பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு12
கட்டுரையாக அல்லாமல் எவ்வாறு கருத்துரை தெரிவி்ப்பது
தொகுகட்டுரையாக அல்லாமல் பரிந்துரைப்பது, வேண்டுகோள் விடுவது எவ்வாறு?--கலைமகன் பைரூஸ் 07:45, 10 நவம்பர் 2011 (UTC)
- உரையாடல் பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். தற்போது நீங்கள் ஈழநிலா கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் வேண்டுகோள் இடுவது சரியான வழி. இரு கட்டுரைகளையும் நான் ஒன்றிணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:56, 10 நவம்பர் 2011 (UTC)
தயவுசெய்து ஒன்றிணைக்கவும்
தொகுகாலை வணக்கம்! ஐயா, எனது பயனர் பக்கம் ஏதோவொரு தவறு காரணமாக இருவேறு பக்கங்களாயுள்ளன. தற்போது செய்யும் பங்களிப்புக்களை மட்டுமே அவை Kalaimahan Fairooz காட்டுகின்றன. ஆயின், Kalaimahan fairooz எனும் பயனர் பக்கத்தில் பழையன உள்ளன. தயவுசெய்து எனது பங்களிப்புக்களை ஒன்றிணைத்து விடுங்கள். --கலைமகன் பைரூஸ் 03:58, 12 நவம்பர் 2011 (UTC)
பைரூஸ்,
மூன்று கணக்குகளை பாவிக்கிறீர்கள்.
இதில் மூன்றாவது இரு ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. பிற இரு கணக்குகளும் ஒரே ஒரு எழுத்து மாற்றக் குழப்பத்தால் தற்போது வரை மாற்றி பயன்படுத்தப்படுகின்றன. கணக்கு இரண்டு வழியாகத்தான் அதிக அளவில் பங்களிப்புகள் ஆகியுள்ளன. எனவே அதனை மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒன்றைத் தெரிவு செய்து விட்டால் மற்ற இரண்டையும் அக்கணக்குக்கு வழிமாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:31, 12 நவம்பர் 2011 (UTC)
நன்றி! பயனர்:Kalaimahan fairooz என்பதையே இனிமேலும் பயன்படுத்துகின்றேன். அதற்கு வழிமாற்றிவிடுங்கள். --கலைமகன் பைரூஸ் 19:16, 12 நவம்பர் 2011 (UTC)
தயவுசெய்து கவனிக்கவும்
தொகுசோடா,
ஈழநிலா, பொத்துவில் அஸ்மின் எனும் இருவேறு பெயர்களை உடையவர் ஒருவரே. இரண்டும் ஏலவே ஒன்றிணைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மீண்டும் கவிஞர் ஈழநிலா என்ற தலைப்பில் பக்கம் உருவாக்கப்பட்டு, அதில் கவிஞர் ஈழநிலா கவிதைகள் ஒன்றிரண்டு இணைக்கப்பட்டுள்ளன. இது மாதிரியான தலைப்புக்களின் உள்ளீடு, தொடர்ந்து கவிஞர்கள் தத்தமது கவிதைகளுக்கென விக்கிப்பீடியாப் பக்கங்களைப் பயன்படுத்தக் காலாக அமையுமன்றோ. தயவுசெய்து இவ்விடயத்தில் கவனம் செலுத்தவும். பொத்துவில் அஸ்மின் என்ற கட்டுரை மட்டுமே போதுமென்று நினைக்கின்றேன்.--கலைமகன் பைரூஸ் 05:49, 13 நவம்பர் 2011 (UTC)
“கவிஞர் ஈழநிலா” என்ற தலைப்பில் பக்கம் எதுவும் இல்லையே. தேடிப்பார்த்தேன் கண்டு பிடிக்க இயலவில்லை. அப்பக்கத்துக்கான இணைப்பு தாருங்கள் நீக்கிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:50, 13 நவம்பர் 2011 (UTC)
- எனது வலைத்தளத்திலும் தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி பற்றிய படிமத்தைப் பதிவேற்றியுள்ளேன். காண்க. http://kalaiyoli.blogspot.com/2011/11/blog-post.html --கலைமகன் பைரூஸ் 08:45, 13 நவம்பர் 2011 (UTC)
- விக்கி ஊடகப் போட்டிக்காக இதனைப் பதிவேற்றி பரப்புரைக்கு பெரும் உதவி செய்ததற்கு நன்றி பைரூஸ். இயன்றால் மின்ஞ்சல் மூலம் தங்கள் நட்பு வட்டத்தாருக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:49, 13 நவம்பர் 2011 (UTC)
அரபு மொழி ஒலிப்பு
தொகுஅரபுப் பெயர்களுடன் தொடர்பான கட்டுரைகள் சிலவற்றில் நாம் நிகழ்த்திய மாற்றங்கள் சிலருக்குக் குழப்பமாயிருக்கலாம். அதற்கான விளக்கத்தை இங்கே அளிக்கிறேன். அது உங்களுக்குப் பயன்படுமென நினைக்கிறேன்.
அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:
- ظهر - ழுஹ்ர்
- ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்).
அவ்வாறே ض என்ற எழுத்து ள என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:
- حضرموت - ஹளரமௌத்
- مضر - முளர்.
தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும் ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதிற் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:
- مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
- جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு)
- ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir
- ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr
- حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid.
இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.--பாஹிம் 16:34, 12 நவம்பர் 2011 (UTC)
பதக்கம்
தொகுஉங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
கிட்டத்தட்ட 11 உங்களுக்குத் தெரியுமா? கட்டுரைகளில் பங்களித்தமைக்கான சிறப்புச் சான்றாக இந்தப் பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். :) (இன்னும் உங்க கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.) பணி சிறக்க வாழ்த்துகள்! சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:55, 12 நவம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
அய்யா சோடாபாட்டில்
தொகுநான் சில மாதங்கள் முன்பு விக்கிபீடியா விதிமுறையினை மீறி ( தெரியாமல் ) படங்களை பதிவு செய்ததிர்க்காக நீகபட்டேன் . ஒரு வருடம் தாங்கள் தடை விதித்து உள்ளீர்கள் . தயவு செய்து அதனை நீக்குங்கள் அல்லது தடையை குறையுங்கள் . நான் ஆராய்ச்சி மாணவன் மற்றும் தமிழ் மீது பற்று கொண்டவன் , விக்கிபெடியாவில் என்னுடைய பதிவுகளும் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன் . ஒரு வருடம் காலம் தடை விதித்ததை சற்று பார்க்கவும் . இனி இந்த தவறு நடக்காது .
- நீங்கள் யார் என்று அருள் கூர்ந்து அடையாளம் காட்டுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 13:13, 14 நவம்பர் 2011 (UTC)
அய்யா நான் ஆகத்து மாதம் தங்களால் விலக்கப்பட்டவன் , இனி இந்த தவறுகள் நடக்காது --பயனர்:Rajanaicker
- தடையை நீக்கியிருக்கிறேன் ராஜநாயக்கர். பொறுப்புடன் பங்களிப்பீர்கள் என நம்புகிறோம். நன்றி.--Kanags \உரையாடுக 07:19, 15 நவம்பர் 2011 (UTC)
- ஆகத்து மாதம் தடை செய்யப்பட்டவுடன், ஐபியாக செப்டம்பரில் தொகுத்தீர்கள், போன வாரம் மீண்டும் hai என்ற கணக்கை உருவாக்கி அதிலிருந்து தொகுத்தீர்கள். இக்கணக்கு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், இப்போது வந்து தடையை நீக்கக் கோரியுள்ளீர்கள்
- முன்பு பதிப்புரிமை விசயத்திலும் இதே போலத் தான் நடந்து கொண்டீர்கள். ஜூன் 26 இல் முதல் தடை விதிக்கப்பட்டவுடன், இனி செய்ய மாட்டேன் என்று உறுதியளித்துவிட்டு, மீண்டும் அதே போலச் செய்தீர்கள், ஜூலை 3 இல் மூன்று நாட்கள் தடை செய்யப்பட்டீர்கள். எதற்காக என்று தெரிந்தும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இதே போலச் செய்தீர்கள். எனவே தடை ஒரு வருடமானது.
