பத்ரேஸ்வரர் சமணர் கோயில்

பத்திரேஸ்வரர் சமணக் கோயில் (Bhadreshwar Jain Temple), என்றழைக்கப்படும் வசாய் சமணக் கோயில் சமணத்தின் இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதருக்கு அர்பணிக்கப்பட்ட, 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும்.

கட்ச் பத்ரேஸ்வரர் சமணக் கோயில்
வசாய் சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பத்ரேஸ்வர், கட்ச் மாவட்டம், குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்22°54′42.1″N 69°54′14″E / 22.911694°N 69.90389°E / 22.911694; 69.90389
சமயம்சமணம்

அமைவிடம் தொகு

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின், கட்ச் மாவட்டத்தின் முந்திரா வருவாய் வட்டத்தில், முந்திரா துறைமுகத்திலிருந்து 32 கிமீ தொலைவிலும், புஜ் நகரத்திற்கு தெற்கில் 75 கிமீ தொலைவிலும், மாண்டவிக்கு கிழக்கே 69 கிமீ தொலைவிலும் பத்திரேஸ்வர் சமணக் கோயில் அமைந்துள்ளது..[1][2]

வரலாறு தொகு

பண்டைய சமணக் கோயிலான இதனை அவ்வப்போது சீரமைத்தும், மறுசீரமைத்தும் கட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.[2] இக்கோயில் கிமு449ல் பத்திராவதி மன்னர் சித்தசேனர் என்பவர் சீரமைத்தார்.[3][4]பல்லாண்டுகள் கழித்து இக்கோயிலை இடித்து, கிபி 1125ல் தேவசந்திரன் என்ற சமணர் இக்கோயிலுக்கு அடித்தளமிட்டார். [5][6] 26 சனவரி,2011 குஜராத் நிலநடுக்கத்தின் போது இக்கோயில் முற்றிலும் சேதமடைந்தது.[7][8][9][10][11]

கட்டிடக் கலை தொகு

2011 நிலநடுக்கத்தில் முற்றிலும் சேதமடைந்த இக்கோயிலை, இடித்து விட்டு, இராஜஸ்தான் மாநிலத்தின் தில்வாரா கோயில் போன்ற கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளது. 85 அடி நீளம், 48 அடி அகலம் கொண்ட கோயிலின் மகா மண்டபத்தைச் சுற்றிலும் 24 சமணத் தீர்த்தங்கரர்கள், அருகதர்கள் மற்றும் கணாதரர்களுக்குமான 52 சன்னதிகளும், அதற்கான கோபுரங்களும் கொண்டது. கோயிலின் கருவறையில் நடுவில் அஜிதநாதர், வலப்புறத்தில் பார்சுவநாதர், இடப்புறத்தில் சாந்திநாதர் பளிங்குக் கல் உருவச் சிலைகள் உள்ளது. [6][7]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "CSE analyses: EIA report of thermal power project, Bhadreshwar, Kutch, Gujarat". Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2017-10-25.
 2. 2.0 2.1 "Bhadreshwar". Gujarat Tourism, Government of Gujatat. Archived from the original on 27 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2014.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-25.
 4. http://travel.india.com/kutch/places-to-visit/temples-bhadreshwar-jain-temple/
 5. "Gujarat Guide : Kutch". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-10-25.
 6. 6.0 6.1 Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha (Public Domain text). Printed at the Government Central Press. 1880. pp. 213–215.
 7. 7.0 7.1 James Burgess (1876). Report on the Antiquities of Kutch & Kathiawar: Being the Result of the Second Season's Operations of the Archaeological Survey of Western India, 1874-1875. Sindhi Adabi Board. pp. 205–210. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016. Alt URL பரணிடப்பட்டது 29 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம்
 8. Newly Built Bhadreshwar Jain Tirth , Kutch
 9. Vasai Jain Tirth, Bhadreswar
 10. Photo of old Bhadreshwar Jain Temple பரணிடப்பட்டது 2017-05-28 at the வந்தவழி இயந்திரம் Old Jain Temple, with rubble of structure destroyed in earthquake, which can be seen.
 11. "53 Jinalaya Temple of Bhadreshwar Tirth (Construction)". Archived from the original on 2010-06-24. பார்க்கப்பட்ட நாள் 2017-10-25.

வெளி இணைப்புகள் தொகு