பன்னாட்டு சரக்கு வானூர்தி நிறுவனம்
பன்னாட்டு சரக்கு வானூர்தி நிறுவனம் அல்லது ஆசிய கார்கோ நிறுவனம் (ஆங்கிலம்: World Cargo Airlines; மலாய்: Syarikat Penerbangan Kargo Dunia; (Gading Sari)) (3G/WCM) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம் ஆகும்.
| |||||||
நிறுவல் | 1996 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 3 | ||||||
சேரிடங்கள் | 12 | ||||||
தாய் நிறுவனம் | 1. ஆசிய கார்கோ நிறுவனம் Asia Cargo Network Sdn Bhd 2. போஸ் அவியேசன் நிறுவனம் Pos Aviation Sdn Bhd | ||||||
தலைமையிடம் | மலேசியா | ||||||
பணியாளர்கள் | 167 |
முன்பு இந்த நிறுவனம், போஸ் ஏசியா கார்கோ எக்ஸ்பிரஸ் (Pos Asia Cargo Express Sdn Bhd) அல்லது போஸ் ஏஸ் POS ACE என மிகவும் பிரபலமாக அறியப்பட்டது.
பொது
தொகுதற்போது, இந்த நிறுவனத்தின் முதல் போயிங் 737-400F (Boeing 737-400F) ரக வானூர்தியை, கிழக்கு மலேசியா நகரங்களான கூச்சிங், மிரி, கோத்தா கினபாலு, தாவாவ், சிபு நகரங்கள்; தீபகற்ப மலேசியாவின் ஜொகூர் பாரு, பினாங்கு, கோத்தா பாரு நகரங்கள்; ஆகியவற்றில் சேவையில் ஈடுபடுத்தியது.
பின்னர் அதன் இரண்டாவது வானூர்தி, போயிங் 737-800F (Boeing 737-800F) ரக வானூர்தியை, 23 மார்ச் 2021-இல் சேவையில் ஈடுபடுத்தியது. மூன்றாவது விமானமான போயிங் 737-300 (Boeing 737-300 9M-WCM) ரக வானூர்தியை,நவம்பர் 2021-இல் சேவையில் ஈடுபடுத்தியது.
சேரிடங்கள்
தொகு2022 வரை, பன்னாட்டு சரக்கு வானூர்தி நிறுவனம், பின்வரும் இடங்களில் சேவை செய்கிறது:[1]
வெளிநாடு | உள்நாடு | நகரம் | குறியீடு IATA | குறியீடு ICAO | வானூர்தி நிலையம் | குறிப்பு | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
மலேசியா | சரவாக் | மிரி | MYY | WBGR | மிரி வானூர்தி நிலையம் | சரக்கு | |
பினாங்கு | ஜார்ஜ் டவுன், பினாங்கு | PEN | WMKP | பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
ஜொகூர் | ஜொகூர் பாரு | JHB | WMKJ | செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
கிளாந்தான் | கோத்தா பாரு | KBR | WMKC | சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் | சரக்கு | ||
சபா | கோத்தா கினபாலு | BKI | WBKK | கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
கோலாலம்பூர் சிலாங்கூர் |
கோலாலம்பூர் | KUL | WMKK | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | தலைமை வானூர்தி நிலையம் | |
சரவாக் | கூச்சிங் | KCH | WBGG | கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
சரவாக் | சிபு | SBW | WBGS | சிபு வானூர்தி நிலையம் | சரக்கு | ||
சபா | தாவாவ் | TWU | WBKW | தாவாவ் வானூர்தி நிலையம் | சரக்கு | ||
மியான்மர் | யங்கோன் | யங்கோன் | RGN | VYYY | யங்கோன் பன்னாட்டு வானூர்தி நிறுவனம் | சரக்கு | |
சீனா | மக்காவு | மக்காவு | MFM | VMMC | மக்காவு பண்ணாட்டு வானூர்தி நிலையம் | சரக்கு | |
வியட்நாம் | ஹோ சி மின் நகரம் | ஹோ சி மின் நகரம் | SGN | VVTS | ஹோ சி மின் நகர வானூர்தி நிலையம் | சரக்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "WCA Services". wca.asiacargonetworkgroup.com. Archived from the original on 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.