பயனர் பேச்சு:Kalaiarasy/உதவி

Add topic
Active discussions

ஏனைய விக்கிபீடியாவுக்கு தொடுப்புதொகு

நாம் புதிதாக ஒரு கட்டுரையை ஆரம்பிக்கும்போது, அந்த குறிப்பிட்ட கட்டுரை எப்படி ஏனைய மொழியிலுள்ள அதே கட்டுரைக்கு இணைக்கப்படுகின்றது என்று அறிய ஆவல். ஏதாவது குறியீடுகள் உண்டா? --கலை 12:10, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

கட்டுரையின் அடியில் ஏனைய விக்கியிடை இணைப்புகளை இப்படி இடலாம்: உ+ம்: [[en:Colour blindness]]. இதே போல் ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையில் தமிழ்க் கட்டுரையை இணைக்க அங்குள்ள கட்டுரையில் இப்படி இடலாம்: [[ta:நிறக்குருடு]]. உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டேனா. இதைத்தானே கேட்டீர்கள்?--Kanags \பேச்சு 12:22, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆம். சரியாகவே விளங்கிக்கொண்டு பதில் தந்திருக்கிறீர்கள். நன்றி.
ஆங்கில அல்லது பிற மொழி விக்கிகளில் அங்குள்ள edit பொத்தானை அமுக்கவும். அக் கட்டுரையில் இறுதியில் உள்ள பிற மொழிகளுக்கான இணைப்புகளை ஒற்றி (வெட்டி) வந்து தமிழ் விக்கியில் ஒட்டிவிட்ங்கள். நீங்கள் செய்யாவிட்டாலும், தானியங்கி ஏதேனும் ஒன்று வந்து செய்துவிடும். உங்கள் பேர்கன் கட்டுரையின் ஆங்கில விக்கியிலே உள்ள் தொகுப்பு நிலையில் இருக்கும் இந்த பக்கத்தைப் பாருங்கள். பேர்கன் கட்டுரையில் வரலாறு என்னும் பிரிகையில் (tab இல்), MelancholieBot என்னும் தானியங்கிச் செயலி பிறமொழி விக்கிகளுக்கான இணைப்பை 01:29, 24 ஆகஸ்ட் 2009 அன்று ஏற்படுத்தியது என்னும் துல்லியமான குறிப்பு இருப்பதைப் பார்க்கலாம். நீங்களே பிறமொழி விக்கி இணைப்புகளை ஒற்றி ஒட்டினீர்கள் என்றால், எந்த மொழி விக்கியில் இருந்து ஒற்றி எடுக்கின்றீர்களோ அந்த விக்கி இணைப்பைத் தனியாக சேர்க்க வேண்டும். --செல்வா 12:33, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
நான் கூறியது தமிழ் விக்கியில் பிறமொழி விக்கி இணைப்புகள் ஏற்படுத்துவது பற்றி. பிறமொழிகளில் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்பை ஏற்படுத்த மேலே சிறீதரன் கனகு கூறியவாறு செய்யுங்கள். ஆங்கில விக்கியில் மட்டுமோ, அல்லது இரண்டொரு மொழி விக்கிகளில் மட்டுமோ ஏற்படுத்தினால் போதும். தானியங்கி மற்ற எல்லா மொழிகளிலும் இணைப்புகள் ஏற்படுத்திவுடும். --செல்வா 12:37, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
சிறிய கேள்விகளுக்கும் பொறுமையாக விளக்கம் அளிக்கின்றீர்கள். நன்றி மீண்டும்.--கலை 12:44, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

படிமங்கள் தரவேற்றம்தொகு

உங்கள் வினாக்களுக்கான விடைகளை தர முயல்கிறேன்.எனது பட்டறிவும் குறைவு என்றபோதிலும் :)