- உங்கள் போக்கு சரியான முறையில் நடந்து கொள்ளவேண்டுமென்றில்லை. கண்காணிப்பு நின்று விட்டால் மீண்டும் இஷ்டப்படி செய்யலாம் என்றே உள்ளது. கனக்ஸ் உங்களுக்கு கொடுத்துள்ளது தான் இறுதி வாய்ப்பு. உங்கள் பங்களிப்புகள் கூடுதல் கவனத்துடன் இனி பார்க்கப்படும். மீண்டும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்களை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டி வரும். கிடைக்கும் இறுதி வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 07:28, 15 நவம்பர் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில் .. விக்கிபிடியாவில் சில வரலாறுகளை மட்டும் எழுதுகிறேன் . நன்றி இனி பாதிக்கும் பதிவுகள் சரியானதாக இருக்கும் , --Rajanaicker
ஊடகப்போட்டி
தொகுசோடா, ஊடகப்போட்டி பற்றிய அறிவித்தலை விக்கிசெய்தி sitenotice இலும் சேர்க்கலாம் என்றிருக்கிறேன். போட்டி குறித்த banner கள் ஒன்றிரண்டை பொது விக்கியில் தரவேற்ற முடியுமா?--Kanags \உரையாடுக 09:04, 15 நவம்பர் 2011 (UTC)
- நானே கேட்கலாம் என்றிருந்தேன் கனக்ஸ். நீங்கள் முந்தி விட்டீர்கள். மிக்க நன்றி. விக்கி நூல்களிலும் நீங்கள் நிருவாகியாக இருப்பதைக் கண்டேன். அங்கும் ஏற்றி உதவ வேண்டுகிறேன். சில நேரத்தில் காமன்சில் ஏற்றிவிட்டு உங்கள் பேச்சுப் பக்கத்தில் இடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:13, 15 நவம்பர் 2011 (UTC)
- காமன்சில் ஏற்றிவிட்டேன். பின்வரும் நிரல்துண்டை விக்கி செய்திகள் மற்றும் விக்கி நூல்கள் தள அறிவிப்புகளில் இட வேண்டுகிறேன்:
{{#switch: {{#expr:{{CURRENTTIMESTAMP}} mod 3}}|
0= [[படிமம்:Twmc banner intawiki sen a.png|x160px|center|link=w:வலைவாசல்:ஊடகப் போட்டி|alt=தமிழ் விக்கி ஊடகப் போட்டி]]|
1 = [[படிமம்:Wiki contest native banner2Updated.png|x160px|center|link=w:வலைவாசல்:ஊடகப் போட்டி|alt=தமிழ் விக்கி ஊடகப் போட்டி]]|
2 =[[படிமம்:Wiki_contest_native_banner3.png|x160px|center|link=w:வலைவாசல்:ஊடகப் போட்டி|alt=தமிழ் விக்கி ஊடகப் போட்டி]]|
}}
- சேர்த்திருக்கிறேன். நன்றி. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 09:53, 15 நவம்பர் 2011 (UTC)
- நன்றி கனக்ஸ்--சோடாபாட்டில்உரையாடுக 10:10, 15 நவம்பர் 2011 (UTC)
ஊடகப் போட்டி பதாகை - தமிழ்மணம்
தொகுவணக்கம் சோடாபாட்டில், தமிழ்மணம் தளத்திற்காக சிறிதளவாக்கப்பட்டுள்ள பதாகையின் உள்ளடக்கங்கள் சற்று தெளிவின்மையாய் காணப்படுவதோடு, Pixelate ஆகியும் இருப்பதை படிமம்:Twmc tamizhmanam.jpg என்ற படிமத்தில் அவதானித்தேன். அதனால், JPG கோப்பின் தரத்தை சற்று மெருகேற்றி, பதாகையின் உள்ளடக்கங்கள் தெளிவாகத் தெரிகின்ற வகையில் இற்றைப்படுத்தி, படிமம்:TWMC banner.jpg என்கின்ற கோப்பாக பதிவேற்றியுள்ளேன். குறித்த பதாகையை, புதிய மெருகேற்றப்பட்ட பதாகையால் பிரதியிடுவது பொருத்தமென பரிந்துரைக்கிறேன். நன்றிகள் பல. --தாரிக் அஸீஸ் உரையாடுக 00:25, 17 நவம்பர் 2011 (UTC)
- மிக்க நன்றி தாரிக், புதிய பதிப்பினைக் கொண்டு பிரதியீடு செய்துவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:54, 17 நவம்பர் 2011 (UTC)
ஊடகப் போட்டி
தொகு- படிமம்:Compact Charkha.jpg கோப்பு எனது சொந்த முயற்சி எனது புகைப்படகருவி மூலம் எடுத்து கணினியில் சேமித்தது.
