பகுப்பு பேச்சு:சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்

@Neechalkaran: சோதனை ஓட்டம் தொடங்கியதற்கு நன்றி. பின்வரும் மாறுதல்கள் தேவை:

இம்மாற்றங்களை மட்டும் செய்து அடுத்து 20 சோதனைக் கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டுகிறேன். தொடக்கத்தில் காணப்படும் பிழைகளை உடனுக்குடன் களைந்தால் அடுத்து 50, 100, 500, 1000 என்று வேகம் கூட்டி பதிவேற்றலாம். நன்றி. --இரவி (பேச்சு) 11:11, 6 மார்ச் 2017 (UTC)

இலக்கணப்படி கோவில் என்று பகுப்பில் வைக்கவும், மரபுப்படி கட்டுரையில் கோயில் என்று பயன்படுத்துதல்; பெரும்பாலான சிவத்தளங்களின் பகுப்பாக விக்கியில் சிவாலயம் என்றே இருப்பதால் அவ்வாறே பயன்படுத்தல்; கட்டுரையில் அல்லாமல் தகவற்பெட்டியில் (தலைப்பு மட்டுமல்ல) மூலவர் தாயார் போன்ற இடங்களில் அருள்மிகு என்று பயன்படுத்துதல் போன்றவையே எனது பரிந்துரை. ஒற்றைத்தன்மையான மொழிநடையை ஏற்றுவதில் விருப்பமில்லாவிட்டாலும் வேறுவழியின்றி நீங்கள் குறிப்பிட்டவற்றை சீர் செய்துள்ளேன். அடுத்த தொகுப்புகளைத் தற்போது ஏற்றியுள்ளேன். -அன்புடன் நீச்சல்காரன் (பேச்சு) 08:35, 18 மார்ச் 2017 (UTC)

@Neechalkaran:, இங்கு வேண்டியுள்ளவை என் தனிப்பட்ட விருப்பங்கள் அல்ல. தமிழ் விக்கிப்பீடியர்கள் கூடி உரையாடி ஏற்றுள்ள இணக்க முடிவு.

பார்க்க:

எனவே, சில வேளைகளில் நமது தனிப்பட்ட கருத்துக்கு மாறுபாட்டு இருந்தாலும் விக்கிச்சமூகத்தின் இணக்க முடிவைச் செயற்படுத்த வேண்டியது திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக நமது கடமை என்று கருதுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, எனக்கும் கூட கட்டுரைகளின் உள்ளடக்கம், குறிப்பிடத்தக்கமை, ஆயிரக்கணக்கில் புகும் வடமொழிச் சொற்கள் ஆகியவற்றில் முழுமையான உடன்பாடு கிடையாது. ஆனால், திட்டம் மேலும் காலம் தாழாமல் நிறைவேற வேண்டும் என்றே என்னால் இயன்றதை முயல்கிறேன்.

ஒரே கட்டுரைக்குள் பயன்படும் சொற்களில் சீர்மை வேண்டும். இது ஒற்றைத் தன்மையான மொழிநடை ஆகாது. எனவே தான், தகவற் பெட்டி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கோயில் என்று பயன்படுத்த இணக்க முடிவு எடுத்துள்ளோம். ஏற்கனவே சிவாலயங்கள் என்ற பகுப்புகள் உள்ள கட்டுரைகளை விட இனி புதிதாகப் பதிவேறும் கட்டுரைகள் கூடுதலாக இருக்கலாம். எனவே, பழைய கட்டுரைகளை மாற்றுவது தகும். --இரவி (பேச்சு) 10:06, 18 மார்ச் 2017 (UTC)

மார்ச்சு 18 சோதனைப் பதிவேற்றம் தொடர்பான கருத்துகள்

தொகு

@Neechalkaran:, ஏற்கனவே கோரிய மாற்றங்களைச் செயற்படுத்தி அடுத்த கட்ட சோதனைப் பதிவேற்றங்களைத் தந்தமைக்கு நன்றி. அடுத்தடுத்த ஏற்றங்களை விரைந்து செய்யலாம் என நினைக்கிறேன். நான் கவனித்த விசயங்கள். அனைவரும் இந்தே ஒரே பேச்சுப் பக்கத்தில் மட்டும் கருத்துகளைக் குவித்தால் அவற்றைக் கவனித்துச் சீராக்க உதவும்:

இதே மாற்றங்கள் தொடர்புடைய அனைத்து கட்டுரைகளுக்கும் பொருந்தும்.

மேற்கண்ட இரு மாற்றங்களைச் செயற்படுத்தி அடுத்த 50 கட்டுரைகளைப் பதிவேற்ற வேண்டுகிறேன். இன்று இரவுக்குள் 100, 500 என்று அடுத்த கட்ட சோதனைகளை முடித்து நாளை முழு பதிவேற்றத்தை மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:32, 18 மார்ச் 2017 (UTC)

இதனையும் பார்க்க:
  1. பேச்சு:அயலூர் பச்சைநாயகியம்மன் கோயில்.--Kanags \உரையாடுக 10:36, 18 மார்ச் 2017 (UTC)
  2. பேச்சு:அங்காளப்பட்டு செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோயில்
  3. பேச்சு:இராமநாதபுரம் நரசிங்கப்பெருமாள் கோயில்

@Neechalkaran:, --நந்தகுமார் (பேச்சு) 13:19, 18 மார்ச் 2017 (UTC)

@Neechalkaran:, என்னுடைய கருத்துக்களைக் கீழே காண்க.