  1. விக்கிப்பீடியா காமன்ஸ் அல்லது நடுவம் : பதிவேற்றுவது:நடுவம் : முதற்தேவைகள் என்ற பக்கத்தில், இது குறித்து நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
  • அதன் படி , பயர் கணக்கு வேண்டும்.எனவே, புகுபதிகைச் செய்யவும்.
  • பதிவேற்ற கோப்புக்கு, சிறந்த முறையில் பெயரிடுவது மிகமிக அத்தியாவசியமானது. அப்படி பெயரிட்டால் மட்டுமே, பிறர் உங்கள் கோப்பினை சுலபமாகக் கண்டறிய முடியும்.
  • புகுபதிகை செய்தவுடன், நேரிடையாக பதிவேற்றப்படிவத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்
  1. விக்கிப்பீடியா காப்புரிமை வார்ப்புருக்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.
  2. ஒவ்வொரு படிம கோப்புடனும் ஓர் விவரக்கோப்பும் இணைந்திருக்கும்--நீங்கள் விக்கிப்பீடியாவின் படிமத்தில் வலது சொடுக்கின் மூலம் சேமிக்காமல், இரட்டை சொடுக்கு செய்தீர்களென்றால் இவ்வாறான படிமக்கோப்பும் விவரக்கோப்பும் இணைந்த பக்கத்திற்கு செல்வீர்கள்.அங்கே படங்களுக்குரிய காப்புரிமை விவரங்களைப் பெறலாம். அதே பாணியில் நீங்கள் தரவேற்றம் செய்யும் படங்களுக்கும் விவரக்கோப்பை இணைக்கவேண்டும்.
  3. நடுவத்தில் தரவேற்றிய படிமங்கள் தமிழ் உட்பட அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் கோப்பின் பெயரை இட்டால் காட்டப்படும். தமிழ் விக்கியில் தரவேற்றிய படங்கள் பிற மொழிகளில் தெரியாது.அதேபோல ஆங்கிலவிக்கியின் படங்கள்,காமன்ஸில் இல்லையென்றால் மற்ற மொழிகளில் தெரியாது.

கோர்வையாகவும் உங்கள் ஐயங்களை தீர்க்குமாறும் எழுதியுள்ளேனா என தெரியவில்லை.ஐயமிருப்பின் தயங்காமல் கேளுங்கள்..--மணியன் 09:25, 2 செப்டெம்பர் 2009 (UTC)

நன்றி மணியன். நான் மெதுவாக நீங்கள் கூறியவற்றை செய்து பார்க்கிறேன். அனேகமாக புரியும் என்றே நினைக்கிறேன் :). --கலை 10:20, 2 செப்டெம்பர் 2009 (UTC)

கடவுச்சொல்லை நினைவில் வைத்தல்தொகு

அமர்வுகளுக்கிடையே கடவுச் சொல்லை நினைவில் வைக்கும்படி எனது விருப்பத் தேர்வுகளில் குறிப்பிட்டுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறை புகுபதிகை செய்ய வேண்டியதாயுள்ளது. அப்படி செய்யும்போதும், ஒவ்வொரு முறையும், அமர்வுகளிக்கிடையே கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்க சொன்னாலும், அது செய்யப்படுவதாயில்லை. காரணம் என்னவாக இருக்கும்? --கலை 22:32, 5 செப்டெம்பர் 2009 (UTC)

தளத்தை மூடும் போது விடுபதிகை செய்யாமல் முயன்று பார்த்தீர்களா?--ரவி 17:51, 6 செப்டெம்பர் 2009 (UTC)
விடுபதிகை செய்யாமல்தான் பார்த்தேன். பின்னர் விடுபதிகை செய்தும் பார்த்தேன். எப்படி செய்தாலும், புதிதாக கடவுச் சொல்லை கேட்கிறது. காரணம் புரியவில்லை :(.--கலை 21:01, 6 செப்டெம்பர் 2009 (UTC)
உங்கள் browser இல் cookies setup ஐப் பாருங்கள். Internet Options - Privacy - advanced (?)--Kanags \பேச்சு 21:09, 6 செப்டெம்பர் 2009 (UTC)

கட்டுரைகளை இணைக்கதொகு

தானியங்கி மொழிபெயர்ப்பை தகுந்தமாதிரி உங்களின் கட்டுரையுடன் இணைக்கவும். நன்றி. --Natkeeran 00:58, 18 டிசம்பர் 2009 (UTC)

