac ini". Astro Awani (in மலாய்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  9. "Najib: LRT extension project to benefit two million Klang Valley residents". The Star. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  10. "As part of a green initiative, Kinrara BK5 LRT Station includes green practices. Energy-efficient lights and rainwater harvesting systems were installed in this Station. Windows were designed to allow sunlight into the stations". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 17 December 2024.

வெளி இணைப்புகள்

தொகு