நீலநிறக் கரும் பிடரி அரசவால் ஈபிடிப்பான்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hypothymis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

நீலநிறக் கரும்பிடரி அரசவாலன் ஈபிடிப்பான் (Black-naped monarch) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் மோனார்க் ஈபிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த மெலிதான மற்றும் சுறுசுறுப்பான குருவி வரிசையைச் சேர்ந்த பறவை யாகும். இது பால் ஈருருமை கொண்டது. ஆண் பறவையின் பிடரியில் ஒரு தனித்துவமான கருப்புத் திட்டும், கழுத்தின் கீழ்ப்பகுதியில் முன் பக்கம் ஒரு கருப்புக்கோடும் காணப்படும். அதே சமயம் பெண் பறவை ஆலிவ் பழுப்பு நிற இறக்கைகளுடன் மங்கிய நிறத்திலும், பிடரியிலும், கழுத்திலும் கருப்புக் கோடுகள் இன்றியும் காணப்படும். ஆசிய அரசவால் ஈபிடிப்பானைப் ஒத்த குரல் கொண்டது. வெப்பமண்டல வன வாழ்விடங்களில் வாழக்கூடிய இவை, இணையாகவோ, பிற இனப் பறவைகளுடன் இணைந்து கூட்டமாகவோ இரை தேடக்கூடியது. இறகுகளின் நிறம் மற்றும் அளவுகளில் இப்பறவைகள் பிராந்திய ரீதியாக சற்று வேறுபடுகின்றன.

நீலநிறக் கரும் பிடரி அரசவால் ஈபிடிப்பான்
தாய்லாந்தில் உள்ள கேங் கிராச்சனில் ஒரு ஆண் பறவை
H. a. montana பெண் பறவை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hypothymis
இனம்:
இருசொற் பெயரீடு
Hypothymis azurea
(Boddaert, 1783)
Subspecies

See text

     approximate distribution

வகைப்பாடு தொகு

துணையினங்கள் தொகு

இதில் இருபத்தி மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [2]

  • H. a. styani( ஹார்ட்லாப், 1899) : இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து தென்கிழக்கு சீனம் மற்றும் வியட்நாம் வரை காணப்படும் ஃபிகெடுலா பேனத்தில் ஒரு தனி இனமாக முதலில் விவரிக்கப்பட்டது. ஆண் பறவைகளுக்கு வயிறு வெண்மையாக இருக்கும்.
  • H. a. oberholseriStresemann, 1913 : தைவானில் காணப்படுகிறது
  • H. a. ceylonensisSharpe, 1879 : இலங்கையில் காணப்படும் இது முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. ஆண் பறவைகளுக்கு கழுத்தில் கருப்புக் கோடு இல்லை.
  • H. a. tytleri( பீவன், 1867) : முதலில் மியாக்ரா பேனத்தில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. ஆண் பறவைகளின் வயிறு நீலமானது.
  • H. a. idiochroaOberholser, 1911 : கார் நிக்கோபாரில் (வடக்கு நிக்கோபார் தீவுகள் ) காணப்பட்டது. ஆண் பறவைகளின் வயிறு நீல நிறத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • H. a. nicobaricaBianchi, 1907 : தெற்கு நிக்கோபார் தீவுகளில் காணப்பட்டது. ஆண்களின் வயிறு நீல நிறத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • H. a. montana - ரிலே, 1929 : வடக்கு மற்றும் நடு தாய்லாந்தில் காணப்படுகிறது
  • H. a. galerita( Deignan, 1956), 1929 : தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு தாய்லாந்தில் காணப்படுகிறது
  • H. a. forrestiaOberholser, 1911 : மெர்குய் தீவுக்கூட்டத்தில் (மேற்கு மியான்மருக்கு அப்பால்) கண்டுபிடிக்கப்பட்டது
  • H. a. prophataOberholser, 1911 : மலாய் தீபகற்பம், சுமாத்திரா மற்றும் போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது
  • H. a. javana - சேசன் & க்ளோஸ், 1929 : சாவகம் மற்றும் பாலி (இந்தோனேசியா)
  • H. a. penidaeமீஸ், 1942 : நுசா பெனிடாவில் (பாலிக்கு அருகில் சிறு சுண்டாத் தீவுகளில் ) காணப்பட்டது
  • H. a. karimatensisChasen & Kloss, 1932 : கரிமாட்டா தீவில் (மேற்கு போர்னியோவில்) கண்டுபிடிக்கப்பட்டது
  • எச். ஏ. opisthocyaneaOberholser, 1911 : அனம்பாஸ் தீவுகளில் ( தென் சீனக் கடலில் ) காணப்பட்டது
  • H. a. gigantopteraOberholser, 1911 : நதுனா பெசாரில் (நடுனா தீவுகள், தென் சீனக் கடல்) காணப்படுகிறது
  • H. a. consobrinaRichmond, 1902 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது, சிமியுலுவில் (வடமேற்கு சுமத்ராவிற்கு வெளியே) காணப்படுகிறது
  • H. a. leucophilaOberholser, 1911 : சிபெருத் (மேற்கு சுமத்ராவிற்கு வெளியே) கண்டுபிடிக்கப்பட்டது
  • H. a. richmondi - ஓபர்ஹோல்சர், 1911 : எங்கனோ தீவில் (தென்மேற்கு சுமத்ராவிற்கு வெளியே) கண்டுபிடிக்கப்பட்டது
  • H. a. abbottiரிச்மண்ட், 1902 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது, ரியுசம் மற்றும் பாபி தீவுகளில் (வடமேற்கு சுமத்ராவிற்கு வெளியே) காணப்பட்டது
  • H. a. symmixtaStresemann, 1913 : மேற்கு மற்றும் மத்திய சிறு சுண்டத் தீவுகளில் காணப்பட்டது
  • பிலிப்பைன்ஸ் கரும்பிடரி அரசவால் ஈப்பிடிப்பான் ( H. a. azurea ) – ( Boddaert, 1783) : பிலிப்பைன்சில் காணப்படுகிறது ( கமிகுயின் தீவு தவிர)
  • H. a. aeriaபேங்சு & Peters, JL, 1927 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது, மரட்டுவா தீவில் (கிழக்கு போர்னியோவிற்கு வெளியே) காணப்படுகிறது
  • H. a. catarmanensisRand & Rabor, 1969 : காமிகுயின் சுர் தீவில் (தெற்கு பிலிப்பைன்ஸ்) காணப்படுகிறது