எப்படி தானியங்கி மொழிபெயர்ப்பை இணைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. கற்றுக் கொடுத்தால் அறிந்துகொண்டு அதன்படி அடுத்தடுத்த கட்டுரைகளில் செய்யலாம்--கலை 22:11, 27 டிசம்பர் 2009 (UTC).
தானியங்கி மொழிபெயர்ப்பை தகுந்தமாதிரி கட்டுரைகளுடன் எப்படி இணைப்பது என்பதை யாராவது கற்றுத் தருவீர்களா?--கலை 15:32, 19 ஜனவரி 2010 (UTC)
முதலில் மூச்சுத்தடை நோய் கட்டுரையில் இருந்து மேலதிகமான பகுதிகளை எடுத்து உங்களின் ஈழை நோய் கட்டுரையில் சேருங்கள் (copy/paste). அதற்குப் பின்னர் நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரிடம் கூறினீர்களானால், இரண்டு கட்டுரைகளையும் அவற்றின் வரலாறுகளுடன் சேர்த்து அவரால் இணைக்க முடியும்.--Kanags \பேச்சு 04:46, 26 ஜனவரி 2010 (UTC)
நீங்கள் இங்கே குறிப்பிட்ட பின்னர்தான் மூச்சுத்தடை நோய் என்ற கட்டுரை இருப்பதையே பார்த்தேன் :(. தற்போது, அந்தக் கட்டுரையை இங்கே இணைப்பதாயின் அங்கே 'மூச்சுத் தடை நோய்' கட்டுரையின் உரையாடல் பகுதியில் முதலில் எழுத வேண்டுமா? அல்லது நேரடியாக அங்கிருக்கும் மேலதிக தகவல்களை இங்கே இணைத்துவிட்டு, நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரிடம் கூறினால் போதுமா? --கலை 10:26, 26 ஜனவரி 2010 (UTC)

கட்டுரைகளை இணைத்தல்தொகு

இன்று ஈழைநோய், மூச்சுத்தடை நோய் ஆகிய இரு கட்டுரைகளையும் பார்வையிட்டேன். நான் எழுதிய ஈழைநோய் கட்டுரை 5 டிசம்பர் 2009 இலும், மூச்சுத்தடை நோய்க் கட்டுரை 17 டிசம்பர் 2009 இலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலே 13. கட்டுரைகளை இணைக்க பகுதியில் கேட்டுக் கொண்டபடி, மூச்சுத்தடை நோய்க் கட்டுரையில் இருந்த மேலதிக தகவல்களை (குறிப்பாக 'நோய் அறுதியிடல்' க்குப் பின்னர் சேர்க்கப்பட்டுள்ள தகவல்களை) ஈழைநோய் கட்டுரையுடன் இணைத்துள்ளேன். அதில் திருத்தங்களை இன்னமும் செய்யவில்லை. இனி இரு கட்டுரைகளையும் வரலாற்றுடன் சேர்த்து இணைப்பது எவ்வாறு எனத் தெரியாது. யாராவது இணைத்து விடுங்கள். அல்லது சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வேன்.--கலை 08:12, 18 மே 2010 (UTC)

வரலாற்றுடன் சேர்த்து இணைப்பதற்கு நிருவாக அணுக்கம் தேவை. நான் பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 01:49, 2 மே 2010 (UTC)

இரு கட்டுரைகளை இணைப்பது எப்படி?தொகு

கலை, இரு கட்டுரைகளை நிருவாக அணுக்கம் உள்ள ஒருவரே இணைக்கலாம். A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்களை B கட்டுரையில் சேருங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள். சோதித்துப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:13, 20 நவம்பர் 2010 (UTC)