- இதில் சிக்கல் இல்லை. போட்டிக்கு ஏற்ற பயனுள்ள அருமையான படம். --சோடாபாட்டில்உரையாடுக 08:30, 20 நவம்பர் 2011 (UTC)
- படிமம்:Gandhiji Centenary Festival.jpg கோப்பு ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவக காட்சியகத்தில் இருந்த பழைய புகைப்படம். இதை மீண்டும் நான் எனது புகைப்படகருவி மூலம் எடுத்து கணினியில் சேமித்தேன். இதற்கு எந்த மாதிரியான பதிப்புரிமையை வழங்குவது? --ஸ்ரீதர் (பேசுக) 08:27, 20 நவம்பர் 2011 (UTC)
- தாங்கள் கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் குடும்பத்தார் என்றால், இதன் உரிமை உங்களுடையதே, தற்போது இட்டிருக்கும் "own work" பொறுத்தமானதே. ஆனால் போட்டியில் பரிசு தெரிவுக்கு பரிசீலனை செய்யப்படாது--சோடாபாட்டில்உரையாடுக 08:30, 20 நவம்பர் 2011 (UTC)
மாமல்லபுரம்
தொகுபுதிதாக மாமல்லபுரம் பக்கத்தை நிறைய மாற்றியிருக்கிறேன். மேற்கொண்டும் நிறையச் செய்யவேண்டும். ஆனால் சில சந்தேகங்கள் உள்ளன. உதாரணமாக, நான் இரண்டே இரண்டு ref தான் சேர்த்தேன். ஆனால் கீழே 7 reference-கள் வந்துள்ளன. மேலும் நிறையச் சேர்க்கும்போது பக்கத்தின் வடிவம் வெகுவாக மாறிவிடும். அதை எப்படிச் செய்யலாம் என்றும் பேசவேண்டும். இந்தப் பக்கத்தை ஓரளவுக்குச் சரியாகச் செப்பனிட்டுவிட்டால், தமிழகத்தின் பல்வேறு பாரம்பரியச் சின்னங்கள் பற்றித் தொடர்ந்து எழுதுவதாக உள்ளேன். இவற்றுக்கான படங்கள் பலவும் என்னிடம் உள்ளன. அவற்றை எப்படி உள்ளிடுவது என்பதை இந்த வாரம் மெதுவாகத் தோண்டிப் பார்க்கிறேன். மேலே நான் செய்திருக்கும் மாற்றங்களைப் பார்த்துவிட்டு, இவற்றில் ஏதேனும் தவறு உள்ளதா என்று குறிப்பிட்டால், அதன்படி மேற்கொண்டு எழுதத் தொடங்குகிறேன். --Bseshadri 11:08, 22 நவம்பர் 2011 (UTC)
- மேலதிக மேற்கோள்கள் கட்டுரையில் துவக்கத்தில் உள்ள தகவல்பெட்டியில் ஆளுனர், முதல்வர் தகவல்களுக்கானவை. அனைத்து இந்திய ஊர் கட்டுரைகளிலும் தானாக இணைந்து விடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கையை ஐந்திலிருந்து இரண்டாகக் குறைத்துள்ளேன். மேலும் மேற்கோள்கள் இரண்டு செங்குத்து காலம் களாக வருமாறு செய்துள்ளேன். அதிகமானால் மூன்று அல்லது நான்கு காலமாகவும் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் இக்கட்டுரையில் சேர்க்க நினைப்பவற்றை முழுமையாக சேர்த்து விட்டு சொல்லுங்கள். விக்கியாக்க உதவிகளை நான் செய்து தருகிறேன். முதல் பார்வையில் இதுவரை நீங்கள் செய்தவை அனைத்தும் கச்சிதமாகவே தெரிகின்றன. முழுதும் முடித்தவுடன் ஒரு ஆழப் பார்வைப் பார்க்கிறேன்.
