எங்கள் வீட்டு மகாலட்சுமி

அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(தோடி கோடலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எங்கள் வீட்டு மகாலட்சுமி 1957-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் இசை மாஸ்டர் வேணு. இது சரத் சந்திர சாட்டர்ஜி வங்காள மொழியில் எழுதிய "நிக்சுருதி" என்ற புதினத்தின் தழுவலாகும். இதே திரைப்படம் தெலுங்கிலும் "தோடி கோடலு" (1957) என்ற பெயரில் ஒரே காலப்பகுதியில் வெளியிடப்பட்டு, தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.[2]

எங்கள் வீட்டு மகாலட்சுமி
இயக்கம்ஏ. சுபராவ்
தயாரிப்புடி. மதுசூதனராவ்
அன்னபூர்ணா பிக்சர்சு
கதைசரத் சந்திர சட்டர்ச்சி (வசனம்)
மூலக்கதைநிக்சுருதி (புதினம்)
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
எஸ். வி. ரங்கராவ்
கே. ஏ. தங்கவேலு
நம்பியார்
ஏழுமலை
மாஸ்டர் சரத்பாபு
சாவித்திரி
கண்ணாம்பா
சுந்தரிபாய்
ராஜசுலோச்சனா
அங்கமுத்து
ஈ. வி. சரோஜா
ஒளிப்பதிவுபி. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புஅட்ருத்தி சுபராவ்
வெளியீடுபெப்ரவரி 1, 1957[1]
நீளம்17700 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

இந்த படம் ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகள் மற்றும் நன்மைகள், ஆகியவற்றை சித்தரிக்கிறது. குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க சிலர் எப்படி நிலைமையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். எனினும், ஒற்றுமை என்பது குடும்பத்தின் உயிர் மூச்சாகும் என்பதையும் காடுகிறார்கள். வழக்கறிஞர் கணபதி (எஸ். வி. ரங்கராவ்), அவரது மனைவி அன்னபூர்ணா (கண்ணாம்பா) ஆகிய இருவரும் குடும்பத்தின் மூத்தவர்கள், அவரது சகோதரர் ரமணயா, அவரது மனைவி அனுசுயா ஆகியோர் ஒன்றாக ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். கோபுவை (நாகேஸ்வரராவ்), இருவரும் தங்களுடைய உறவினர்களாகக் கருதுகின்றனர். அன்னபூர்ணா ஒரு தீவிர நோயாளியாக இருப்பதால் கோபுவின் மனைவி சுசீலா (சாவித்திரி) குடும்பத்தை கவனித்து வருகிறாள். அன்னபூர்ணா, சுசீலா ஆகியோரிடையே பொறாமையை ஏற்படுத்தி அனுசுயா அவர்களுக்கு இடையே பிளவை உருவாக்குகிறாள். இதனால் குடும்பத்தை விட்டு கோபுவும் அவனது மனைவியும் கிராமத்திற்கு செல்கின்றனர். கோபு விவசாயம் செய்து முன்னேறி வருகிறான், அரிசி ஆலையின் மேலாளர் வைகுந்தம் (எம். என். நம்பியார்) மற்றும் அவர்களின் தொலைதூர உறவினர் இருவரும் இக்குடும்பத்தின் மீது வீண் வதந்திகளை பரப்பி, ரமணையாவை மோசமாக சித்தரிக்க முயல்கிறார்கள். இது அனுசுயா மனந்திருந்த வழிவகுக்கிறது. கோபு குடும்பத்திற்காக போராட முடிவெடுத்து வைகுண்டத்தின் தீய செயல்களை கணபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். பின்னர், சத்யம் மற்றும் சுசீலா ஆகிய இருவரும் கூட்டு குடும்பத்திற்கு திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

நடிகர்கள் தொகு

தமிழ்ப் பட நடிகர்கள் தொகு

நடனம்

தெலுங்குப் பட நடிகர்கள் தொகு

படக்குழு தொகு

  • கலை: எஸ். கிருஷ்ணா ராவ்
  • நடனம்: ஏ. கே. சோப்ரா
  • வசனம்: ஆச்சார்யா ஆத்ரேயா
  • வபாடல்கள்: ஆச்சார்யா ஆத்ரேயா, ஸ்ரீ ஸ்ரீ, கொசராஜு, டப்பி தர்மா ராவ்
  • பாடியோர்: கண்டசாலா, பி. சுசீலா, ஜிக்கி, மாதவபெட்டி சத்யம்
  • இசை: மாஸ்டர் வேணு
  • உதவி இயக்குனர்: வி. மதுசூதன ராவ், கே. விஸ்வநாத்
  • கதை:சரத் சந்திர சாட்டர்ஜி
  • திரைக்கதை: அட்ருத்தி சுப்பா ராவ், டி. மதுசூதன ராவ், ஆச்சார்யா ஆத்ரேயா
  • ஒளிப்பதிவு: பி. எஸ். செல்வராஜ்
  • தயாரிப்பு: டி. மதுசூதன ராவ்
  • படத்தொகுப்பு - இயக்கம்:அட்ருத்தி சுப்பா ராவ்
  • பதாகை: அன்னபூர்ணா பிக்சர்ஸ்

ஒலித்தொகுப்பு தொகு

இப்படத்தின் இசையமைப்பு மாஸ்டர் வேணு. அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களை உடுமலை நாராயணகவி, அ. மருதகாசி, கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இயற்றியிருந்தனர். கே. ஏ. தங்கவேலு, கண்டசாலா, டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், கே. ராணி ஆகியோர் பாடியிருந்தனர்.[3]

இல. பாடல் பாடகர்கள் இயற்றியவர் நீலம் (நி:செ)
1 "காரிலே சவாரி செய்யும்" கண்டசாலா உடுமலை நாராயணகவி 04:00
2 "செந்திரு மாதும் கலை மாதும்" டி. வி. ரத்தினம் குழுவினர் 03:15
3 "பட்டணம்தான் போகலாமடி" சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா 04:30
4 "ஆடிப்பாடி வேலை செஞ்சா" கண்டசாலா, பி. சுசீலா 02:37
5 "உழுதுண்டு வாழ்வாரே...நாட்டுக்குப் பொருத்தம்" டி. எம். சௌந்தரராஜன் குழுவினர் 05:14
6 "பல காலம் வேதனை" பி. சுசீலா 02:58
7 "பொல்லாத பயலை சேர்த்திட மாட்டோம்" பி. சுசீலா, கே. ராணி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் 02:15
8 "மண்ணை நம்பி மரம் இருக்க" எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, 03:27
9 "காத்தாடி காத்தாடி" கண்டசாலா, பி. சுசீலா, கே. ராணி 02:59
10 "புருசன் சொல்லை கேட்காமே" கே. ஏ. தங்கவேலு
11 "விளக்கேற்றி வைக்கவும் இல்லை" ஜிக்கி அ. மருதகாசி 02:47

விருது தொகு

குறிப்புகள் தொகு

  1. "Engal Veettu Mahalakshmi". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 1 February 1957. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19570201&printsec=frontpage&hl=en. 
  2. Narasimham, M. L. (2015-02-19). "Blast from the past: Todikodallu (1957)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210825092929/https://www.thehindu.com/features/friday-review/blast-from-the-past-todikodallu/article6912892.ece. 
  3. ஜி. நீலமேகம். திரைக்களஞ்சியம்—பாகம் 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. பக். 123. 
  4. "5th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.

வெளி இணைப்புகள் தொகு