பயனர் பேச்சு:Jayarathina/தொகுப்பு02

ஹாட்கேட் தொகு

பல பகுப்புகளை ஒரே தொகுப்பில் மாற்ற ++ஐ சொடுக்கு பிறகு சேமி சொடுக்கினால் சில மணித்துளிகள் சேமிக்கலாம் :) ஸ்ரீகாந்த் 06:02, 15 ஆகத்து 2011 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா... இது தெரியாமல் மிகுந்த தொல்லையாய் இருந்தது... இனி அவ்வாறே செய்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:05, 15 ஆகத்து 2011 (UTC)Reply

இதனைக் கவனிக்கவும் தொகு

மாதரசன், ரகசிய வருகை என்ற கட்டுரையில் மேலும் சில தகவல்களை உங்களால் சேர்க்க முடியுமா? இணையான ஆங்கில விக்கிக் கட்டுரையையும் கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:59, 15 ஆகத்து 2011 (UTC)Reply

இக்கட்டுரைக்கு இணையான ஆங்கிலக் கட்டுரை en:Second Coming of Christ. என்னால் முடிந்தரை கூடுதல் தகவல் சேற்கின்றேன்--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:40, 15 ஆகத்து 2011 (UTC)Reply

விக்சனரிக்கு உதவி. தொகு

இப்பக்கத்திலுள்ள-My final requests என்பதில் உங்கள் ஆலோசனைத் தேவை. வணக்கம்.06:36, 18 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..

குறிப்புகள் தந்தமைக்கு மிக்கநன்றி. முன்பு தெரிவித்ததை விட, சற்று விரிவாக, மேலே குறிப்பிட்ட பக்கத்திலேயேக் கூறியுள்ளேன்.ஆவலுடன் எதிர்நோக்கும்.இவண்17:40, 18 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..
ஐயா திங்கட் கிழமை வரை சொந்த ஊருக்கு செல்ல வெண்டியிருக்கின்றது. அங்கே கணினியோ இணையமோ கிடைக்காது, ஆதலால் தயவு செய்து திங்கள் திரும்பி வந்து இச்சிக்கலுக்கு முடிவு காண முயல்கிறேன். தயவு செய்து மன்னிக்கவும்--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 23:50, 18 ஆகத்து 2011 (UTC)Reply

AWT சிறு தொகுப்புகள் தொகு

வணக்கம் மாதரசன், கட்டுரைகளில் சிறு திருத்தங்களை AWT மூலம் திருத்துவதில் சில ஆலோசனைகள். ஒரே நேரத்தில் ஏராளமான கட்டுரைகளில் சிறு சிறு திருத்தங்கள் செய்யும் போது அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பல புதுப் பயனர்களின் தொகுப்புகள் மறைந்து போகின்றன. இதனால் நிருவாக வேலைகள் பாதிப்படைகின்றன. எனவே இத்திருத்தங்களை சிறிது சிறிதாக இடைவெளி விட்டு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது தானியங்கி அணுக்கம் பெற்றுத் திருத்துங்கள். தானியங்கிகளின் திருத்தங்கள் அண்மைய மாற்றங்களில் தெரிவதில்லை. மேலும், நீங்கள் செய்யும் ஒரு சில திருத்தங்கள் அவசியமானவையாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு: [1].--Kanags \உரையாடுக 09:56, 28 ஆகத்து 2011 (UTC)Reply

[2] இங்கு என்ன மாற்றம் உள்ளது?--Kanags \உரையாடுக 10:01, 28 ஆகத்து 2011 (UTC)Reply
கனக்ஸ், சிறு திருத்தங்களை மறைத்து பிறவற்றை மற்றும் பார்க்கும் வசதி அண்மைய மாற்றங்களில் உள்ளது. சிறிய தொகுப்புகளை மறை தொடுப்பினை அழுத்தினால் மறைந்து விடும். --சோடாபாட்டில்உரையாடுக 10:02, 28 ஆகத்து 2011 (UTC)Reply
AWB செய்யும் வெற்று இடைவெளி (whitespace, newline) மாற்றங்கள் (நமக்கு வெளியே தெரியாது). சிறு கருவிகள் (பிடிஏ, மொபைல், பலகைக் கணினி, நுண்ணறி பேசி இன்னபிற) போன்றவற்றில் பக்கம் சிக்கலின்றி render ஆக உதவுகின்றன. மீடியாவிக்கி பக்க வடிவமைப்பில் ஒரு சில “best practices" விதிகள் உள்ளன. AWB செய்பவை அவையே.--சோடாபாட்டில்உரையாடுக 10:05, 28 ஆகத்து 2011 (UTC)Reply