வழிமாற்றுக்களை நீக்கல்தொகு

கலை, சில வழிமாற்றுகளை நீக்கி வருவதைக் கவனித்தேன். வழிமாற்றுகள் இருப்பதில் தவறில்லை. தலைப்பில் எழுத்துப்பிழையோ அல்லது வேறு மொழியோ கலந்துள்ள வழிமாற்றுகளை நீக்கலாம். கிரந்தம் கலந்த சொற்களையும் நீக்கத் தேவையில்லை. குறித்த கட்டுரை ஒன்றைத் தேடி வருபவர்கள் தாம் வழங்கிய மொழியில் தேடுவது இயல்பு. எ+கா: திரிகோண கணிதம் என்ற வழிமாற்று இருக்க வேண்டியது. இலங்கையில் இன்னமும் இந்தச் சொல் தான் பயன்படுத்தப்படுகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 03:57, 20 நவம்பர் 2010 (UTC)

வணக்கம்! நாம் விக்கியில் புதிய கட்டுரைகள், பிழைதிருத்தம் தவிர வேறு செய்யக்கூடிய பணிகள் என்ன எனக் கேட்டபோது இரட்டை வழிமாற்றிகள் இருக்கும்போது, அவற்றில் வெற்றுப்பக்கமாக இருப்பவற்றை நீக்கலாம், முறிந்த வழிமாற்றிகள் இருக்கையில் அவற்றை அகற்றலாம் எனச் சொன்னார்கள். அதன்படிதான் அவற்றை நீக்கினேன். ஆனால் நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடே. குறிப்பிட்ட ஒரு சொல்லைத் தேடி வருபவர்களுக்கு அந்தச் சொல் கிடைக்க வேண்டும் என்பது அவசியம்தான். நான் அதை சரிபார்க்காமல் செய்து விட்டேன். இனிமேல் கவனமாக இருக்கின்றேன்.--கலை 11:14, 20 நவம்பர் 2010 (UTC)

தானியங்கி பற்றிய செய்திதொகு

தாங்கள் மடமடவென கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புருக்களை இடுவது மகிழ்ச்சி. ஆனால் தானியங்கி அணுக்கம் வாங்கும் வரை விதவிதமான சிறிய சிறிய திருத்தங்களைச் செய்து பழகிக் கொள்ளுங்கள். பின்னர் அணுக்கம் வாங்கி அதிகமான கட்டுரைகளைத் திருத்தலாம். மற்றொரு செய்தி, KalaiBOT பங்களிப்பு வரலாற்றைப் பார்க்கும் போது -> நவம்பர் 2013 (வேறுபாடு | வரலாறு) . . (+13,443)‎ இந்த பைட்டு அளவுகளையும் சற்றுக் கவனிக்கவும். தாங்கள் திருத்த நினைத்த அளவு இதுதானா என்று சரிபார்ப்பதன் மூலம் தானியங்கியின் செயலைச் சோதித்துக் கொள்ளலாம். ஆறு, ஏழு கட்டுரைகளில் பேச்சுப்பக்கச் செய்தி இருமுறை பதிவாகிவிட்டது. இது உங்கள் தவறல்ல எனது நிரல்களில் உள்ள சிறு பிழையே. அதனால் எனது NeechalBOT கணக்கின் வழியே அதனை மீளமர்த்திவிட்டேன். பிற பயனர்கள் அறிந்து கொள்ளவே இச்செய்தியை இங்கு இடுகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 07:08, 21 நவம்பர் 2013 (UTC)

இன்றைக்கு வேறு பணி ஏதாவது செய்து பார்க்க வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன பணி செய்வது என்று தேட வேண்டும் :). தானியங்கி அணுக்கம் வேண்டி இங்கே விண்ணப்பிடித்துள்ளேன். செய்து முடித்த பணிகளை எப்படி சரிபார்க்க ஒவ்வொரு கட்டுரையாகச் சென்று பார்ப்பது கடினமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் கூறியபடி சரி பார்க்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 08:19, 21 நவம்பர் 2013 (UTC)


கலை, உங்கள் கோரிக்கையை ஏற்றுத் KalaiBOT க்குத் உங்கள் கோரிக்கையை ஏற்றுத் தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. ---மயூரநாதன் (பேச்சு) 05:53, 30 நவம்பர் 2013 (UTC)
நன்றி மயூரநாதன்.

