கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்
(கீழ்பென்னாத்தூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கீழ்பென்னாத்தூர் (ஆங்கிலம்:Kilpennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் வட்டம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கீழ்பென்னாத்தூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

கீழ்பென்னாத்தூர்
KILPENNATHUR
திருவண்ணாமலை புறநகர் பகுதி
முதல் நிலை பேரூராட்சி
அடைபெயர்(கள்): திருவண்ணாமலை புறநகர் பகுதி
கீழ்பென்னாத்தூர் is located in தமிழ் நாடு
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
கீழ்பென்னாத்தூர் is located in இந்தியா
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°15′01″N 79°13′32″E / 12.2502272°N 79.2256532°E / 12.2502272; 79.2256532
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்திருவண்ணாமலை
சட்டமன்றத் தொகுதிகீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைமுதல் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்திருவண்ணாமலை
 • மக்களவை உறுப்பினர்திரு.சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. கு.பிச்சாண்டி
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்13,718
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
604 601
வாகனப் பதிவுTN 25
ஊராட்சி ஒன்றியம்கீழ்பென்னாத்தூர்
சென்னையிலிருந்து தொலைவு176 கி.மீ.
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு18 கி.மீ.
புதுச்சேரியிலிருந்து தொலைவு88 கி.மீ.
வேட்டவலத்திலிருந்து தொலைவு23 கிமீ
விழுப்புரத்திலிருந்து தொலைவு61 கி.மீ.
பெங்களூரிலிருந்து தொலைவு221 கி.மீ.
திண்டிவனத்திலிருந்து தொலைவு50 கி.மீ.
இணையதளம்கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி

அமைவிடம்

தொகு

இந்த நகரம் பெங்களூரு - திருவண்ணாமலை - புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 16 கி.மீ. உள்ள கீழ்பெண்ணாத்தூர் அருகே அமைந்த தொடருந்து நிலையம் திருவண்ணாமலை ஆகும். இதன் கிழக்கில் செஞ்சி 18 கி.மீ.; வடக்கில் வேட்டவலம் 23 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

12.44 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3152 வீடுகளும், 13,718 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4100 மற்றும் 93 ஆகவுள்ளனர். [3]

நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பிச்சாண்டி
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி, கீழ்பென்னாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

ஆதாரங்கள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  3. Kilpennathur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்பெண்ணாத்தூர்&oldid=4127671" இலிருந்து மீள்விக்கப்பட்டது