ஐயா என்னால் ஏற்பட்ட சிக்கலுக்கும் துன்பத்துக்கும் என்னை மன்னிக்கவும். இனி இவ்வாறு நிகழாதவாறு பார்த்துக்கொள்கின்றேன். தானியங்கி அணுக்கம் பெற என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து வழி காட்டுங்கள்.
1 [[பகுப்பு:_1905 பிறப்புகள்]] [[பகுப்பு:_1992 இறப்புகள்]]
2 [ [பகுப்பு:இலங்கை நாடாளுமன்றம்|*_] ]
AWT, இங்கே இருந்த இடை வெளிகளை நீக்கியிருக்கின்றது.
உதவ தான் நினைத்தேன், ஆனால் உங்களுக்கு சிக்கலைத்தரும் என நினைக்கவில்லை. மன்னிக்கவும்--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:31, 28 ஆகத்து 2011 (UTC)Reply
ஜெயரத்தினா, இன்னொரு கணக்கொன்றை ஆரம்பியுங்கள் (எ.கா. JayarathinaBOT). அதன் மூலம் தங்கள் செய்ய நினைக்கும் சில துப்பரவுப் பணிகளின் மாதிரிகளை செய்யுங்கள் பின்னர் இங்கு - விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள் - விண்ணப்பியுங்கள். சுந்தர்/ரவி/நக்கீரன்/மயூரனாதன் ஆகியோர் தானியங்கி அணுக்கம் வழங்குவோர். அவர்களிடமும் நினைவு படுத்துங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 10:59, 28 ஆகத்து 2011 (UTC)Reply
சோடா விளக்கத்துக்கு நன்றி. சிறு தொகுப்புகளை மறைக்க முடியும், ஆனாலும் அதனை நான் அவ்வளவு விரும்புவதில்லை. சிறு திருத்தங்களையும் கண்காணிக்க வேண்டும் என்பதாலேயே. மாதரசன், உங்கள் பணி சிறந்ததே. ஆனாலும் சிறிது சிறிதாகச் செய்வது நல்லது. அல்லது சோடா சொன்னது மாதிரி BOT கணக்கு ஒன்றை ஆரம்பித்து ஓரிரு நாட்கள் துப்பரவுப் பணியைச் செய்து விட்டு அணுக்கத்துக்கு விண்ணப்பிப்பது சிறந்தது. நன்றி.--Kanags \உரையாடுக 12:03, 28 ஆகத்து 2011 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த யோசனைக்கான பதக்கம்
பிறப்பு, இறப்பு ஆண்டுகளுக்கான பகுப்புகளை தகவல்பட்டி வார்ப்புருக்களில் இணைக்கும் யோசனையை அளித்து, அதைச் செயலாக்கியதன் மூலம் பகுப்பு பராமரிப்பாளர்களின் வேலையைக் குறைத்த உங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 16:02, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  திரு.சோடாபாட்டில், தங்களின் வாழ்துக்கும் பதக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:27, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
வாழ்த்துக்கள். நல்ல யோசனை. -- மாகிர் 16:45, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
படிமம்:Blush.png திரு.மாகிர், தங்களின் வாழ்துக்கு மிக்க நன்றி ஐயா--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:27, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
வாழ்த்துக்கள். நல்ல யோசனை. பி.கு:- ஐயா, எதோ தமிழ் வாத்தியாரை கூப்பிடுவது போல் உள்ளது, நாங்கேல்லாம் யூத். :P ஸ்ரீகாந்த் 10:19, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply
திரு. யூத் ஸ்ரீகாந்த்,   தங்களின் வாழ்துக்கு மிக்க நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:19, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply
அப்படியே இந்த யூத் சமூகத்தில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள். ஐயா என்றால் ஒரு பத்து வயது கூடிவிடுகிறது :-)--சோடாபாட்டில்உரையாடுக 11:39, 10 செப்டெம்பர் 2011 (UTC)Reply
உங்கள புதுசா சேர்த்துக வேண்டிய அவசியமே இல்ல. நீங்க எப்பவுமே யூத்-தாங்க   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:17, 10 செப்டெம்பர் 2011 (UTC)Reply

உதவி தொகு

இயேசுவில் நிறைவேறிய இறைவாக்குகள் என்ற புதிய கட்டுரையை விக்கி நடைக்கேற்ப மாற்றி விக்கியிடை இணைப்புகள் இருப்பின் அவற்றை இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. துறை அறிவு இல்லையென்பதால், எனக்கு மாற்ற சற்று தயக்கமாக உள்ளது. உதவுங்களேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:12, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

