பக்கான் மாவட்டம்
பக்கான் மாவட்டம் (மலாய்: Daerah Pakan; ஆங்கிலம்: Pakan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவில் உள்ள ஒரு துணை மாவட்டம்; மற்றும் பக்கான் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது 924.6 சதுர கிலோமீட்டர்கள் (357.0 sq mi) பரப்பளவைக் கொண்டது. இந்நகரம் சரிக்கே நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பக்கான் மாவட்டம் Pakan District Daerahr Pakan | |
---|---|
ஆள்கூறுகள்: 1°52′00″N 111°41′00″E / 1.86667°N 111.68333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சரிக்கே பிரிவு |
மாவட்டம் | பாக்கான் துணை மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 924.6 km2 (357.0 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 15,462 |
• அடர்த்தி | 16/km2 (40/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 96xxx |
இனம்[3] | இபான் (95.3%) சீனவர் (1.9%) மலாயர் (0.8%) மலாயர் அல்லாதோர் (0.35%) மெலனாவு (0.25%) பிடாயூ மக்கள் (0.25%) |
இணையதளம் | www |
இந்த நகரம், முற்றிலும் நிலங்களால் சூழப்பட்ட நில அமைப்பைக் கொண்டுள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தத் துணை மாவட்டத்தின் மக்கள் தொகை மதிப்பீடு 15,462 ஆகும்.[4]
பொது
தொகுஇங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் இபான் மக்கள் (95%+); மற்றும் சிறுபான்மை இனத்தவர்களாகச் சீனர்கள் உள்ளனர். சீனர்கள், பொதுவாக அதன் நகரப் பகுதியில் அதிகமாய் வாழ்கின்றனர்.
மலாய்க்காரர்களில் சிறுபான்மையினர் ஆசிரியர்கள், செவிலியர்கள், மாவட்ட அலுவலகர்கள்; மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற அரசாங்கத் துறைகளில் பணிபுரிகின்றனர்.
சொற்பிறப்பியல்
தொகுபாக்கான் என்ற பெயர் புவா பாக்கான் (Buah Pakan) என்ற டுரியான் உள்ளூர் பழத்திலிருந்து பெறப்பட்டது. இந்தப் பழம் மஞ்சள் நிறத் தோலையும் சதையையும் கொண்டுள்ளது.[5] பாக்கான் நகரத்தின் எண்டபாய் சாலைச் சந்திப்பில் நகரத்தின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
தொகுஜுலாவ் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பக்கான் பகுதி, 1973 முதல் துணை மாவட்டமாக நிர்வாகிக்கப்பட்டது. 1 மார்ச் 2002 அன்று, இப்பகுதி ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு சரிக்கே பிரிவின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. [6]
மக்கள்தொகையியல்
தொகு1991 முதல் 2000 வரை பக்கான் மாவட்ட மக்கள்தொகை 1.38% அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. இதற்கிடையில், 2000 முதல் 2010 வரை, 0.37% அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. [7]
ஆண்டு | 1991 | 2000 | 2010 | 2020 |
---|---|---|---|---|
மொத்த மக்கள்தொகை | 12,882 | 14,591 | 15,135 | 15,462 |
பொருளாதாரம்
தொகு2019-ஆம் ஆண்டில் மலேசிய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவின் மிக ஏழ்மை நிலை மாவட்டமாக இந்த மாவட்டம் உள்ளது. சராசரி ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக மாதத்திற்கு RM 2,760 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இம்மாவட்டம் அரசு அமைச்சின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்பட்டு வருகிறது.[8] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாவட்டத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 96.9% ஆக இருந்தது, 3.4% வேலையின்மை, 8,800 பேர் வேலையிலும், 300 பேர் வேலையில்லாமலும் உள்ளனர். [9]
நகரம் மற்றும் கிராமங்கள்
தொகுபக்கான்
தொகுபக்கான் மாவட்ட அலுவலகம் பாக்கன் மாவட்டத்தை நிர்வகிக்கிறது. [10]
நாங்க என்டை
தொகுசெப்டம்பர் 2019 இல் நாங்க என்டை தார் சாலையுடன் இணைக்கப்பட்டது [11]
நாங்க வாக்
தொகுநங்க வாக்கை உலு ஜுலாவுடன் இணைக்கும் ஒரு சாலை உள்ளது.[12] 2016ம் ஆண்டு நிலவரப்படி, இப்பகுதியில் தண்ணீர், மின்சாரம் இல்லாத நிலை இங்குள்ளது. [13]
நாங்க காரா
தொகுஇப்பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. [14]
உளு என்டபாய்
தொகுபக்கான் நகரத்திலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் உளு என்டபாய் அமைந்துள்ளது. இங்கு நங்கா கெமலிஹ் பொது சுகாதார மருத்துவமனை, [15] [16] எஸ்கே உலு என்தாபாய் (தொடக்கப்பள்ளி) ஆகியவை அமைந்துள்ளன. [17] ஒரு புதிய மருத்துவமனை, நிர்வாகத் தொகுதி, எஸ்.கே. உலு என்தாபாய்க்கு எதிரே உள்ள பணியாளர்கள் குடியிருப்புக் கொண்ட ஒரு மேம்பாட்டுத் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது.[18] இத்திட்டம் 2019 இல் கட்டுமானத்தைத் தொடங்கியது மார்ச் 2021 இல் 70% முன்னேற்றத்தை எட்டியது. [19]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Profail Daerah Pakan". The Official Website of Sarikei Divisional Administration. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