- படங்களை நமது சகோதரத் திட்டமான விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றலாம். இங்கும் பதிவேற்றலாம், ஆனால் இங்கு ஏற்றினால் இங்கு (த.விக்கிப்பீடியா) மட்டுமே பயன்படுத்த இயலும். பிற தமிழ் விக்கித் திட்டங்கள் மற்றும் பிற மொழி விக்கிகளிலும் பயன்படுத்திக் கொள்ள காமன்சில் ஏற்றுவது பொருத்தமானது. அதையே நான் பரிந்துரைக்கிறேன். (இதற்காக ஊடகப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறோம், அதன் பகுதியாக ஏற்றினால் பரிசுகளை வெல்லலாம் ;-))
- படங்களை ஏற்ற இடது கருவிப்பட்டையில் “கோப்பைப் பதிவேற்று” இணைப்பு வழியாக (இங்கும் காமன்சிலும்) செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 11:29, 22 நவம்பர் 2011 (UTC)
பவர்புக் 100 கட்டுரை
தொகுஇக்கட்டுரையில் 'தனி நபர் கணினி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தினால் ஜப்பசி 21, 1991அறிமுகப்படுத்தப்பட்டது.' என எழுதப்பட்டுள்ளது. October 21, 1991 என்பது ஜப்பசி 21, 1991 என அப்படியே மாற்றப்பட்டிருக்கிறது. திருத்தம் செய்ய வேண்டுகிறேன். எழுதியவருக்கும் முறைப்படி நீங்களே தெரிவிப்பது சாலச் சிறந்தது. --Selvasivagurunathan mஉரையாடுக
- ஆயிற்று (இப்பொது நீங்கள் மூத்த பயனர் தான் :-). நீங்களே திருத்தி தெரிவித்து விடலாம். நிருவாகி செய்யவேண்டுமென்று கட்டாயமில்லை :-)) --சோடாபாட்டில்உரையாடுக 04:31, 24 நவம்பர் 2011 (UTC)
நல்லது, சிறு சிறு தவறுகளை நானே திருத்தி தெரிவித்துவிடுகிறேன். என்னால் முடியாததை நிர்வாகிகள் மூலம் செய்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக
தெரிவு பற்றி ஒரு பரிந்துரை
தொகுஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக எல்லோரும் மதிப்பீடு செய்வது கடினமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அகையால் முதல் சுற்றில் ஒவ்வொரு மதிப்பீட்டாளரும் 20-30 தெரிவுகளைச் செய்யலாம். பின்னர் மேலும் வடிக்கலாம். --Natkeeran 03:51, 24 நவம்பர் 2011 (UTC)
- உடன்படுகிறேன். எண்ணிக்கை மிக அதிகமாக வரும் போல் உள்ளது. ஸ்ரீகாந்த் போட்டிக் கோப்புகளைப் பிரித்து வகைப்படுத்தும் செயலியை உருவாக்கி வருகிறார். அது தயாரானதும், தெரிவுகளைப் பிரிக்கத் துவங்குவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 19:55, 24 நவம்பர் 2011 (UTC)
கோப்பு வார்ப்புருக்கள்
தொகுnonfree 3d art, poster, புக் கவர் போன்ற வேறு வார்ப்புருக்கள் ஏதேனும் உள்ளதா? அதைப்பற்றி(விதிகள்) ஏதேனும் விக்கிப்பீடியா பக்கம் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 05:25, 27 நவம்பர் 2011 (UTC)
- screenshot, dvd cover உள்ளன. விதிகள் பக்கம் இல்லை, எழுதிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:27, 27 நவம்பர் 2011 (UTC)
- நாட்டுடமை
சில புத்தகங்கள் நாட்டுடமை என்பதால் அதை விக்கிமூலத்தில் இருப்பதாக எங்கோ பார்த்தேன். நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்கள் என்று எவ்வாறு அறிவது? ஏதேனும் தளம் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 05:42, 27 நவம்பர் 2011 (UTC)