IWT கருவியில் மாற்றங்கள் குறித்துதொகு

வணக்கம் கலை! நீங்கள் பயன்படுத்தும் IWT கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாற்றத்தின்படி இக்கருவியில் சொற்களைத் தேடிக்கண்டுபிடித்து மாற்ற உங்கள் உங்களின் common.js பக்கத்தில் உள்ள விருப்பப் பட்டியலின் வடிவமைப்பு மற்றப்பட வேண்டும். இதனை செய்ய உங்கள் உங்களின் common.js பக்கதுக்கு சென்று var en_words மற்றும் var ta_words எனத்தொடங்கும் வரிகளை நீக்கிவிட்டு அவ்விடத்தில் கீழ் உள்ளவற்றை சேர்கவும் (கீழுள்ள பட்டியல் உங்களின் common.jsஇல் இருக்கும் சொற்களிலிருந்து உங்களுக்காக தனியாக தயாரிக்கப்பட்டது) :

var relpaceList = {
'ஜனவரி' : 'January',
'பெப்ரவரி' : 'February',
'மார்ச்' : 'March',
'ஏப்ரல்' : 'April',
'மே' : 'May',
'ஜூன்' : 'June',
'ஜூலை' : 'July',
'ஆகஸ்ட்' : 'August',
'செப்டம்பர்' : 'September',
'அக்டோபர்' : 'October',
'நவம்பர்' : 'November',
'டிசம்பர்' : 'December'
};

குறிப்பு: உங்கள் உங்களின் common.js பக்கத்தின் வடிவமைப்பு தவறாக உள்ளது. அப்பக்கத்தின் முதல் மூன்று வரிகளை நீக்கிவிடவும். (importScriptURI.... முதல் Example: வரை) அதன் பின் மேல் குறிப்பிட்டுள்ளதை செய்யுங்கள். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி! --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:13, 2 திசம்பர் 2013 (UTC)

இப்போது உங்கள் மேற்கோள்களைச் சேருங்கள் - மிகவும் எளிமையாகதொகு

ஆம் கலை. உங்களது வேண்டுகோளின் பேரில் :) புரூவ்இட்டினை மீட்டேன். ஒன்றும் பெரியதாகச் செய்யவில்லை. அவர்கள் நிரலை மாற்றியிருந்தனர். அதாவது இடைமுக அமைப்புகளில் சில மாற்றம் செய்தனர். எனவே நம் நிரல் (நான் முன்பு அங்கிருந்து வெட்டி ஒட்டியது) பழையதாகி இயங்காமல் போனது. இப்போது அவர்கள் புதியதாக சேர்த்துள்ள நிரலை வெட்டி ஒட்டி கருவியை இயக்கியுள்ளேன். தற்போதைக்கு ஆங்கிலத்திலேயே அனைத்தும் உள்ளது. ஓரிரு நாட்கள் பொறுக்கவும். மொழிபெயர்த்துவிடுகிறேன் :) நன்றி கலை... வார்ப்புரு குறித்த விடயத்தைப் பார்க்கிறேன். சற்று புரியாமல் இருந்தது. மேலும், தொலைபேசி என்னிடம் இல்லை. நான் கைபேசியே பயன்படுத்துகிறேன் :) நானும் பாலாவும் பார்க்கிறோம். இந்த வார இறுதிக்குள் இரு சங்கதிகளும் முடிவுக்கு வரும் கலை :) நன்றி :)

புரூவிட் இனை மீட்டுத் தந்தமைக்கு நன்றி. ஆனால் அந்த வார்ப்புரு குறித்த விடயத்தை இன்னமும் கவனிக்கவில்லைப் போலுள்ளதே? அதனைத் திருத்தம் செய்தால்தான் ஆங்கில விளக்கப் படங்கள் தமிழ் விளக்கப்படங்களுக்கு மாறும் என நினைக்கின்றேன்.
  • படிமம்:Status iucn3.1 EX.svg ஆனது, இலங்கைச் சிங்கம், கம்பளி யானை, டோடோ ஆகிய கட்டுரைகளில் உள்ளது. இதனைப் படிமம்:Status iucn3.1 EX ta.svg ஆக மாற்ற வேண்டும். அதற்கு Taxobox வார்ப்புருவிற்குள் சென்றுதான் மாற்ற வேண்டும் என நினைக்கின்றேன். இதனை முயற்சித்துப் பார்த்து சரிவரவில்லை :(.
  • படிமம்:Status iucn3.1 LC.svg ஆனது, நைல் முதலை என்ற கட்டுரையில் உள்ளது. அதனை படிமம்:Status iucn3.1 LC-ta.svg ஆக மாற்ற வேண்டும். இதற்கு speciesbox வார்ப்புருவில் மாற்ற வேண்டும் என நினைக்கின்றேன். அதுவும் எப்படி எனத் தெரியவில்லை. :(.

இதேபோல், இங்கே இருக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களையும் மாற்ற வேண்டும். இவற்றிற்கும் Taxobox அல்லது speciesbox இல்தாம் மாற்றம் தேவைப்படுகின்ரதென நினைக்கின்றேன்.

பார்த்து சரியாக்கிக் கொடுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 19:31, 2 திசம்பர் 2013 (UTC)

வலைவாசல்கள் பகுப்புதொகு

வணக்கம், வலைவாசல்கள் பகுதிகளை மேம்படுத்த முனைவதற்கு என்னுடைய நன்றிகள். எக்காரணத்திற்காக பகுப்பு:வலைவாசல்கள் என்ற தாய்ப்பகுப்பினை நீக்கம் செய்துள்ளீர்கள் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். வலைவாசல்கள் பகுப்பினுள் செல்லும் பொழுது இதுவரை உருவாக்கப்பட்ட வலைவாசல்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. தற்போது ஒவ்வொரு வலைவாசல்களின் தனிப் பகுப்பினுள் சென்று தேட வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. இதனைத் தவிர்க்க குறைந்தபட்சம் துணை பகுப்புகளை உருவாக்கி இடுங்கள். உதாரணத்திற்கு சமயம் சார்ந்த வலைவாசலுக்கு பகுப்பு:சமய வலைவாசல்கள் என்பதைப் போல. இதன் மூலம் ""சமய வலைவாசல்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்" என்பதன் கீழ் சமயம் தொடர்பான வலைவாசல்களை பயனர்கள் எளிதில் காணுதல் இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:46, 10 திசம்பர் 2013 (UTC)

அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஜெகதீஸ்வரன். பகுப்புக்களைச் செய்யும்போது, ஒரு தாய்ப்பகுப்பினுள் இன்னொரு துணைப்பகுப்பு இருக்குமாயின், அந்த துணைப் பகுப்பினுள் வரும் ஒரு பக்கத்திற்கு துணைப்பகுப்பை இணைக்கும்போது, அதற்கு மீண்டும் தாய்ப்பகுப்பையும் சேர்க்கத் தேவையில்லை என்று முன்னர் எனக்குச் சொல்லப்பட்டது. அதன்படி எடுத்துக்காட்டாக வலைவாசல்:ஆசியா வானது பகுப்பு:வலைவாசல் ஆசியா என்பதற்கு இணைக்கப்பட்டிருந்தால், அதனைத் துணைப் பகுப்பாகக் கொண்ட பகுப்பு:வலைவாசல்கள் என்னும் தாய்ப்பகுப்பிற்கு இணைக்கத் தேவையில்லை என்பதே. ஒரு அடி மரத்திலிருந்து கிளைகள் பிரிந்து பிரிந்து செல்வதுபோல. இதனை எண்ணித்தான் நான் அப்படிச் செய்தேன். ஆனால் செய்து முடித்த பின்னர்தான் சிலவற்றைத் தவறாகவும் இணைத்துவிட்டேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எ.கா. வலைவாசல்:உயிரியல் என்பதை பகுப்பு:வலைவாசல் உயிரியல் என்பதில் இணைப்பதே சரி. அதனை நான் பகுப்பு:வலைவாசல் அறிவியல் இற்குள் இணைத்துவிட்டேன் என நினைக்கின்றேன்.
நீங்கள் சொல்வதையும் சரிவரப் புரிந்துகொள்வதற்காகக் கேட்கின்றேன். வலைவாசல்:ஆசியா என்பதனை பகுப்பு:வலைவாசல் ஆசியா, பகுப்பு:வலைவாசல்கள் இரண்டிற்குள்ளும் இணைக்க வேண்டும் என எண்ணுகின்றீர்களா? மேலும் நீங்கள் கூறியதுபோல் வேறு துணைப்பகுப்புக்களை உருவாக்குகின்றேன். அவற்றையும் திருத்த வேண்டும். விரைவில் எல்லாவற்றையும் சரிபார்த்துத் திருத்துகின்றேன்.--கலை (பேச்சு) 19:39, 10 திசம்பர் 2013 (UTC)
மிகவும் குறைவான வலைவாசல்களே இருந்தமையால் பகுப்பு:வலைவாசல்கள் என்ற தாய்ப்பகுப்பு மட்டுமே இருந்தது. அதனால் அனைத்து வலைவாசல்களுக்கும் அத்தாய்ப்பகுப்பினை இணைத்திருந்தோம். தற்போது வலைவாசல்கள் அதிகமாகுவதால் துணைப் பகுப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தினை தாங்கள் உணர்ந்து செயல்பட்டுள்ளீர்கள். அதற்கு என்னுடைய நன்றிகள். தாங்கள் அவதானித்து போல சைவ வலைவாசலில் நீங்கள் வலைவாசல்கள் பகுப்பினை நீக்கிய பின்பு நான் அதனை மீள்வி்த்திருந்தேன். என்னுடைய கவனிப்புப் பட்டியலில் சைவ வலைவாசல் உள்ளது என்பதால் உடனே கவனத்திற்கு வந்தது. மீண்டும் நீங்கள் அதே மாற்றத்தினை செய்யும் பொழுதே துணைப் பகுப்பின் அவசியத்தினை உணர்ந்தேன்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள பகுப்பு:வலைவாசல் சைவம் என்பது சைவ வலைவாசலுக்காக உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகளால் நிறைந்துள்ளது. அதற்குள் 5 துணைப் பகுப்புகளும், 12 கட்டுரைகளும் உள்ளன. இவற்றோடு வலைவாசல் சைவத்தினையும் இணைத்தால் தேடுதலுக்கு சிரமாக இருக்கும். அத்துடன் தற்போதுள்ள பகுப்பு முறை வலைவாசல்களை இனம் பிரித்து காட்டுவதற்கும், தேடுதல் சிரமத்தினைக் குறைப்பதற்கும் உதவாது என்பதை உணர்ந்தேன். ஆங்கில வலைவாசல்கள் பகுப்பினை காணும் பொழுது அவர்கள் பொருள் வாரியாக பகுப்பினை உருவாக்கி இருந்தார்கள். அதனை முன்னுதாரனமாக கொண்டே என்பதை உருவாக்கி இணைப்பினைக் கொடுத்தேன்.
\\வலைவாசல்:ஆசியா என்பதனை பகுப்பு:வலைவாசல் ஆசியா, பகுப்பு:வலைவாசல்கள் இரண்டிற்குள்ளும் இணைக்க வேண்டும் என எண்ணுகின்றீர்களா? \\ ஆங்கில விக்கியில் en:Category:Portals by continent என்றொரு பகுப்பினை உருவாக்கி அதில் வலைவாசல் ஆசியாவை இணைத்திருக்கின்றார்கள். கண்டங்கள் வாரியாக வலைவாசல்கள் என்றொரு பகுப்பினை நாம் உருவாக்க வேண்டுமென நினைக்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு வலைவாசல் பகுப்புகளில் மாற்றம் செய்துள்ளீர்கள். அந்த ஆர்வம் நான் செய்த இடையூரால் தடைபட்டுவிடுமோ என்ற அச்சம் கூட இருந்தது. ஆனால் எனது பேச்சுப் பக்கத்தினை மூன்று முறை தொகுத்துள்ளது கண்டேன். நிச்சயமாக தங்களது ஆர்வம் குன்ற வாய்ப்பில்லை என எண்ணுகிறேன். மேற்சொன்ன ஆலோசனை விக்கியின் பயனர்களை எண்ணியே, தங்களது பங்களிப்பினை சீர் குழைக்கும் நோக்கத்தில் இல்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன். மீண்டும் வலைவாசல்களை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:30, 11 திசம்பர் 2013 (UTC)

