பயனர்:Neechalkaran/எண்ணிக்கை3
அனைத்துப் பட்டியல்களையும் சரி பார்த்து உதவவும்.
ஒவ்வொரு முறை மாற்றுச் சொற்களைத் தந்து சேமிக்கும் போதும், உறுதியாக ஏற்புடைய சொற்களின் வரிசைகளை நீக்கி விடுங்கள். இதனால் ஒவ்வொரு முறையும் பட்டியல் சிறிதாகிக் கொண்டே வந்து கவனம் குவிக்கவும் பிறகு ஒன்று திரட்டி உரையாடவும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, இந்த மாற்றத்தைக் காணுங்கள். சில ஊர் பெயர்கள், சொற்கள் ஏற்புடையன போல தோன்றும். ஆனால், சிறு பிழை இருக்கக் கூடும். எனவே, கவனித்து உறுதிப்படுத்தி நீக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, கீழ்வேளுர் தவறு. கீழ்வேளூர் சரி. விருத்தாசலம் புழக்கத்தில் உள்ளது. ஆனால், முதன்மைக் கட்டுரை விருத்தாச்சலம் என்றே உள்ளது.