  • "கோயில் அமைப்பு" என்னும் தலைப்பின் கீழ் உள்ள உள்ளடக்கம் பொருத்தமாக இல்லை. தலைப்பை மாற்றவேண்டும்.
  • "இக்கோயிலில் ----- சன்னதி உள்ளது." இது எல்லாக் கட்டுரைகளிலும் ஒரே மாதிரி வருகின்றது. ஆனால், கோயிலில் ஒரேயொரு சன்னதி இருந்தால்தான் இது பொருத்தமாக இருக்கும். ஒன்றுக்கு மேல் சன்னதிகள் இருந்தால் இது "இக்கோயிலில் ----- சன்னதிகள் உள்ளன." என்ற வடிவத்தில் வரவேண்டும்.
  • ஒரேயொரு சன்னதி இருக்கும்போது உண்மையில் "இக்கோயிலில் ----- சன்னதி உள்ளது." என்னும் வசனம் தேவையில்லை.
  • ஒன்றுக்கு மேல் சன்னதிகள் இருக்கும்போது மேலேயுள்ள வடிவத்தில் கோடிட்ட பகுதியில் "செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன்" என்றவாறு ஆங்கில வசன அமைப்பைத் (X, Y and Z என்பதுபோல்) தழுவி இருக்காமல், "செல்லியம்மன், நாகாத்தம்மன், --அம்மன் ஆகிய கடவுள்களுக்கு" என வருவது நல்லது.
  • "இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது." என்று வரும் இடங்களில் "இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது." என வரவேண்டும்.
  • " ------- நிர்வகிக்கப்படுகிறது." என்னும் வடிவத்தில் இடைவெளியை நிரப்பத் தகவல் இல்லாவிடில். அந்த வசனம் முற்றாக நீக்கப்பட வேண்டும். ஆனால், "நிர்வகிக்கப்படுகிறது." என்னும் ஒற்றைச் சொல் வசனம் வருகிறது. இவ்வாறு வரக்கூடாது.

தயவுசெய்து அவசரப்படவேண்டாம். மேலேயுள்ள எனது கருத்துக்களுடன் மற்றவர்களும் உடன்பட்டால் அத்திருத்தங்களையும் செய்தபின் 50 கட்டுரைகளைப் பதிவேற்றலாம். --- மயூரநாதன் (பேச்சு) 13:45, 18 மார்ச் 2017 (UTC)

@Neechalkaran:, மொத்தம் எத்தனை கட்டுரைகள் இவ்வாறு பதிவேற்ற உள்ளோம்? --- மயூரநாதன் (பேச்சு) 13:59, 18 மார்ச் 2017 (UTC)

  • கூழ்வார்தல் பத்து இடங்களில் வரக்கூடியச் சொல், பொங்கள் முப்பது இடம், இப்படிப் பட்டியலிட்டால் காலதாமதமே எஞ்சும். இவற்றை மொத்தமாக https://etherpad.wikimedia.org/p/tntemples இங்கே கொடுத்தால் தானியங்கி எடுத்துக் கொள்ளமுடியும். சிவப்பிணைப்புகளாக வரும் சட்டமன்ற, மக்களவைத் தொகுதிகள் கொண்ட கட்டுரையைத் தவிர்க்கிறேன்.
  • தலைப்பிற்குள் சன்னதிகள், குளம், கோசாலை, கோபுரம் போன்ற தகவல்கள் இருந்தால் வந்தமருவதால் "கோயில் அமைப்பு" என்று யாரோ பரிந்துரைத்தார்கள். உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் என்ன தலைப்பு என்று பரிந்துரைக்கலாம். ஒரு சன்னதிதான் உள்ளதெனப் பன்மை/ஒருமை பகுப்பாய்வில் இனம் கண்டால் அத்தொடரைத் தவிர்க்கிறேன். ஆனால் "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்ற நகைச்சுவைப்போல ஒவ்வொன்றாக மேலும் வெட்டினால் கட்டுரையில் மூன்றுவரிதான் எஞ்சும். இதர திருத்தங்களைச் சீர்செய்துகொள்கிறேன். மூலத்தரவுகள் எந்திரத்தால் புரிந்துகொள்ளுமளவிற்கு சீரில்லை. நம்மிடமுள்ள இயற்கை மொழியியல் நுட்பத்தால் உருவாவதாலேயே இப்பகுப்பிற்குள் இடுகிறோம் -நீச்சல்காரன் (பேச்சு) 10:30, 19 மார்ச் 2017 (UTC)

தகவற்பெட்டியின் தலைப்பில் கோவில் என்று பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆனால் இக்கட்டுரைகளின் தகவற்பெட்டியின் தலைப்பில் கோயில் என்றே உள்ளதே. இது ஏன்? --சிவகோசரன் (பேச்சு) 16:39, 19 மார்ச் 2017 (UTC)

இவ்வாறு இணக்கமுடிவு ஏற்பட்டதைக் கவனிக்கவில்லை. தலைப்பு உட்பட சீராகவே கோயில் எனப் பயன்படுத்தச் சொல்லி பரிந்துரை கிடைத்ததால் கோவில் என்ற சொல்லைத் தவிர்க்கச் செய்தேன். தற்போது இதை மாற்றிக்கொள்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:55, 20 மார்ச் 2017 (UTC)

@Neechalkaran:, கோரிய மாற்றங்களைப் பொறுமையுடன் அணுகி செயற்படுத்தித் தருவதற்கு நன்றி. ஊராட்சி கட்டுரைகளைப் போலன்றி இங்கு கோயிலின் தரவைப் பொருத்து கட்டுரை வடிவம் மாறுவதால் பயனர்கள் தொடர் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதனால், கிட்டத்தட்ட ஓராண்டாக இப்பணியில் ஈடுபட்டு வருவதினால் வரும் அயர்ச்சியையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்தடுத்த சோதனைப் பதிவேற்றங்களை முக்கிய சிக்கல்களை மட்டும் கவனித்து நகர்வோம். மிகக் குறைவான இடங்களில் வரக்கூடிய எழுத்துப் பிழைகளைத் தொடர்ந்து etherpadல் பதிகிறேன்.

