பகதூர்கர்

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

பகதூர்கர் (Bahadurgarh), இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ஜாஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள 32 வார்டுகள் கொண்ட நகராட்சி ஆகும். தில்லியின் எல்லையை ஒட்டி அமைந்த பகதூர்கர் நகரம், தில்லிக்கு தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான ஜாஜ்ஜர் நகரத்திலிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திலிருந்து தில்லி-அமிர்தசரஸ்-கட்ராவுக்கு விரைவுச்சாலை செல்கிறது. பகதூர்கர் நகரத்திற்கு அருகில் அமைந்த நகரங்கள் தில்லி, குருகிராம், பரிதாபாத் மற்றும் சோனிபத் ஆகும். பகதூர்கர் நகரம் அரியானாவின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

பகதூர்கர்
நகரம்
பகதூர்கர் மெட்ரோ இரயில் நிலையத்தின் காட்சி
பகதூர்கர் மெட்ரோ இரயில் நிலையத்தின் காட்சி
பகதூர்கர் is located in அரியானா
பகதூர்கர்
பகதூர்கர்
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பகதூர்கர் நகரத்தின் அமைவிடம்
பகதூர்கர் is located in இந்தியா
பகதூர்கர்
பகதூர்கர்
பகதூர்கர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°41′N 76°55′E / 28.68°N 76.92°E / 28.68; 76.92
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்ஜாஜ்ஜர்
அரசு
 • நிர்வாகம்ஜாஜ்ஜர் நகராட்சி
 • தலைவர்திருமதி சரோஜ் ரதி
பரப்பளவு
 • மொத்தம்50 km2 (20 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,70,767 [1]
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
124507
தொலைபேசி குறியீடு01276
வாகனப் பதிவுHR-13 (தனிநபர்), HR-63 (வணிகம்)
பாலின விகிதம்1.13 /
சட்டமன்றத் தொகுதிபகதூர்கர்
உள்ளாட்சிபகதூர்கர் நகராட்சி

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 32 வார்டுகளும், 34,910 வீடுகளும் கொண்ட பகதூர்கர் நகரத்தின் மக்கள் தொகை 1,70,767 ஆகும். அதில் ஆண்கள் 91,721 மற்றும் பெண்கள் 79,046 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,083 மற்றும் 0 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 97.36%, இசுலாமியர் 1.57%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.34%, கிறித்தவர்கள் 0.13% மற்றும் பிறர் 0.05% ஆகவுள்ளனர். [2]

பொருளாதாரம்

தொகு

இந்தியாவின் தேசியத் தலைநகர் வலயத்தில் அமைந்த பகதூர்கர் நகரம் தொழிற்துறையின் மையமாக உள்ளது. தில்லி மேற்கு சுற்றுச்சாலை பகதூர்கர் நகரம் வழியாகச் செல்கிறது.

கல்வி

தொகு
 
அரியானா தொழில்நுட்ப நிறுவனம்
 
பி டி எம் பல்கலைக்கழகம், பகதூர்கர்
  • பி டி எம் பல்கலைக்கழகம்
  • அரியானா தொழில்நுட்ப நிறுவனம்
  • பி எல் எஸ் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
  • தில்லி தொழில்நுட்ப நிறுவன வளாகம்
  • அகிடா பொறியியல் கல்லூரி
  • எம் இ ஆர் ஐ பொறியியல் கல்லூரி
  • சைனிக் பள்ளி

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

பஞ்சாப்-உத்தரகாண்ட் மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9, இந்தியா பகதூர்கர் நகரம் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை ஹிசார்,ரோத்தக் மற்றும் தில்லி நகரங்களை இணைக்கிறது.[3]இந்நகரத்திலிருந்து தில்லி-அமிர்தசரஸ்-கட்ரா விரைவுச்சாலை செல்கிறது.

தில்லி மெட்ரோ

தொகு
 
தில்லி மெட்ரோவின் பகதூர்கர் நிலையம்

தில்லி மெட்ரோ 24 சூன் 2018 முதல் பகதூர்கர் நகரத்தையும், தில்லியையும் 50 நிமிடங்களில் இணைக்கிறது.

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பகதூர்கர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 27
(81)
31
(88)
38
(100)
43
(109)
46
(115)
51
(124)
44
(111)
40
(104)
39
(102)
38
(100)
33
(91)
29
(84)
47
(117)
உயர் சராசரி °C (°F) 23
(73)
26
(79)
32
(90)
39
(102)
43
(109)
43
(109)
38
(100)
35
(95)
35
(95)
34
(93)
30
(86)
25
(77)
33.5
(92.3)
தாழ் சராசரி °C (°F) 6
(43)
8
(46)
13
(55)
20
(68)
26
(79)
29
(84)
28
(82)
26
(79)
24
(75)
19
(66)
13
(55)
8
(46)
18.3
(64.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0
(32)
2
(36)
7
(45)
14
(57)
21
(70)
25
(77)
25
(77)
24
(75)
21
(70)
15
(59)
8
(46)
2
(36)
0
(32)
மழைப்பொழிவுmm (inches) 8
(0.31)
18
(0.71)
10
(0.39)
11
(0.43)
21
(0.83)
49
(1.93)
135
(5.31)
128
(5.04)
66
(2.6)
18
(0.71)
2
(0.08)
7
(0.28)
476
(18.74)
சராசரி மழை நாட்கள் 2.2 4.4 4.2 4 6.9 12 22.2 22.6 10.9 2.1 0.7 1.5 93.7
ஆதாரம்: MeteoBlue (Based on 30-year Data)[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  2. Bahadurgarh Population, Religion, Caste, Working Data Jhajjar, Hariyana - Census 2011
  3. "Transport in Bahadurgarh". பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  4. "Climate Details Bahadurgarh, Haryana". Meteoblue. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்கர்&oldid=3778309" இலிருந்து மீள்விக்கப்பட்டது