 Y ஆயிற்று என்னால் முடிந்தவரை செய்திருக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:22, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply
நன்றி ஜெயரத்தினா.--சோடாபாட்டில்உரையாடுக 08:35, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

kollywood today தொகு

கோலிவுட் டுடே படிமங்களை காமன்சுக்கு இப்போதைக்கு நகர்த்த வேண்டாம். அதில் ஒரு சிக்கல் உள்ளது. முன்பு விஜய் படத்தை காமன்சுக்கு நகர்த்திய போது கோலிவுட் டுடே தளம் அதனை வேறு தளத்திலிருந்து எடுத்து போட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே காமன்சு காரர்கள் இப்படங்களை நகர்த்த வேண்டாமென்று கேட்டுக்க்கொண்டுள்ள்னர். அனைத்தையும் tineye கொண்டு சோதனை செய்து பார்க்க வேண்டும் :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:11, 19 செப்டெம்பர் 2011 (UTC)Reply

திரு. சோடாபாட்டில், இச்சிக்கல் இருந்தது எனக்கு தெரியாது, இனி நகர்த்த மாட்டேன். மேலும், பகுப்பு:கோலிவுட்டுடே தளத்தின் படிமங்கள்இல் இனி இவ்வாறு வேறெவறும் செய்யாமலிருக்க ஒரு அறிவிப்பையும் இட்டிருக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:31, 19 செப்டெம்பர் 2011 (UTC)Reply

bot தொகு

நீங்கள் இயக்கும் JayarathinaAWB BOT என்னென்ன வகையான துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறது என்று அதன் பயனர் பக்கத்தில் விவரிக்க இயலுமா? நன்றி--இரவி 15:08, 25 சனவரி 2012 (UTC)Reply

Birth date வார்ப்புரு தொகு

ஜெயரத்தினா, birth date வார்ப்புருவை விக்கிக் கட்டுரைகளில் மட்டுமல்லாமல் பல பயனர்களும் தங்களது பயனர் பக்கங்களில் இணைத்துள்ளார்கள். இதனால், இவ்வார்ப்புருவில் நீங்கள் செய்துள்ள பகுப்பு மாற்றத்தை மீள்வித்திருக்கிறேன். [[பகுப்பு:{{{1|{{{year|{{{1}}}}}}}}} பிறப்புகள்]] என்ற பகுப்பு விக்கிக் கட்டுரைகளில் மட்டுமே பயன்படுத்தலாம். பயனர் பக்கங்களில் பயன்படுத்த முடியாது. நீங்கள் வார்ப்புருவில் செய்த மாற்றம் பயனர் பக்கங்களிலும் இந்தப் பகுப்பை தானியங்கியாக இணைக்கிறது. நன்றி.--Kanags \உரையாடுக 00:57, 24 சூன் 2012 (UTC)Reply

தெரியபடுத்தியமைக்கு நன்றி   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:42, 24 சூன் 2012 (UTC)Reply
 Y ஆயிற்றுதானியங்கி கொண்டு எல்ல கட்டுரைகளுக்கும் பிறப்பு பகுப்பை சேர்த்துவிட்டேன்.   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:07, 24 சூன் 2012 (UTC)Reply

விக்சனரி:CSS +js தொகு

விக்சனரி:CSS +js சில ஐயங்கள் உள்ளன. உங்களுக்கு உகந்த நேரத்தினைத் தெரிவிக்கவும். எனது மின்னஞ்சல் tha.uzhavan ஜிமெயில். தங்களை எதிர்நோக்குகிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 06:35, 19 ஆகத்து 2012 (UTC)Reply

  தங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.... --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:42, 24 ஆகத்து 2012 (UTC)Reply

Rajesh Khanna தொகு

Its really shocking to know that all information as available in http://en.wikipedia.org/wiki/Rajesh_Khanna has not been translated into Tamil till now.All the information must be translated soon. So it would be nice if you take the initiative as all needed references are provided in wiki article on Khanna in english.--Onceshook1 (பேச்சு) 11:17, 6 செப்டெம்பர் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று Trannslated by User:Rsmn -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:16, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

ஆச்சரியம் தொகு

உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக அருமை! நானும் காப்பியடிக்கப் போகிறேன். ;) அருமையான வடிவமைப்பிலுள்ள உங்கள் வலைதளத்தில் விக்கி இணைப்பையும் தந்துள்ளீர்கள். மகிழ்ச்சியும் நன்றிகளும் !! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:16, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