@Mayooranathan:, முதற்கட்டமாக ஏறத்தாழ 7500 கட்டுரைகளை ஏற்ற எண்ணியுள்ளோம். 99,500 கட்டுரைகள் என்ற எண்ணிக்கையை எட்டும் போது, தற்காலிகமாக தானியக்கப் பதிவேற்றத்தை நிறுத்தி 1,00,000 என்ற எண்ணிக்கையை எட்டும் வரை நாம் வழமை போல் கட்டுரைகள் உருவாக்கத்தில் ஈடுபடுவோம். ஏனெனில், இந்த 1,00,000 எண்ணிக்கையை எட்டுவது பலருடைய பல ஆண்டுக் கனவாக உள்ளது. அதன் பிறகு, தரவுகளின் தன்மையைப் பொருத்து கூடுதலாக ஏறத்தாழ 12,500 கட்டுரைகள் ஏறலாம் என்று எதிர்பார்க்கிறேன். மொத்தம் ஏறத்தாழ 40,000 கோயில்களின் தரவு கிடைத்துள்ளது. ஆனால், அவற்றில் தரவு சீராக இல்லாத காரணத்தால் எஞ்சிய கட்டுரைகள் பின்னரே ஏற்றப்படக்கூடும். @Neechalkaran: உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இன்னொன்று, இந்து அறநிலையத்துறையிடம் இருந்து இத்தரவுகளைப் பெற்றுத் தர த. இ. க. தரப்பில் இருந்து மிகத் தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளார்கள். எனவே, இதன் விளைவாக கட்டுரைகள் ஏற்றப்படுவதைக் காணவும் மிகவும் ஆவலாக உள்ளார்கள். ஏறத்தாழ ஓராண்டாக கருத்துகளைப் பகிர்ந்து, தானியங்கிப் பதிவேற்றதைச் செம்மையாக்கி, சோதனைகளைச் செய்தே இக்கட்டத்தை அடைந்து உள்ளோம். மேலும் தாமதப்படுத்துவது தொடர்புடைய அனைவரையும் சோர்வுற வைக்கும். இயன்ற அளவு பெரிய தவறுகளைக் களைந்து கட்டுரைகளை ஏற்றிய பிறகு தொடர்ந்து மேம்படுத்த முனைவோம். நீங்கள் எடுத்துரைத்த பல்வேறு மாற்றங்களையும் நீச்சல்காரன் ஏற்கனவே செயற்படுத்தி விட்டார். கோயில் அமைப்பு என்பதற்குப் பதில் வேறு பொருத்தமான தலைப்பு இருந்தால் பரிந்துரைக்க வேண்டுகிறேன். நன்றி.

@Neechalkaran: அடுத்து 50 கட்டுரைகளை ஏற்றலாம் என்றே கருதுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:57, 20 மார்ச் 2017 (UTC)