சரி. கொஞ்சம் நேரமெடுத்துச் செய்கின்றேன். நீண்ட நாளைக்கு நான் மறந்தால், ஒரு தடவை நினைவூட்டி விடுங்கள். :)--கலை (பேச்சு) 16:40, 11 திசம்பர் 2013 (UTC)

Translationsதொகு

Did not realize that this article was already translated. The version we have added is done by human translators rather than machine. Project can be seen here [1][2] Jmh649 (பேச்சு) 23:13, 9 சனவரி 2014 (UTC)

Jmh649தொகு

பயனர் Jmh649 அவர்களுக்கு பதில் கூறமுடியுமா? --குறும்பன் (பேச்சு) 16:19, 12 சனவரி 2014 (UTC)

குறிப்பிட்ட விடயம் தொடர்பிலான நமது உரையாடலைப் பார்த்துவிட்டு, அவருக்கு பதிலளிக்கலாம் என்று எண்ணியிருந்துவிட்டு மறந்துவிட்டேன். ஆலமரத்தடியில் எனது கருத்துக்களை விரிவாக இட்டிருக்கின்றேன். பார்த்துவிட்டு, அவருக்கு என்ன பதில் கொடுக்கலாமென நீங்கள் நினைக்கின்றீர்கள் என்பதையும் அறியத்தந்தால் நல்லது. நினைவுபடுத்தலுக்கு நன்றி :) --கலை (பேச்சு) 17:12, 12 சனவரி 2014 (UTC)

ஆலமரத்தடியில் உங்கள் கருத்தைப் பார்த்தேன், அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. நாம் யாராவது integrator ஆக இருக்கலாம் மருத்துவம் தெரிந்த ஒருவர் இருந்தால் நல்லது என்பதாலயே உங்களிடம் கேட்டேன். --குறும்பன் (பேச்சு) 00:19, 13 சனவரி 2014 (UTC)

உங்கள் கவனத்திற்குதொகு

நன்றி கலையரசி! நீங்கள் கூறியபடி, நம் விக்கிபீடியாவில் பெயரைப் பதிந்துவிட்டேன். ஆனால், ஆங்கில விக்கிபீடியாவில் எனக்கு பயனர் கணக்கு இல்லை. எனவே, அங்கு என் பெயரைப் பதியவில்லை. ஆங்கிலத்தில் பங்களிக்க பல்லாயிரம் பயனர்கள் உள்ளார்கள். எனவே, நான் அங்கு என் பங்களிப்புகள் தேவையற்றவை என எண்ணுவதால் (ஆங்கிலத்தில் எழுதினால் அதை அறிவியல் இதழ்களில் மட்டுமே வெளியிடுவது என்ற எண்ணத்தினாலும்), அங்கு நான் பயனர் கணக்கினைத் தொடங்கவில்லை. எனவே, என் பெயரை அங்குப் பதியவில்லை. புரிதலுக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 19:24, 19 சனவரி 2014 (UTC)

  விருப்பம், ஆச்சரியமும்..! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

Respected madam.தொகு

In my wikipedia English article some wikipedia users deleted How to i protect in my wikipedia page. How to i recover my page. Please help me madam. Murugesan pandian (பேச்சு) 03:00, 20 செப்டம்பர் 2017 (UTC)

உதவிதொகு

வணக்கம் திரு. கலை அவர்களே, விக்கிப்பீடியா கட்டுரைகளில் விருதுகள் அட்டவணையில் வெற்றி (Won) என்ற வார்ப்புருவின் background மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது முறைப்படி பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதற்கு தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. பயனர் பேச்சு: li wei ran 12.00, 30 செப்டம்பர் 2017 (UTC)

Return to the user page of "Kalaiarasy/உதவி".