பஞ்சாப்பின் மக்கள்வகைப்பாடு (இந்தியா)

2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பஞ்சாப்பின் மக்கள்தொகை ஏறக்குறைய 27.7 மில்லியன் ஆகும். சீக்கியமே பெரும்பான்மை மத நம்பிக்கை ஆகும். குறிப்பாக மக்கள் தொகையில் 58% மக்கள் சீக்கிய நம்பிக்கையாளர்,  38% மக்கள்  இந்து சமயத்தவர் மீதமுள்ள மக்கள் சமணம்,  இசுலாம், பௌத்தம், கிறித்தவம் போன்ற சமயங்களை பின்பற்றுகின்றனர்.[3]

சீக்கியர்களின் புனிதக் கோயிலான,  பொற்கோயில் (அல்லது  ஹர்மந்திர் சாஹிப் ) புனித நகரான  அம்ரித்சர்ரில் உள்ள, அகால் தக்த் வளாகத்தில் உள்ளது. இது உலகில் உள்ள சீக்கியர்களின் ஐந்து பீடங்களில் ஒன்று. மூன்று பீடங்கள் பஞ்சாப்பில் உள்ளன இதில், அனந்த்பூர் சாஹிப் என்பது குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது.  பஞ்சாப்பில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் குறைந்தது ஒரு சீக்கிய குருத்வாராவை (பல்வேறு பாணிகள் மற்றும் அளவுகளில்) காணலாம்.

பஞ்சாபி மொழி குர்முகி எழுத்தில் எழுதப்படுகிறது. இதுவே மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். முஸ்லிம்கள் லேசான பெரும்பான்மையுடன் மலிர்கோட்லா நகரில் வாழ்கின்றனர். பஞ்சாப்பில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 1.93% அதிகரித்துள்ளது காரணம் வேலைதேடி பிற இந்திய மாநிலங்களில் இருந்து முதன்மையாக பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் குடியேரியதே காரணமாகும்.

மாவட்டவாரியாக மதத்தினர் எண்ணிக்கை (2011)[3]
# மாவட்டம் சீக்கியர் இந்து முஸ்லீம் கிருத்தவர் சமணர் பௌத்தர் பிற சமயத்தவர் சமயத்தை வெளிப்படுத்தாதவர்
1 அமிர்தசரஸ் 1716935 690939 12502 54344 3152 876 1044 10864
2 பர்னாலா 467751 112859 13100 622 246 108 481 360
3 பட்டிண்டா 984286 380569 16299 2474 1266 246 559 2826
4 பரித்கோட் 469789 141363 3125 1227 1109 155 103 637
5 பதேகாட் சாகிப் மாவட்டம் 427521 152851 16808 1698 178 48 251 808
6 பெரோஸ்பூர் 1090815 906408 6844 19358 1143 454 278 3774
7 குர்தாஸ்பூர் 1002874 1074332 27667 176587 580 405 812 15066
8 ஹோசியார்பூர் 538208 1000743 23089 14968 2034 3476 531 3576
9 ஜலந்தர் 718363 1394329 30233 26016 4011 11385 805 8448
10 கபூர்தலா 453692 336124 10190 5445 553 6662 334 2168
11 லூதியானா 1863408 1502403 77713 16517 19620 2007 1254 15817
12 மான்சா 598443 156539 10375 917 1577 123 493 1284
13 மோகா 818921 158414 9388 3277 436 178 365 4767
14 முக்த்சர் சாகிப் 638625 254920 4333 1681 744 240 433 920
15 பட்டியாலா 1059944 783306 40043 5683 1914 245 1410 3141
16 ரூப்நகர் 361045 304481 14492 2094 653 118 143 1601
17 சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் 478908 476276 29488 5342 1257 257 239 2861
18 சங்கரூர் 1077438 389410 179116 2406 3222 268 1038 2271
19 சாகித் பகத் சிங் நகர் 192885 401368 6829 1479 695 5885 266 2903
20 தரண் தரண் 1044903 60504 3855 6095 650 101 47 3472
பஞ்சாப் (மொத்தம்) 16004754 10678138 535489 348230 45040 33237 10886 87564
மாவட்டவாரியாக மதத்தினர் எண்ணிக்கை (2011)[3]
# மாவட்டம் சீக்கியம் இந்து முஸ்லீம் கிருத்தவம் சமணம் பௌத்தம் பிற சமயங்கள் சமயம் குறிப்பிடாதவர்கள்
1 அமிர்தசரஸ் 68.94% 27.74% 0.50% 2.18% 0.13% 0.04% 0.04% 0.44%
2 பர்னாலா 78.54% 18.95% 2.20% 0.10% 0.04% 0.02% 0.08% 0.06%
3 பட்டிண்டா 70.89% 27.41% 1.17% 0.18% 0.09% 0.02% 0.04% 0.20%
4 பரித்கோட் 76.08% 22.89% 0.51% 0.20% 0.18% 0.03% 0.02% 0.10%
5 பதேகாட் சாகிப் 71.23% 25.47% 2.80% 0.28% 0.03% 0.01% 0.04% 0.13%
6 பெரோஸ்பூர் 53.76% 44.67% 0.34% 0.95% 0.06% 0.02% 0.01% 0.19%
7 குர்தாஸ்பூர் 43.64% 46.74% 1.20% 7.68% 0.03% 0.02% 0.04% 0.66%
8 ஹோசியார்பூர் மாவட்டம் 33.92% 63.07% 1.46% 0.94% 0.13% 0.22% 0.03% 0.23%
9 ஜலந்தர் 32.75% 63.56% 1.38% 1.19% 0.18% 0.52% 0.04% 0.39%
10 கபூர்தலா 55.66% 41.23% 1.25% 0.67% 0.07% 0.82% 0.04% 0.27%
11 லூதியானா மாவட்டம் 53.26% 42.94% 2.22% 0.47% 0.56% 0.06% 0.04% 0.45%
12 மான்சா 77.75% 20.34% 1.35% 0.12% 0.20% 0.02% 0.06% 0.17%
13 மோகா 82.24% 15.91% 0.94% 0.33% 0.04% 0.02% 0.04% 0.48%
14 முக்த்சர் சாகிப் 70.81% 28.26% 0.48% 0.19% 0.08% 0.03% 0.05% 0.10%
15 பட்டியாலா 55.91% 41.32% 2.11% 0.30% 0.10% 0.01% 0.07% 0.17%
16 ரூப்நகர் 52.74% 44.47% 2.12% 0.31% 0.10% 0.02% 0.02% 0.23%
17 சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் 48.15% 47.88% 2.96% 0.54% 0.13% 0.03% 0.02% 0.29%
18 சங்கரூர் 65.10% 23.53% 10.82% 0.15% 0.19% 0.02% 0.06% 0.14%
19 சாகித் பகத் சிங் நகர் 31.50% 65.55% 1.12% 0.24% 0.11% 0.96% 0.04% 0.47%
20 தரண் தரண் 93.33% 5.40% 0.34% 0.54% 0.06% 0.01% 0.00% 0.31%
பஞ்சாப் (மொத்தம்) 57.69% 38.49% 1.93% 1.26% 0.16% 0.12% 0.04% 0.32%

மேற்கோள்கள்

தொகு
  1. "Census Population" (PDF). Census of India. Ministry of Finance India. Archived from the original (PDF) on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. 3.0 3.1 3.2 "Population by religious community: Punjab". 2011 Census of India. பார்க்கப்பட்ட நாள் 2015-08-27.