@Neechalkaran:, @Ravidreams: 7500 கட்டுரைகளுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. 40,000 கோயில்கள் பற்றியும் கட்டுரைகளை எழுதுவதைத் தவிர்க்கவேண்டும். 130,000 கட்டுரைகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு கோயில்கள் பற்றிய தானியங்கிக் கட்டுரைகளாக இருப்பது நல்லது அல்ல. அத்துடன் இந்தக் கட்டுரைகளில் தகவல்களும் போதாது. விரிவாக்குவதற்கு வேண்டிய தகவல்களும் போதிய அளவில் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏற்கெனவே ஏராளமான தானியங்கிக் கட்டுரைகள் தமிழ் விக்கியில் உள்ளன. "ஏதாவது ஒரு கட்டுரை" என்ற இணைப்பை அழுத்தினால் 10 க்கு 7-8 கட்டுரைகள் தானியங்கிக் கட்டுரைகளாக அல்லது "திரைப்படங்கள்", "துடுப்பாட்டக்காரர்கள்" போன்ற Manually Mass Produced கட்டுரைகளாகவே வருகின்றன. இது தமிழ் விக்கியின் தரத்தைப் பேணுவதற்கு உகந்தது அல்ல. முன்னர் தானியங்கிக் கட்டுரைகள் விடயத்தில் நாம் மிகவும் கட்டுப்பாடாக நடந்துகொண்டோம். அந்தப்பாதையில் தொடரவேண்டும் என்பதுதான் எனது கருத்து. --- மயூரநாதன் (பேச்சு) 08:55, 20 மார்ச் 2017 (UTC)
கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பை தற்போது 7500 கட்டுரைகளுடன் நிறுத்திக்கொள்ளக் கேட்பது நல்லதல்ல. 40,000 கோயில்கள் பற்றியும் கட்டுரைகள் தேவையானவைதான். //இயன்ற அளவு பெரிய தவறுகளைக் களைந்து கட்டுரைகளை ஏற்றிய பிறகு தொடர்ந்து மேம்படுத்த முனைவோம்.// ஆம், நல்லது. "ஏதாவது ஒரு கட்டுரை" என்ற இணைப்பை அழுத்தினால் கிடைப்பதில் அதிகம் முறையற்ற பகுப்புடனும், உசாத்துணை அற்றும் வேறுபல சிக்கல்களுடனும் காணப்படுகின்றன. அதற்காக கட்டுரைகள் எழுதாமல் தரம் உயர்த்திக் கொண்டிருக்கவில்லை. இத்திட்டம் தொடரட்டும். --AntanO 09:16, 20 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:20, 20 மார்ச் 2017 (UTC)
@Mayooranathan:, பொதுவாக தானியங்கிக் கட்டுரைகளின் உள்ளடக்கம், எண்ணிக்கை பற்றிய உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன். வருங்காலத்தில், தானியங்கிப் பதிவேற்றக் கட்டுரைகளுக்கான அளவுகோல் இன்னும் மிக உயர்வாக இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். ஆனால், இத்திட்டம் கிட்டத்தட்ட ஓராண்டாக பல கட்டச் சோதனை, கருத்துக் கேட்பு, வாக்கெடுப்புக்குப் பிறகு தான் இக்கட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் ஏறத்தாழ 40,000 கட்டுரைகள் என்ற எண்ணிக்கை தெளிவாகச் சுட்டப்பட்டது. 7,500 கோயில் கட்டுரைகளை ஏற்றியிருக்கிறோம் என்பதைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ள 40,000 கோயில்கள் அனைத்தைப் பற்றிய தகவலையும் ஏற்றியிருக்கிறோம் என்பது கூடுதல் வரவேற்பையும் குறிப்பிட்ட துறை தகவலைத் தேடும் பயனருக்கும் பயனையும் தரக்கூடும். சுவீடிய விக்கிப்பீடியாவில் இலட்சக்கணக்கில் தானியங்கிக் கட்டுரைகள் ஏற்றி இருக்கிறார்கள். எனவே, பொதுவாக தானியங்கிக் கட்டுரையாக்கம் தவிர்க்கப்படுவதில்லை. அந்தந்த விக்கிச் சமூகங்களின் இணக்க முடிவுக்கு ஏற்ப தொடரலாம். --இரவி (பேச்சு) 09:37, 21 மார்ச் 2017 (UTC)
  விருப்பம் எதிர்காலத்தில் கட்டுரைகளில் கூடுதல் தகவல்களை சேர்த்து மேம்டுத்தலாம் ஓராண்டு உழைப்பை வீணாக்ககுதல் நல்லதல்ல--Arulghsr (பேச்சு) 10:11, 21 மார்ச் 2017 (UTC)
@Ravidreams:, @AntanO:, ஒரு வருட உழைப்பு இதற்குள் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேணுவதை முக்கியமாகக் கொள்ளவேண்டும். 40,000 கோயில் கட்டுரைகளைப் பதிவேற்றினால், தமிழ் விக்கிப்பீடியா "தமிழ்நாட்டுக் கோயில் கலைக்களஞ்சியம்" போலத் தோற்றம் அளிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு பல்துறைச் சமநிலை கொண்ட ஒரு கலைக்களஞ்சியமாக உருவாக்க வேண்டும் என்பதற்காகக் கவனமாகக் கொள்கை வகுத்துச் செயற்பட்டிருக்கிறோம். எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்வதில்லை என்பது நமது நிலைப்பாடாக இருந்தது. தானியங்கிக் கட்டுரைகள் மூலம் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்திருந்தால் ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஒரு இலட்சத்தை இலகுவாகத் தாண்டியிருக்கலாம். கட்டுரைகளில் தகவல்களும் மிகவும் குறைவாகவே உள்ளன. இவ்வளவு கட்டுரைகளையும் மேலும் பயனுள்ள தகவல்களைச் சேர்த்து வளர்த்து எடுப்பது என்பது இலகுவில் இயலக்கூடிய விடயம் அல்ல. ஓராண்டு உழைப்பை வீணாக்க வேண்டியதில்லை. போதிய கால இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவேற்றலாம். ஏன் அவசரப்படவேண்டும்? அத்துடன் இந்த 40,000 இல் அரைப்பங்காவது குறிப்பிடத் தகைமைக் கொள்கைக்கு ஏற்புடையவையாக இருக்குமா என்பதும் ஐயத்துக்கு இடமானதே. தற்போதைய நிலையில் 40,000 கோயில் கட்டுரைகளைப் பதிவேற்றுவது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பெருமளவு குறைக்கும். பிற மொழி விக்கிப்பீடியாக்களில் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்து தரத்தைக் குறைத்துக்கொள்ளக்கூடாது. ---மயூரநாதன் (பேச்சு) 11:00, 21 மார்ச் 2017 (UTC)

கோமங்கலம்புதூர் வேணுகோபாலசாமி கோயில் கட்டுரையில் புரட்டாசி சனி என உள்ளதை புரட்டாதிச் சனி எனவும் வேடசந்தூர்_தண்டாயுதபானிசுவாமி_கோயில் எனும் கட்டுரையில் தை பூசம் என்பதை தைப்பூசம் எனவும் மணியகாரன்பாளையம் காணியப்பர் மசராயர் கோயில் எனும் கட்டுரையில் கிருஷ்ணர் ஜெயந்தி என்பதை கிருஷ்ண ஜெயந்தி என இணைப்பிட்டு மாற்ற வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:32, 23 மார்ச் 2017 (UTC)