விளக்கம் தொகு

 
எச். ஏ. மொன்டானா தாய்லாந்தில்

முதிர்ச்சியடைந்த ஆண் நீலநிறக் கரும்பிடரி அரசவால் ஈப்பிடிப்பான் சுமார் 16 செ.மீ நீளம் கொண்டது. வெண்மையான கீழ் வயிற்றைத் தவிர இதன் உடல் முதன்மையாக வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் பிடரியில் பெரிய கரும்பட்டைக் காணப்படும். கழுத்தின் கீழ்பகுதியில் முன் பக்கம் ஒரு கருப்புக் கோடு காணப்படும். பெண் பறவை மங்கிய நிறம் கொண்டதாகவும், கருப்புக் கோடுகள், பட்டைகள் இன்றியும் இருக்கும். இதன் இறக்கைகளும் பின்புறமும் சாம்பல்-பழுப்பு நிறத்தில் இருக்கும். இருப்பினும், புவியியல் ரீதியாக இப்பறவைகளின் உடல் நிறத்தில் சிற்சில மாறுபாடுகள் காணப்படுகின்றன.

பரவலும் வாழ்விடமும் தொகு

ஈரான் மற்றும் இலங்கையின் கிழக்கில் இருந்து இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் வரை வெப்பமண்டல தெற்காசியா முழுவதும் நீலநிறக் கரும்பிடரி அரசவால் ஈப்பிடிப்பான் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்துவருகிறது. இந்த இனம் பொதுவாக அடர்ந்த காடுகள் மற்றும் மரங்கள் நிறைந்த வாழ்விடங்களில் காணப்படுகிறது.

இது ஸ்வீச்-விச் என்றோ ச்சீ-ச்சீ என்றோ உரத்தக் குரலில் கத்தியபடி கிளைக்கு கிளை சுறுசுறுப்பாகத் தாவி பறக்கக் காணலாம். இந்தியாவில் மே முதல் ஜூலை வரையிலான கோடைக்காலத்தில் முதன்மையாக இவை இனப்பெருக்கம் செய்கின்றன. புல், பாசி, சிலந்தி நூல் ஆகியன கொண்டு மரக்கிளைகளிடையே கோப்பை வடிவில் கூடு அமைக்கின்றன. கூட்டில் இரண்டு மூன்று முட்டைகளை இடுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Hypothymis azurea". IUCN Red List of Threatened Species 2016: e.T103715755A94105987. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103715755A94105987.en. https://www.iucnredlist.org/species/103715755/94105987. 
  2. "Monarchs". World Bird List Version 9.2. International Ornithologists' Union. 2019. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hypothymis azurea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: