நல்லையா குமரகுருபரன்

ஆதவன் ஆகாஷ் நல்லையா குமரகுருபரன் (Adawan Akash Nalliah Kumaraguruparan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கணக்காளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஆவார். இவர் சனநாயகத் தேசிய முன்னணியின் தலைவராவார்.[1]

என். குமரகுருபரன்
N. Kumaraguruparan
கொழும்பு மாவட்ட மேல் மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2009–2014
கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
பதவியில்
2006–2009
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிசனநாயக தேசிய முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
துணைவர்ரதி மகாலிங்கசிவம்
பிள்ளைகள்அசோக்பரன், அபிசேக்பரன், ஆரண்யாகுமாரி
வேலைகணக்காளர்
சமயம்இந்து

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

குமரகுருபரன் முத்துத்தம்பி நல்லையா, சகுந்தலா (முன்னாள் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் த. மு. சபாரத்தினத்தின் மகள்) ஆகியோருக்கு பிறந்தார். ஆரம்பக் கல்வியை யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பயின்று, பின்னர் இந்தியாவில் கணக்கியலில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.

அரசியலில்

தொகு

குமரகுருபரன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[2][3] 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டும் தெரிவாகவில்லை.[4][5]

2000 சனவரியில் இவர் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] பின்னர் அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரானார்.[7]

2004 மே மாதத்தில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியில் சேர்ந்தார்.[8] அக்கட்சியின் சார்பில் 2004 மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவாகவில்லை.[9] பின்னர் இவர் 2006 உள்ளூராட்சித் தேர்தலில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபை உறுப்பினரானார்.[10] குமரகுருபரன் சனநாயக மக்கள் முனன்ணியின் பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டார்.[11]

குமரகுருபரன் 2009 மாகாணசபைத் தேர்தலில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு மேல் மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேமு வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவாகவில்லை.[13] 2014 மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[14][15] இதன் பின்னர் இவர் சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்களுடன் ஏற்பட்ட பிணக்கினால் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.[16][17]

இதன் பின்னர் சனநாயகத் தேசிய முன்னணி என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை இவர் ஆரம்பித்தார்.[18] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்சவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[19][20][21][22]

தேர்தல் வரலாறு

தொகு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றம்[3] யாழ்ப்பாண மாவட்டம் இதகா 538 தெரிவாகவில்லை
1994 நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் சுயேட்சை தெரிவாகவில்லை
2004 மாகாணசபை[9] கொழும்பு மாவட்டம் சமமு 1,940 தெரிவாகவில்லை
2006 உள்ளூராட்சி கொழும்பு மாநகரசபை சமமு தெரிவு
2009 மாகாணசபை[12] கொழும்பு மாவட்டம் ஐதேமு 30,373 தெரிவு
2010 நாடாளுமன்றம்[13] கொழும்பு மாவட்டம் ஐதேமு 34,205 தெரிவாகவில்லை
2014 மாகாணசபை கொழும்பு மாவட்டம் சமமு தெரிவாகவில்லை
2015 நாடாளுமன்றம்[22] கொழும்பு மாவட்டம் ஐகசுகூ 5,128 தெரிவாகவில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. "Presidency Is Not A Key Issue For Tamils". த சண்டே லீடர். 19 அக்டோபர் 2014. http://www.thesundayleader.lk/2014/10/19/presidency-is-not-a-key-issue-for-tamils/. 
  2. "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L. 9th Parliament of Sri Lanka (PDF). Associated Newspapers of Ceylon Limited. p. 183. Archived from the original (PDF) on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
  4. "Tamil Independent Groups Election Manifesto". Tamil Times XIII (8): 19-20. 15 ஆகத்து 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3384/3384.pdf. 
  5. "Result of parliamentary general election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Peiris, Roshan (30 சனவரி 2000). "New ACTC leader says no compromise on Tamil issue". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/000130/news4.html. 
  7. "LTTE will not go for talks with government : TNA MP". டெய்லி நியூசு. 6 சனவரி 2004. http://archives.dailynews.lk/2004/01/06/pol09.html. 
  8. "Dr. Kumaraguruparan joins WPF". டெய்லி மிரர். 4 மே 2004. http://archives.dailymirror.lk/2004/05/04/news/13.asp. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. 9.0 9.1 "Results of Provincial Council Elections 2004" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  10. "PART IV (B) — LOCAL GOVERNMENT Notice under the Local Authorities Elections Ordinance LOCAL AUTHORITIES ELECTIONS ORDINANCE (CHAPTER 262) Notice under Section 66 (2)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1447/36. 2 June 2006. http://www.documents.gov.lk/Extgzt/2006/Pdf/Jun/1447-36/1447-36e.pdf. பார்த்த நாள்: 10 ஜூலை 2016. 
  11. "The rise (or fall?) of Mano Ganesan". தி ஐலண்டு. 1 பெப்ரவரி 2009 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304085214/http://www.island.lk/2009/02/01/politics1.html. 
  12. 12.0 12.1 "Preferences Colombo" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
  13. 13.0 13.1 "Parliamentary General Election - 2010 Kandy Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-06-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
  14. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Notice under Section 22(1) ELECTION OF MEMBERS FOR THE WESTERN PROVINCE PROVINCIAL COUNCIL FROM THE ADMINISTRATIVE DISTRICT OF COLOMBO". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1849/01. 10 February 2014. http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Feb/1849_01/1849_01%28E%29.pdf. பார்த்த நாள்: 10 ஜூலை 2016. 
  15. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Western Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1856/09. 1 April 2014. http://www.documents.gov.lk/Extgzt/2014/PDF/Apr/1856_09/1856_09%20%28E%29.pdf. பார்த்த நாள்: 10 ஜூலை 2016. 
  16. "Mano Ganesan is a fascist leader - Kumaraguruparan". adaderana.lk. 9 April 2014 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304054257/http://www.adaderana.lk/news/mano-ganesan-is-a-fascist-leader-kumaraguruparan-. 
  17. "Nalliah expelled after exposing Mano". சண்டே ஒப்சர்வர். 13 ஏப்ரல் 2014 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304083019/http://www.sundayobserver.lk/2014/04/13/pol03.asp. 
  18. Satyapalan, Franklin R. (29 அக்டோபர் 2014). "DNF leader protests against arrest of man with UN war crimes complaint forms". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304081142/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=113034. 
  19. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1923/03. 13 July 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_03/1923_03E.pdf. பார்த்த நாள்: 10 ஜூலை 2016. 
  20. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  21. "Preferential Votes". டெய்லி நியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  22. 22.0 22.1 "Preferential Votes" (PDF). srilankanelections.com.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லையா_குமரகுருபரன்&oldid=3800127" இலிருந்து மீள்விக்கப்பட்டது