@Shriheeran: https://etherpad.wikimedia.org/p/tntemples பக்கத்தில் spelling mistakes என்ற பகுதியில் கீழ் இத்தகைய மாற்றங்களைப் பதியுங்கள். அடுத்தடுத்த தானியங்கி ஓட்டங்களில் கவனித்து மாற்றலாம். @Neechalkaran:, அண்மைய சோதனை ஓட்டத்துக்கு நன்றி. பெரிய மாற்றங்கள் ஏதும் தேவைப்படுவதாகத் தென்படவில்லை. அடுத்த கட்டமாக 100 கட்டுரைகள் வரை ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:24, 23 மார்ச் 2017 (UTC)
@Neechalkaran: மேலே ஸ்ரீஹீரனின் பதிவில் காணும் மூன்று கட்டுரைகளிலும் மேற்கோள்கள் இருக்கின்றன. ஆனால், பகுப்புப் பகுதியில் "மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்" என வருகின்றதே ஏன்? -- மயூரநாதன் (பேச்சு) 01:51, 24 மார்ச் 2017 (UTC)
"கூடுதல் சான்று தேவை" என்ற வார்ப்புருவை வரலாற்றுத் தகவல்வரிகளில் இட்டுள்ளதால் அதன் பொருட்டு இவ்வார்ப்புரு வருகிறது. -நீச்சல்காரன் (பேச்சு) 03:18, 24 மார்ச் 2017 (UTC)

24 மார்ச்சு சோதனைப் பதிவேற்றங்கள்

தொகு

@Neechalkaran:

  • நல்லூத்துக்குளி விநாயகர் கோயில், காட்டம்பட்டி மதுரைவீரன் கோயில் போன்ற கட்டுரைகளில் கட்டுரையின் வரலாற்றுப் பகுதியில் அறிய இயவில்லை என்று வருகிறது. ஆனால், தகவற்பெட்டியல் காலம் இருக்கிறது.
  • புதுப்பாளையம் பொன்னாச்சியம்மன் கோயில் கட்டுரையில் பெரிய பொன்னாச்சியம்மன் சன்னதி இருக்கிறது என்று இரு முறை வருகிறது. இது போன்ற பிழைகள் நிரலாக்கம் காரணமாக வேறு பல கட்டுரைகளிலும் இடம்பெற வாய்ப்புண்டு எனில் அதனைச் சுட்டிக் காட்டுவதே நோக்கம். குறிப்பிட்ட கோயிலுக்கான தரவு மட்டும் பிழை என்றால் ஒவ்வொரு கட்டுரையாகப் பார்த்து பிழை திருத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.
  • பெரியகுமாரபாளையம் சென்றாயபெருமாள் கோயில் கட்டுரையில் இருக்கும் ஒரே ஒரு சன்னதி பற்றிய தகவல் வருகிறது. ஆனால், போன சோதனை ஓட்டத்தில் இப்படி ஒரே ஒரு சன்னதி இருந்தால் அவற்றை ஒருமை/பன்மை பகுப்பாய்வில் விலக்கி விடுவதாகச் சொல்லி இருந்தீர்கள். அதே போல் வேறு பல கட்டுரைகளில் இந்தத் தகவல் நீக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் மட்டும் ஏன் வருகிறது என்று புரியவில்லை.

வேறு ஏதும் மாற்றங்கள் தென்படவில்லை. இந்த மாற்றங்களைச் செயற்படுத்தி அடுத்த கட்டச் சோதனைக்கு நகரலாம். --இரவி (பேச்சு) 06:53, 24 மார்ச் 2017 (UTC)

தேவைப்படும் மாற்றங்களைச்செய்து அடுத்த கட்ட முன்னாய்விற்கு நகரும் வகையில் அடுத்த 50/100 கட்டுரைகளை தரவேற்ற விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 06:56, 24 மார்ச் 2017 (UTC)
"அறிய இயலவில்லை" என்பது அரசர் பெயர் பகுதியில் வந்ததால் தவறாகப் புரிந்துகொண்டது. இனி அரசர்பெயர் தரவுகள் இருந்தால் அக்கட்டுரையை நான் சரிபார்க்காமல் ஏற்றாது. பெரிய பொன்னாச்சியம்மன் என்ற பெயர் மூலவர் மற்றும் தாயார் என்ற இரு இடங்களில் இருந்துள்ளதால் இருமுறை வந்துள்ளது, இனி பெயர் ஒப்பீடுகளையும் செய்யும். ஒரு சன்னதி இருந்தால் மட்டும் விலக்கிவிடாது அச்சன்னதி மூலவர் பெயரிலும் இருக்கவேண்டும். இங்குப் பெயரில் சிறிய மாற்றம் உள்ளது இப்படி நடந்துவிட்டது. இதைத் தவிர்க்கமுடியாது. அடுத்த தொகுப்புகளை ஏற்றுகிறேன்-நீச்சல்காரன் (பேச்சு)
@Neechalkaran: விளக்கங்களுக்கு நன்றி. தரவுகளை ஆய்ந்து நிரலாக்க முடிவுகளை எடுக்கும் பாங்கு வியக்க வைக்கிறது. கட்டுரைப் பதிவேற்றம் முடிந்த பிறகு இந்நிரலாக்கம் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை அளித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 08:29, 26 மார்ச் 2017 (UTC)

25 மார்ச்சு சோதனைப் பதிவேற்றம்

தொகு
  • @Neechalkaran: செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோயில் மற்றும் சில கட்டுரைகளில், ஒரு காலத் திட்டத்தின் கீழ் ஒரு காலப் பூசை நடக்கின்றது என்பது சொல்லிய தகவலை மீண்டும் சொல்வதைப் போல் அமைகிறது. வேறு பல கட்டுரைகளில் உள்ளதைப் போல் ஒரு காலப் பூசை நடக்கின்றது என்பதை மட்டும் சொன்னால் போதுமானது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடைபெறுகின்றது. என வரலாம். இதன் மூலம் இவ்வாறு ஒரு திட்டம் சில அரசுக் கோவில்களில் நடைமுறையில் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.--Kanags \உரையாடுக 09:50, 26 மார்ச் 2017 (UTC)
பரிந்துரை நன்று.--இரவி (பேச்சு) 13:11, 26 மார்ச் 2017 (UTC)
  • கோயில் அமைப்பு பகுதியில் 1927 ஆம் ஆண்டின் என்பது 1927ஆம் ஆண்டின் என்று இடைவெளி இல்லாமல் வர வேண்டும் என்று கருதுகிறேன். @Kanags: நடைக்கையேட்டு முறைமையை உறுதிப்படுத்த வேண்டுகிறேன்.
1927-ஆம் ஆண்டின் என இருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:50, 26 மார்ச் 2017 (UTC)
  • தற்போது பதிவேறும் கட்டுரைகள் அனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டக் கோயில்களாக உள்ளன. எனவே, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து ஏறுமாறு மற்றுமொரு 100 கட்டுரைகளைச் சோதனை ஓட்டமாகப் பதிவேற்ற முடியுமா? ஒரு வேளை மற்ற மாவட்டக் கோயில்களில் வேறு வகைத் தகவல் இருந்தால் அவை எப்படிப் பதிவேறுகின்றன என்று சரி பார்க்க உதவியாக இருக்கும். --இரவி (பேச்சு) 08:29, 26 மார்ச் 2017 (UTC)

இந்தச் சோதனைப் பதிவேற்றக் கட்டுரைகளில் மட்டுமன்றி முன்னைய சோதனைப் பதிவேற்றக் கட்டுரைகளிலும் உள்ள ஒரு விடயம். இதுபற்றி ஏற்கெனவே கலந்துரையாடப்பட்டதா என்றும் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, "செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோயில் என்பது தலைப்பாக இருந்தால், கட்டுரையின் முதல் வரி "தண்டாயுதபாணி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிக்காபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்." என வருகிறது. உண்மையில் "தண்டாயுதபாணி கோயில்" என்பது செட்டிக்காபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலைக் குறிக்காது. "செட்டிக்காபாளையம் தண்டாயுதபாணி கோயில்" என்றால்தான் அது செட்டிக்காபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலைக் குறிக்கும். எனவே எல்லாக் கட்டுரைகளினதும் முதல் வரியில் தலைப்பில் உள்ளதைப் போல் ஊரையும் சேர்த்துக் குறிப்பிடுவதே சரியாக இருக்கும். -- மயூரநாதன் (பேச்சு) 09:34, 26 மார்ச் 2017 (UTC)

ஆம், முழுப்பெயரையும் முதல் வரியில் சேர்ப்பது நல்லது.--Kanags \உரையாடுக 09:50, 26 மார்ச் 2017 (UTC)
நல்ல பரிந்துரை. இதனைச் செயற்படுத்தலாம். கவனிக்க:@Neechalkaran:--இரவி (பேச்சு) 13:11, 26 மார்ச் 2017 (UTC)

மேற்கோள் தேவைப்படும் கட்டுரை

தொகு

@Neechalkaran and Ravidreams: இந்தப் பகுப்பு அனேகமாக அனைத்துக் கட்டுரைகளிலும் சேர்க்கப்படுகிறது. இதனால் அனைத்து விக்கிக் கட்டுரைகளுக்கும் பொதுவான இப்பகுப்பு நிரம்பிக் காணப்படுகிறது. கோயில் கட்டுரைகள் அனைத்தும் பதிவேற்றப்பட்டவுடன் இப்பகுப்பில் உள்ள ஏனைய கட்டுரைகளை பராமரிப்பது கடினமாகிவிடும். இதனால், கோயில்களுக்கு என ஒரு உபபகுப்பு உருவாக்கி அப்பகுப்பினுள் இக்கட்டுரைகளை சேர்க்க வேண்டுகிறேன். அதற்கென பிறிம்பான ஒரு வார்ப்புருவும் உருவாக்கி தானியங்கிக் கட்டுரைகளில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 06:48, 31 மார்ச் 2017 (UTC)

நல்ல பரிந்துரை. இதனைச் செயற்படுத்தலாம். இதற்கு என வார்ப்புரு:கூடுதல் சான்று தேவை (கோயில்) என்ற பெயரில் தனி வார்ப்புரு உருவாக்கியுள்ளேன். எடுத்துக்காட்டுத் தொகுப்பை இங்கு காணலாம். கவனிக்க:@Neechalkaran:--இரவி (பேச்சு) 19:17, 4 ஏப்ரல் 2017 (UTC)
@Neechalkaran: வார்ப்புரு:cnt என்ற வழிமாற்றைக் கட்டுரைகளில் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 06:13, 6 ஏப்ரல் 2017 (UTC)
@Kanags: ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் வழிமாற்றாக ஒரு வார்ப்புருவை இட வேண்டாமே? சுருக்கம் கருதி எனில், cnt வார்ப்புருவையே நேரடியாகப் பயன்படுத்தலாம். அல்லது சாதேகோ என்பது போல தமிழ்ச் சுருக்கம் ஒன்றைப் பயன்படுத்தலாம் :)--இரவி (பேச்சு) 07:21, 6 ஏப்ரல் 2017 (UTC)

29 மார்ச்சு சோதனைப் பதிவேற்றம்

தொகு

@Neechalkaran and Ravidreams: "புலிப்பாறைப்பட்டி சுந்தராப் பெருமாள் கோயில்" கட்டுரையில், "புரட்டாசி மாதம் புரட்டாசி முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது." என்றும், "குப்பாம்பட்டி பெருமாள் கோயில்" கட்டுரையில் "புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் முக்கியத் திருவிழாக்களாக நடைபெறுகின்றன." என்றும் வசனங்கள் வருகின்றன. இவற்றில் சொற்கள் விடுபட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இவை நான் இடையிடையே பார்த்த கட்டுரைகளில் கண்டவை. வேறு கட்டுரைகளிலும் இவ்வாறு இருக்கக்கூடும். அத்துடன், "குப்பாம்பட்டி பெருமாள் கோயில்" கட்டுரையில் "ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் ஒருகாலப் பூசை நடக்கின்றது" என்ற தொடர் வருகிறது. "ஒருகாலப் பூசை" என இரண்டு தடவைகள் வருவது நன்றாக இல்லை. "ஒருகாலப் பூசைத் திட்டம்" என்றால் என்ன? --மயூரநாதன் (பேச்சு) 11:23, 31 மார்ச் 2017 (UTC)

ஒருகாலபூஜை என்பது அறநிலையத்துறையின் ஒரு திட்டம் அதனடிப்படையில் ஒன்று அல்லது தொண்டி தொண்டியம்மன் கோயில் போல ஒன்றுக்குமேல் ஒருகாலபூஜைகள் கோவிலில் நடைபெறுகின்றன. மேற்கோளில் உள்ள தரவுகளைக் காணலாம் திருவிழாக்கள் தொடர்பாகத் தகவல்கள் எதுவும் விடுபடவில்லை. திருவிழாவின் பெயரே புரட்டாசித் திருவிழா என்பதால் இவ்வாறு கணினி உருவாக்கிக் கொண்டது. இனி இதைச் சீர் செய்யமுயல்கிறேன் அல்லது தவிர்க்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 02:23, 1 ஏப்ரல் 2017 (UTC)

@Neechalkaran:, கோரிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தியமைக்கு நன்றி. ஒரு காலத் திட்டத்தின் கீழ் ஒரு காலப் பூசை நடைபெறுகிறது என்று வரும் இடங்களில் மட்டும் ஒரு காலத் திட்டத்தின் கீழ் பூசை நடைபெறுகிறது என்று நிரல் மூலம் மாற்றினால் நன்றாக இருக்கும். அடுத்த 500 கட்டுரைகளை ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். @Mayooranathan: ஓரளவுக்கு மேல் நிரல் மூலம் தரவை ஆய்வது கடினம் என்பதால் அனைத்துக் கட்டுரைகளையும் பகுப்பு:சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள் என்னும் மறை பகுப்பில் சேர்க்கிறோம். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு முறையாவது படித்துப்பார்த்து உரிய மாற்றங்களைச் செய்து இப்பகுப்பை விட்டு நீக்கும் வகையில் ஒரு பணிக்குழு உருவாக்க வேண்டி இருக்கும். --இரவி (பேச்சு) 19:23, 4 ஏப்ரல் 2017 (UTC)

tamilkalanjiyam.in

தொகு

இதில் சேர்க்கப்படும் கட்டுரைகள் tamilkalanjiyam.in கிடைக்கின்றன. இந்தத் தளத்தில் படைப்பாக்கப் பொதும உரிமத்தில் படைப்புக்கள் சேர்க்கப்படுகின்றன. அந்தத் தளத்தில் எந்த வகை அறிவு ஒழுங்குபடுத்தல் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் முதல் பக்கத்தில் இந்து சமயம் உள்ளது ஆனால் பிற சமயங்கள் இல்லை. தமிழக ஊராட்சிகள் உள்ளன, பிற நிலப் பிரிவுகள் இல்லை. இது தற்போதுத்தான் தொடங்கப்பட்டுள்ளது, எனவே மேம்பாடுகள் வரும் என்று எதிர்பார்க்கலாம். எனவே நாம் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

--Natkeeran (பேச்சு) 13:31, 6 ஏப்ரல் 2017 (UTC)

ஏப்ரல் 7 இறுதி சோதனை ஓட்டம்

தொகு

@Neechalkaran: இது வரையான சோதனை ஓட்டங்கள் நன்று. தகவல் பெட்டியில் வரலாறு என்பதன் கீழ் கட்டிய நாள் என்பதற்குப் பதில் காலம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்த மாற்றம் ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டது. பெரும்பாலானவை நூற்றாண்டுகள் பழமையான கோயில்கள் என்பதால் கட்டிய நாள்/தேதி கிடைக்காது என்று நினைக்கிறேன்.

@Booradleyp1: இத்தகைய கட்டுரைகளில் கோயில்கள் தொடர்பாக உள்ள சிகப்பு இணைப்புப் பகுப்புகளை முறையாக உருவாக்கி தக்க தாய்ப்பகுப்பில் இட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:29, 7 ஏப்ரல் 2017 (UTC)

கோயில் அமைப்பு பகுதியில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படிப்படி என இருக்கிறது. இது அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி என வர வேண்டும்.--Kanags \உரையாடுக 08:31, 7 ஏப்ரல் 2017 (UTC)
ஏற்கனவே கனகு கண்டுபிசாச்சு! வாழ்க கனக்ஸ் ஐயா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:46, 7 ஏப்ரல் 2017 (UTC)
சட்டப்படி என வரவேண்டியது சட்டப்படிப்படி என வந்துள்ளது. அவ்வாறு மாற்றங்கள் வரவேண்டிய கட்டுரைகள் இங்கே...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:45, 7 ஏப்ரல் 2017 (UTC)

@Neechalkaran:, @Ravidreams: தானியிங்கிக் கட்டுரைகளில் சிவன் கோயில் கட்டுரைகள் ”------மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்” என்ற பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ”----- மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்’ என்ற பகுப்பில் நிறைய கட்டுரைகள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு, பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் -பகுப்பில் 24 தானியிங்கிக் கட்டுரைகளும், பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள் -இல் 131 கட்டுரைகளும் உள்ளன. இதற்கானத் தீர்வைப் பரிந்துரைத்தால் மேற்கொண்டு தொடர உதவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:21, 8 ஏப்ரல் 2017 (UTC)

@Neechalkaran:, எந்தெந்த மாவட்டங்களின் கோயில்களுக்கான கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற பட்டியல் கிடைத்தால் சிவப்பிணைப்பில் உள்ள பகுப்புக்களை அடையாளம் கண்டு அவற்றை உருவாக்குவது எளிதாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 15:21, 8 ஏப்ரல் 2017 (UTC)

சிவாலயப் பகுப்பே தான் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் சிவன் கோயில் என்று அனைத்தையும் மாற்றிக் கொள்ளவே மற்றவர்கள் விரும்பினார்கள். எனவே அனைத்து மாவட்டமும் உருவாக்கப்படவுள்ளதால் அனைத்தையும்தான் மாற்ற வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:38, 8 ஏப்ரல் 2017 (UTC)
@Neechalkaran:, சிவப்பிணைப்புப் பகுப்புகளை உருவாக்குவதற்கு எளிதாக ஏற்கனவே உங்கள் தானியிங்கி உருவாக்கிய கோயில் கட்டுரைகளின் மாவட்டங்களின் பெயர்களைத் தந்து உதவுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
@Ravidreams:சிவன் கோயில்கள் என உள்ள சிவப்பு இணைப்புப் பகுப்புகளை உருவாக்கியபின்னர், சிவாலயங்கள் என்ற பகுப்புகளில் உள்ள கட்டுரைகளை சிவன் கோயில்கள் பகுப்பிற்கு தானியிங்கி மூலம் மாற்ற முடியுமா? நாமே மாற்றுவது சிரமம். அல்லது சிவாலயங்கள் பகுப்பில் ஒன்றிணைப்பு வார்ப்புரு இட்டு விடலாமா?--Booradleyp1 (பேச்சு) 04:22, 9 ஏப்ரல் 2017 (UTC)
@Ravidreams: @Neechalkaran: கிருட்டிணகிரி மாவட்ட கோயில்கள் தானியக்கக் கட்டுரைகளில் பெரும்பாலான கட்டுரைகளின் தகவல் சட்டத்தில் அமைவிடம் என்ற இடத்தில் ஊர் பெயரை அடுத்து தருமபுரி வட்டம் என வருகின்றது மாவட்டமே வேறான நிலையில் அதில் தவறாக தருமபுரி வட்டம் என்பதை மாற்றி சரியான வட்டம் வருமாறு மாற்றியமைக்க வேண்டுகிறேன்--Arulghsr (பேச்சு) 04:24, 12 ஏப்ரல் 2017 (UTC)
தகவல் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வட்டம் தொடர்பான தகவல்கள் இனி இருமுறை சோதித்தே கட்டுரையாக்கப்படும். பதியேறிய கட்டுரைகளை மெல்லமெல்ல மாற்றிவிடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:17, 12 ஏப்ரல் 2017 (UTC)

@Neechalkaran: உல்லட்பு உத்தம கரகம் கோயில் என்ற கட்டுரையில் உள்ள ஊரின் பெயர் உல்லட்டி என்று இருக்க வேண்டுமென கருதுகிறேன் உல்லட்டி என்ற பெயரில்தான் ஒசூர் பக்கத்தில் ஊர் உள்ளது.உல்லட்பு என்ற பெயரில் எந்த ஊரும் இல்லை என்றே கருதுகிறேன் ஊர்பெயரை ஒரு முறை சரிபார்துவிடுங்கள்--Arulghsr (பேச்சு) 06:33, 12 ஏப்ரல் 2017 (UTC)

அரசுத் தரவே அவ்வாறு உள்ளதால் அக்கட்டுரையை நீக்குவோம். -நீச்சல்காரன் (பேச்சு)

@Neechalkaran: உல்லட்டி என்று எழுதியதை டி என்ற எழுத்தை பி என புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பிழையாக இருக்கக்கூடும்--Arulghsr (பேச்சு) 10:14, 12 ஏப்ரல் 2017 (UTC)

ஏப்ரல் 15 கட்டுரைகள்

தொகு

@Neechalkaran: தாராபுரம் பாலதண்டாயுதபானி சாமி கோயில் -தாராபுரம் பாலதண்டாயுதபா”ணி” சாமி கோயில் என வரவேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 06:36, 15 ஏப்ரல் 2017 (UTC)

Return to "சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்" page.