மிக்க நன்றி நண்பரே.   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:21, 20 அக்டோபர் 2012 (UTC)Reply

பகுப்பு தொகு

பகுப்புகளில் கிறித்தவப் புனிதர்களுக்கு roman catholics ஐ சேர்த்திருக்கிறீர்களே. தமிழிலும் கத்தோலிக்கக் கிறித்தவப் புனிதர்கள் என்று சேர்த்திருக்கலாமே. பிற பிரிவு கிறித்தவப் புனிதர்க்கு இப்பகுப்பு பொருந்தாதே? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:16, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

இப்போது திருத்தி விட்டேன். தற்போது தமிழ் விக்கியில் நாடுவாரியாக கத்தோலிக்க புனிதர்களுக்கென தனி பகுப்போ அல்லது ஆங்கிலத்தில் Christian saints by nationalityகு தனிப்பகுப்போ இல்லை. அகவே அவ்வாறு செய்தேன் ஆனாலும் நீங்கள் கூறுவது போல சிக்கல் பிற்காலத்தில் நிகழலாம். ஆகவே அவற்றை நீக்கிவிட்டேன். தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:30, 21 அக்டோபர் 2012 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா தொகு

தங்கள் உங்களுக்குத் தெரியுமா பகுதி தொகுப்புகளில் மகிழ்ச்சி. ஓரியன் கை பற்றிய தகவல் ஏற்கனவே இடப்பட்டது ஆகவே நீக்கிவிட்டேன். இடப்படும் தகவல் ஆதரம் கொண்டதாயிருப்பது நலம். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:03, 18 திசம்பர் 2012 (UTC)Reply

பரிந்துரைகள் பக்கத்தில் ஓரியன் கை குறித்தான தகவல் இருந்ததாலேயே அதனை இட்டேன். தகவல் ஆதரம் குறித்த தங்களின் வழிகாட்டளுக்கு நன்றிகள் பல. இனி அவ்வாறே செய்கின்றேன்   --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:42, 18 திசம்பர் 2012 (UTC)Reply

நன்றி தொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:31, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 15 சனவரி 2013 (UTC)Reply

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Jayarathina/தொகுப்பு02!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:12, 2 பெப்ரவரி 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கள் தொகு

வணக்கம், Jayarathina/தொகுப்பு02!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:27, 3 மார்ச் 2013 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு தொகு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:06, 5 மார்ச் 2013 (UTC)

விக்கி தரவு தொகு

தற்போது உள்ள விக்கியிடை இணைப்புகளை நீக்கி விக்கி தரவு இணைப்புகளை இடும் பணி தானியக்கமாக நடைபெறும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே, இதன் பொருட்டு மட்டும் ஒரு கட்டுரையைத் தொகுக்கும் பணியைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 14:19, 8 மார்ச் 2013 (UTC)

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா. PHPஇல் தானியக்கி ஒன்று செய்ய சோதனை முயர்சியாகத்தான் அத்தோகுப்புகளை wikidata gagets கொண்டு பரிசோதனை செய்து பார்த்தேன். தானியக்கி ஒன்று தமிழ் விக்கியில் ஏற்கனவே உள்ளது என தெரியாது. வழிகாட்டலுக்கு மிக்க நன்றி --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:24, 8 மார்ச் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்கென்று தனியாக தானியங்கி ஏதும் இல்லை. உலகளாவிய விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் இப்பணியைச் செய்யும் தானியங்கிகள் இயங்கி வருவதாக அறிய முடிகிறது. பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikidata#Migration_of_interlanguage_links . அப்புறம், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் அனைத்து பயனர்களையும் பெயர் சொல்லியே அழைக்கலாம். இதில் மூத்தவர், இளையவர், அவர்களின் பணிப் பின்புலம் ஒரு பொருட்டு இல்லை. இதன் மூலம் தோழமை உணர்வை நிலைநாட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 14:55, 8 மார்ச் 2013 (UTC)

ஆங்கில விக்கி இணைப்புகளை சரி செய்ய உதவும் கருவி தொகு

ஜெயரத்னா, உங்கள் கருவியை எனது பயனர் பக்கத்தில் வெட்டி ஒட்டினேன். பிறகு என்ன செய்ய வேண்டும் ? எனது விக்கி தொகுப்பானில் எதுவும் வரவில்லையே ? (உலாவியை பலமுறை cashe clear செய்தாயிற்று) நான் பயர்பாக்சு பயன்படுத்துகிறேன். எங்கு options தேர்ந்தெடுப்பது ? சாவாசுகிரிப்டு பற்றியெல்லாம் அறியாத எங்களைப் போன்றவர்களுக்கு சற்று விளக்கமாக கூறினால் நல்லது. மேலும் மாகிர் அவர்களின் template helper, translation helper எனது vector.js பக்கத்தில் உள்ளது. அதே பக்கத்தில் இந்த சாவாசுகிரிப்டையும் இடலாமா ? அல்லது தனி பக்கம் தேவையான ? array எங்கு உருவாக்க வேண்டும் ? --மணியன் (பேச்சு) 03:41, 10 மார்ச் 2013 (UTC)

சரி, சரி..இப்போதுதான் பார்த்தேன்...பிற கருவிகள் என்பதைத் திறந்து காண வேண்டியிருக்கிறது.. ;) இருப்பினும் மற்ற ஐயங்களையும் தீர்க்கவும்.--மணியன் (பேச்சு) 03:44, 10 மார்ச் 2013 (UTC)
மணியன், குழப்பத்திற்கு மன்னிக்கவும். பிறருக்கும் இவ்வாறு நிகழாதிருக்க இப்போது ஒரு படிமத்தை இணைத்திருக்கின்றேன். பிற ஐயங்கள் இருப்பின் தயவுசெய்து கேளுங்கள், கண்டிப்பாய் உதவுவேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:53, 10 மார்ச் 2013 (UTC)

விமர்சனங்கள் தொடர்பாக தொகு

பெரும்பான்மையாக உங்கள் மாற்றங்கள் மிகப் பொருத்தமாகவெ அமைகின்றன. எனினும் மூன்றாவது பத்தியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் படைத்துறை அரசுடன் சேர்தியங்கினார் என்பதுவே. அதாவது "The human rights group HIJOS, which represents children of the estimated 30,000 people kidnapped and murdered by the regime, Thursday renewed claims he was complicit in stealing victims’ babies and turned in priests, who were then tortured." அந்தப் பொருள் தற்போது வெளிவரவில்லை போல் தெரிகிறது.

நற்கீரன், கையொப்பம் இட மறந்துவிடீர்கள்  .... நான் அப்பகுதியினை தொகுப்பதற்கு முன் அங்கு இருந்த வரி:
காணாமல் போனவர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு (HIJOS) பிரான்சிசு பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் திருடப்பட்டதில், சில குருமார்கள் படைத்துறையினரிடம் பிடிபோய் சித்திரவதைப்பட்டதில் ஒத்துளைத்தார் என்று குற்றம் சாட்டுகிறது.[3]
இதை நான் மாற்றியமைத்தது:
அர்கெந்தீனா மற்றும் குவாத்தமாலாவில் இயங்கும் காணாமல் போனவர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு (HIJOS), பிரான்சிசு பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் திருடப்பட்டதிலும், இரண்டு குருக்கள் படைத்துறையினரிடம் பிடிட்டு சித்திரவதைப்பட்டபோதும் அவர்களைக்காக்க எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது.
en:Complicit என்றால் ஆங்கில விக்கியில் aware of its occurrence and has the ability to report the crime, but fails to do so என பொருள் உள்ளது. complicit என்பதனை ஒத்துழைத்தார் எனக்கூறினால், அவரே கடத்தவும், கொடுமைப்படுத்தவும் தன் கையால் உதவி செய்தார் என ஆகாதா?
....சித்திரவதைப்பட்டபோதும், இவற்றை பற்றி தெரிந்திருந்தும், அவர்களைக்காக்க எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது.
என மொழிபெயர்க்கலாமா? இங்கே அதனை எவ்வாறு மொழி பெயர்க்க வேண்டும் என கருதுகின்றீர்கள்? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:58, 16 மார்ச் 2013 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த பயனர்கருவி உருவாக்குனர் பதக்கம்
உங்களது விக்கியிடை இணைப்புக்களை வழங்கும் கருவி மூலம் எனது கட்டுரையாக்கம் விரைவடைந்துள்ளது. மிகவும் பயனுள்ள இக்கருவியை வடிவமைத்து தமிழ் விக்கிச் சமூகத்திற்கு தாங்கள் ஆற்றியுள்ள சேவையை பாராட்டி இந்த பதக்கத்தை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.--மணியன் (பேச்சு) 07:57, 31 மார்ச் 2013 (UTC)
  விருப்பம். நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:07, 31 மார்ச் 2013 (UTC)
நன்றி மணியன், தமிழ்க்குரிசில். உங்களுக்கு இக்கருவி பயனுள்ளதாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:13, 31 மார்ச் 2013 (UTC)
Return to the user page of "Jayarathina/தொகுப்பு02".