- ↑ [1] பரணிடப்பட்டது 2022-02-28 at the வந்தவழி இயந்திரம், Jabatan Perangkaan Malaysia, Retrieved 28 February 2022
- ↑ 3.0 3.1 "Total population by ethnic group, sub-district, and state, Malaysia, 2010 (Table 28.1, page 377)" (PDF). Statistics Department, Malaysia. Archived from the original (PDF) on 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
- ↑ "SARAWAK FACTS & FIGURES". Population By Administrative District. State Planning Unit. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
- ↑ Yii, Yuk Seng (November 2010). Collection of historical material on the chinese community in Sarikei Division (First ed.). Sibu, Sarawak: Sarawak Chinese Cultural Association. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-9360-49-3.
- ↑ "Profail Daerah Pakan (Pakan District Profile)". Sarikei Divisional Office. Archived from the original on 2 February 2019. பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.
- ↑ "Table 8: Number of persons and average annual population growth rate (per cent) by state and administrative district, 1991, 2000 and 2010 (cont'd, page 35)" (PDF). Statistics Department, Malaysia. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
- ↑ "Pakan poorest district in Malaysia – Report". The Borneo Post. 29 January 2019 இம் மூலத்தில் இருந்து 29 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190129015432/http://www.theborneopost.com/2019/01/29/pakan-poorest-district-in-malaysia-report/.
- ↑ "Spotlight on poverty, Pakan, Sarawak" (PDF). Wiki Impact. Archived from the original (PDF) on 4 March 2023. பார்க்கப்பட்ட நாள் 9 April 2023.
- ↑ "Pengenalan Pejabat Daerah Pakan (Introduction to Pakan District Office)". Official Portal of Sarikei Divisional Administration. Sarikei Divisional Office. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
- ↑ "Jalan Nanga Engkamop ke Nanga Entaih siap (Road access from Nanga Engkamop to Nanga Entaih completed)". Maklum.my. https://www.maklum.my/2019/09/26/jalan-nanga-engkamop-ke-nanga-entaih-siap/.
- ↑ "Nanga Wak Pakan-Ulu Julau road in dire need of repair". The Borneo Post. 30 January 2014 இம் மூலத்தில் இருந்து 21 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171221222621/https://www.theborneopost.com/2014/01/30/nanga-wak-pakan-ulu-julau-road-in-dire-need-of-repair/.
- ↑ Zulkifli, Zulaikha (1 May 2016). "Lack of water, electricity bigger deal than BN infighting". Malaysiakini இம் மூலத்தில் இருந்து 18 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170118103242/http://www.malaysiakini.com/news/339894.
- ↑ "Pendidikan kunci kehidupan lebih baik (Education the key to better life)". Utusan Borneo. 28 November 2017 இம் மூலத்தில் இருந்து 23 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200523011509/https://www.utusanborneo.com.my/2017/11/28/pendidikan-kunci-kehidupan-lebih-baik.
- ↑ "Sarawak to get two hospitals under 10th Malaysia Plan". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2010/11/17/sarawak-to-get-two-hospitals-under-10th-malaysia-plan/.
- ↑ "Percepat naik taraf Klinik Kesihatan Nanga Kemalih (Faster upgrade of Nanga Kemalih health clinic)". The Borneo Post. https://www.theborneopost.com/2015/10/09/percepat-naik-taraf-klinik-kesihatan-nanga-kemalih/.
- ↑ "Sarawakian girl runs barefoot in cross country championship, wins first place for Girls U12 category". The Borneo Post. https://www.theborneopost.com/2022/08/08/sarawakian-girl-runs-barefoot-in-cross-country-championship-wins-first-place-for-girls-u12-category/.
- ↑ "Ulu Entabai clinic to be ready by August". The Borneo Post. https://www.theborneopost.com/2017/01/03/ulu-entabai-clinic-to-be-ready-by-august/.
- ↑ "Deputy Minister of Health II Visit - Klinik Kesihatan Ulu Entabai". JKR Sarawak. Archived from the original on 26 August 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Pakan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.