வாருங்கள், விஜயஷண்முகம்!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --கோபி 08:14, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

வருக தொகு

வருக, விஜயஷண்முகம், விக்கிபீடியா திட்டப்பக்கங்களில் தங்களுடைய பங்களிப்புகள் நன்று. ஆங்கிலப் பெயரில் இருக்கும் பயனரும் நீங்கள தானா? தங்களைப் பற்றிய அறிமுகத்தை பயனர் பக்கத்தில் தரலாம். மேலும் தங்களுக்கு விக்கிபீடியா எவ்வாறு அறிமுகமானது என்பதை அறிந்து கொள்ள ஆவல். --சிவகுமார் 08:37, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

it is nice to see you translating articles. you can contribute a lot. bwst of luck.

கோபி மற்றும் சிவகுமார் அவர்களுக்கு வணக்கம் !

இதே ஆங்கில பெயரில் இருக்கும் பயனரும் நான்தான். நான் வெகு நாட்களாகவே விக்கியை பயன்படுத்தி வருகிறேன். ஆறு மாதங்களாக விக்கியை ஃபயர் பாக்ஸ் உலாவியின் இணைப்பாகவும் கொண்டுள்ளேன்.

'கணினியில் தமிழ் பயண்பாடு' என்பதில் மிகுந்த ஆர்வமும் 'FSF'-ல் ஈடுபாடும் இருப்பினும், ஐ.நா. சபையின் மொழிகள் பற்றிய ஓர் ஆய்வறிக்கை முடிவில் தமிழ் வீழ்ச்சிப் பதையில் செல்வதாகக் கிடைத்த தகவலினால் எற்பட்ட அதிர்ச்சியினாலும், இக்கால தமிழக இளைஞர் மத்தியில் தமிழார்வத்தை வளர்க்கவும், தமிழ் மொழியில் தகவல்களை திறட்ட விக்கிபீடியா மூலம் என்னாலான ஒரு சிரிய முயற்சியாகவெ நான் விக்கியில் பயனராகி எனது பங்களிப்பை செலுத்த காரணம். ஆர்வமுள்ள நண்பர் பலரும் விரைவில் அவர்களது பங்களிப்பை தமிழுக்கும், விக்கிபீடியாவிற்கும் செலுத்த எனது ஊக்கமும் உதவியும் தொடரும். மிகுந்த நம்பிகையோடு - விஜயஷண்முகம் 02:35, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

உங்களின் ஈடுபாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள பலரும் தமிழ் வீழ்ச்சி குறித்த அச்சத்தோடு பங்களிக்கிறார்கள் என்று சொல்வதை விட தமிழின் எதிர் காலத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே பங்களிக்கிறார்கள் என்பது மிகவும் நம்பிக்கை தரக்கூடிய ஒன்று. தொடர்ந்து பங்களியுங்கள். நீங்கள் குறிப்பிட்ட ஐ. நா அறிக்கைக்கான இணைப்பை இயன்றால் தாருங்கள். நன்றி--ரவி 08:06, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

வணக்கம் விஜய். உங்கள் பங்களிப்புகள் மற்றும் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி உற்றேன். உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்

மெல்ல இனித் தமிழ் சாகும் என்று கூறியவர்கள் விரைவில் மெல்ல இனித் தமிழ் தலை நிமிரும் எனச் சொல்லும் காலம் விரைவில் வரும் அன்பரே!--ஜெ.மயூரேசன் 11:10, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

வருக விஜயஷண்முகம், நல்வரவு! தங்களின் ஆர்வம் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. தொடர வாழ்த்துக்கள். FSF, கட்டற்ற மென்பொருள் நோக்கியும் உங்கள் ஆக்கங்கள் அமைந்தால் நன்று. --Natkeeran 19:50, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

ஒலிபெயர்த்தல் உதவி தொகு

வணக்கம் விஜயஷண்முகம், நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் இனைத் தமிழ்ப் படுத்தி உதவுவீர்களா? ஆங்கிலப் பெயர்களை அடைப்புக் குறிக்குள் இட்டால் அவற்றைப் பயன்படுத்தி ஆங்கில விக்கியில் தேட உதவியாயிருக்கும். நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்க வேண்டும். அதில் முதற் தடையாக இருப்பது அவர்களது பெயர்காளை ஒலிபெயர்ப்பதாகும். நன்றி. --கோபி 03:04, 17 செப்டெம்பர் 2006 (UTC)Reply

வணக்கம் கோபி, நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் பக்கத்தில் சில பெயர்களை மட்டும் ஒலிபெயர்க்க நேரம் கிட்டியது. சரியாக இருக்குமென எண்ணுகிறேன். உங்கள் கருத்து என்ன ? விஜயஷண்முகம் 04:00, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. --Sivakumar \பேச்சு 08:10, 22 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சச்சின் தொகு

முழு வீச்சில் தாங்கள் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. வார்ப்புரு:கிரிக்கெட் வீரர் தகவல்பெட்டி என்ற வார்ப்புருவும் உள்ளது. பொதுவாக டெண்டுல்கர் என்றே (மூன்று சுழி ண) வழங்கப்படுகிறது. எனவே இக்கட்டுரையை நாம் மேம்படுத்தலாம். --Sivakumar \பேச்சு 08:10, 22 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சிவகுமார், சச்சின் டெண்டுல்கர், வார்ப்புரு:கிரிக்கெட் வீரர் தகவல்பெட்டி என்ற பக்கங்கள் ஏற்கனவே உள்ளபடியால் சச்சின் டென்டுல்கர், வார்ப்புரு:கிரிக்கெட் வீரர் பக்கங்களை நீக்கிவிடலாமே ! - விஜயஷண்முகம் 09:04, 24 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பாராட்டு தொகு

விஜய், உங்கள் பங்களிப்பின் முனைப்பு பாராட்டத்தக்கது. தொடரட்டும் உங்கள் பணி. -- Sundar \பேச்சு 11:03, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி சுந்தர் ! உங்களை போன்ற அனுபவமிக்கவரது பாராட்டு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. நன்பர் சிலரையும் த.வியில் பங்களிக்கும்படி அழைதிருக்கிறேன். என்னாலான முயற்சிகள் தொடரும். - விஜயஷண்முகம் 12:28, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

விஜய், நீங்கள் தொடர்ந்து பங்களித்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. புதிய கட்டுரைகள் உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டலாம். தொடர்ந்து சளைக்காமல், சலிக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 16:01, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

பார்க்க தொகு

படிமப் பேச்சு:இந்திய நாடாளுமன்றம்.JPG--ரவி 04:20, 17 அக்டோபர் 2006 (UTC)Reply

ர, ற, ட தொகு

விஜயசண்முகம், ர, ற, ட விதயத்தில் இலங்கை, இந்தியத் தமிழர்கள் எழுதும் விதத்தில் இருக்கும் வேறுபாடு குறித்து ஏற்கனவே விக்கிபீடியாவில் நிறைய உரையாடி இருக்கிறோம். அது குறித்த தகவல்களை தேடி எடுத்து தருகிறேன். இலங்கைத் தமிழ் எழுத்து வழக்கில் இருந்து தமிழ்நாட்டு வழக்குக்கு மாற்றுகீர்கள் என்றால் அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில எழுத்துக்கூட்டலையும் இலங்கை வழக்கையும் குறிப்பிடுதல் நன்று. பல நாட்டுத் தமிழரும் இணைந்து பங்காற்றும் இத்திட்டத்தில் நல்லுறவை பேண இது உதவும். எடுத்துக்காட்டுக்கு, டெஸ்ட் போட்டி (Test match, இலங்கை வழக்கு: ரெஸ்ட் போட்டி) என்று தரவும். கட்டுரையை முதலில் எழுதுபவரின் எழுத்துக்கூட்டலுக்கும் நாம் இங்கு மதிப்பு தருவது வழக்கம். எனவே ரெஸ்ட் போட்டி (Test match, தமிழ்நாட்டு வழக்கு: டெஸ்ட் போட்டி) என்று எழுதுவதும் பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது.--Ravidreams 22:19, 2 டிசம்பர் 2006 (UTC)

ரவி, தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது, நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் "ரெஸ்ட்" என்று தமிழில் எழுதினால் "Rest" என்னும் ஆங்கிலச்சொல்லை குறிப்பதுபோலான குழப்பத்தை (ambiguity) தவிர்க்கவே "டெஸ்ட்" என்று திருத்தினேன். - விஜய் 22:36, 2 டிசம்பர் 2006 (UTC)
விஜய் கூறுவது நியாயமானது. rest என வாசிக்கப்பட வாய்ப்பிருப்பதால் டெஸ்ட் என்பதே இங்கு பொருத்தமாகும். நன்றி. --கோபி 22:49, 2 டிசம்பர் 2006 (UTC)

என்ன கோபி, இப்படி கவுத்துட்டீங்க ;) உங்கள மனசுல வச்சும் முன்னர் நாம் விக்கிபீடியாவுல செஞ்ச உரையாடல்களை வைச்சும் தான் மேல உள்ள பரிந்துரையை சொன்னேன். இருந்தாலும், டெஸ்ட் போட்டி (Test match, இலங்கை வழக்கு: ரெஸ்ட் போட்டி) என்று தருவதும் பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது. ஏனெனில் test அல்லாத பிற சொற்களுக்கு முழுக்க தமிழ்நாட்டுப் பலுக்கல் வழக்கில் எழுதினால், இலங்கைப் பயனர்கள் குழம்பவும் மனம் வருந்தவும் வாய்ப்புண்டு--Ravidreams 09:11, 3 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டு அறிக்கை தொகு

விஜய், உங்களின் மொழிபெயர்ப்புக்களை GnashKbot விரைவில் கட்டுரையாக்கி விடும் என்று நினைக்கின்றேன்.

உங்களின் கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review பகிர்ந்தால் நன்று. நன்றி. --Natkeeran 01:40, 8 டிசம்பர் 2006 (UTC)

நக்கீரன் - தாங்கள் குறித்தபடி, எனது கருத்துக்களை 2006 ஆண்டு அறிக்கையின் உரையாடல் பக்கத்தில் சேர்த்துள்ளேன். நன்றி. விஜய் 03:37, 8 டிசம்பர் 2006 (UTC)

THANKYOU VERY SO MUCH விஜயஷண்முகம் for your brilliant-quality translation help and effort for this article.

MAY YOU PROSPER!

(Of Course, in the future if you ever need any articles to be translated into the Chinese and Taiwanese language, then I would gladly help you).

Best Wishes, From --Jose77 20:15, 9 டிசம்பர் 2006 (UTC)

வார்புருக்கள் தொகு

வணக்கம் விஜய். நீங்கள் தொடர்ந்து கட்டுரைகளை எழுதுவது கண்டு மகிழ்ச்சி. சுவிஸர்லாந்து கட்டுரையில் தகவல் சட்டம் ஒன்றை நீங்கள் சேர்த்துள்ளீர்கள் அல்லவா? விக்கியில் ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக code எழுதாமலே தகவற் சட்டத்தை வார்ப்புரு மூலம் சேர்க்கும் முறை ஒன்று உள்ளது. நாடுகளுக்கு வார்ப்புரு:தகவற்சட்டம் நாடு என்ற வார்ர்புரு உள்ளது. இதனை பாவிப்தற்கான உதாரணத்துக்கு நேபாளம் கட்டுரையை நோக்குக. அதன்படி செய்தால் எல்லா நாடுகளின் தகவல் சட்டங்களும் ஒரே மாதிரியாக இருக்கு இது விரும்பத் தக்கது என தவியில் முன்னர் முடிவு செய்திருந்தோம். மேலும் ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக code எழுதி சட்டம் சேர்ப்பது நேரத்தை விரயாமாக்கும். இந்நேரத்தை நல்ல காடுரைகளுக்கு செலவிடலாம். வார்புருக்களை சேர்க்கும் முறைகளை அவ்வார்புருவின் பேச்சுப் பக்கத்திலும் காணலாம். --டெரன்ஸ் \பேச்சு 08:23, 13 டிசம்பர் 2006 (UTC)

வணக்கம் டெரன்ஸ் ! தங்கள் தகவலுக்கும், சுவிஸர்லாந்து கட்டுரையில் திருத்தம் செய்ததற்கும் நன்றி. முன்பிருந்த தகவற்சட்டத்தை நான் புதிதாய் அமைக்கவில்லை. இத்தாலி கட்டுரையிலிருந்து வெட்டி ஒட்டினேன்.

புதிதாய் தொடங்கும் நாடுகளுக்கான கட்டுரைகளுக்கு வார்ப்புரு:தகவற்சட்டம் நாடு வார்ப்புருவையே பயன்படுத்துகிறேன் (நேபாளம் கட்டுரையில் தகவற்சட்டம் அழகாகவே உள்ளது). விஜய் 21:52, 13 டிசம்பர் 2006 (UTC)

பக்கங்களுக்குப் புதிய பெயரிடல் தொகு

விஜய சண்முகம், ஏற்கனவே உள்ள பக்கங்களுக்குப் புதிய பெயரிடுவதற்கு பக்கங்களை நகர்த்துங்கள். அவ்வாறு செய்வதனால் பக்கங்களின் வரலாறு பாதுகாக்கப்படும். நான் மீண்டும் செய்த மாற்றங்களைக் கவனியுங்கள். --கோபி 09:52, 29 டிசம்பர் 2006 (UTC)

பக்கங்களை விரிவாக்கல் தொகு

விஜய், சிகாகோ போன்ற மிகச் சிறியனவாக உள்ள கட்டுரைகளை விரிவாக்குவதிலும் பங்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி. --கோபி 19:42, 30 டிசம்பர் 2006 (UTC)

தஞ்சை மாவட்டம் தொகு

விஜய், நான் பாடல் பெற்ற தலங்கள் பற்றி எழுதிய குறுங்கட்டுரைகளில் சிலவற்றில் நீங்கள் தஞ்சை மாவட்டம் என்பதை நாகப்பட்டிண மாவட்டம் என மாற்றியிருந்தீர்கள். நான் ஒரு சிறு நூலிலிருந்தே தகவல்களைப் பெற்றேன். தகவற் பிழையா அல்லது தஞ்சை மாவட்டம் எனப்படுவது தான் நாகப்பட்டிணமா? கோபி 16:17, 7 ஜனவரி 2007 (UTC)

கீழை தஞ்சை பகுதிகள் 1991-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து நாகப்பட்டினம் மாவட்டம் என்ற புது மாவட்டமாக உருவாக்கப்பட்டது 2. நீங்கள் தொடங்கிய கட்டுரைகளில் நான் செய்த மாற்றங்கள் பிழை திருத்தம் என்பதைக்காட்டிலும் செய்தி புதுப்பிப்பு (Information Update) என்றே சொல்வேன். - விஜய் 02:08, 8 ஜனவரி 2007 (UTC)

வருக தொகு

மீண்டும் வருக விஜயஷண்முகம், நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறீர்கள்!--Sivakumar \பேச்சு 17:19, 31 மார்ச் 2007 (UTC)

வணக்கம் சிவகுமார், வேலை நிமித்தமாக சில காலம் த.வி.யில் நேரம் செலவிட இயலவில்லை. டி.வி.யில் செலவிடும் நேரத்ததை த.வி.க்கு ஒதுக்க உத்தேசித்து மீண்டும் தொடங்குகிறேன். தங்கள் வரவேற்பு மிகுந்த உற்சாகமளிக்கிறது. நன்றி. - விஜய் 03:10, 2 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

எனது பேச்சுத் திறமையைக் கட்டிலும் எழுத்துத் திறமையில் அதிக நம்பிக்கை உள்ளது. என்னாலான முயற்சிகளை செய்து பார்க்கிறேன். - விஜய் 05:55, 15 ஏப்ரல் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:27, 21 சூலை 2011 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:27, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் விஜயஷண்முகம்,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு தொகு