- இப்பட்டியல் மொத்தமாக ஓரிடத்தில் எங்கும் இல்லை. என் பயனர்வெளிப்பக்கத்தில் சில நாட்களாக, இதனை சேகரித்து வருகிறேன். - பயனர்:Sodabottle/nationalised works. (யாராவது ஆர்டிஐ விண்ணப்பம் போட்டால் முழுவதும் கிட்டும்)
இங்கு சென்று நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் இணைப்பை சொடுக்கவும். நான் அனைத்தையும் தரவிறக்கம் செய்து விட்டேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 10:52, 27 நவம்பர் 2011 (UTC)
நன்றி karthi.dr, நான் ஏற்கனவே இதை கண்டுள்ளேன். மறந்ததை நினைவு படுத்தியதுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 10:59, 27 நவம்பர் 2011 (UTC)
- நன்றி கார்த்தி, என் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:01, 27 நவம்பர் 2011 (UTC)
Please clarify - http://creativecommons.org/licenses/by-nc-sa/2.5/
தொகுAre we not allowed to use pics shared under: http://creativecommons.org/licenses/by-nc-sa/2.5/.
--Natkeeran 16:32, 27 நவம்பர் 2011 (UTC)
- No. A NC tag indicates only non commercial use, where as all wikipedia content is permitted to be used commercially too. So we cant upload a NC creative commons licence here. (except as a non free fair use file) --சோடாபாட்டில்உரையாடுக 16:34, 27 நவம்பர் 2011 (UTC)
- What are allowed CC licenses. --Natkeeran 16:36, 27 நவம்பர் 2011 (UTC)
- CC variants except those which prohibit derivatives (ND) and commercial use (NC) --சோடாபாட்டில்உரையாடுக 16:40, 27 நவம்பர் 2011 (UTC)
முதற்பக்கக் கட்டுரைகள் - பங்களிப்பு?
தொகுமுதற்பக்கக் கட்டுரைகளில் பங்களித்த அனைவரது பேச்சுப் பக்கத்திலும் முதற்பக்கக் கட்டுரைக்கான வார்ப்புரு காட்சிப்படுத்தப்பட்ட நாளுடன் இடப்படுவதாக எனக்கு முன்பு தெரிவித்திருந்தீர்கள். எனக்கு இன்னும் சந்தேகம்... கட்டுரையைத் தொடங்கியவர் பேச்சுப் பக்கத்தில் மட்டும் வார்ப்புரு இடப்படுகிறதா? அல்லது பங்களிப்பு செய்தவர்களில் கட்டுரையில் ஏதாவது அளவு, எண்ணிக்கை போன்றவை கணக்கிடப்படுகிறதா? சிறிது விளக்கமளியுங்களேன்....--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:44, 28 நவம்பர் 2011 (UTC)
- குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் - அதாவது அதிகமாக உள்ளடக்கங்களைச் சேர்த்தவர்கள் பேச்சுப் பக்கங்களில் மட்டுமே வார்ப்புரு இடப்படுகிறது. விக்கியாக்கம், உரை திருத்தம் செய்தவர்களுக்கு இல்லை. தற்போது உள்ள நிலையில் ஒரு கட்டுரைக்கு அதிக பட்சம் இருவருக்கு அளித்தால் போதுமானது--சோடாபாட்டில்உரையாடுக 17:02, 28 நவம்பர் 2011 (UTC)
- தங்கள் விளக்கத்திற்கு நன்றி. கட்டுரையைத் தொடங்கியவர் மற்றும் அதிக உள்ளடக்கங்களைச் சேர்த்துப் பங்களித்த இருவர் என வைத்துக் கொள்ளலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:09, 28 நவம்பர் 2011 (UTC)
- கட்டுரையைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள். இதில் சரியாக வரையறுப்பது கடினம்.--சோடாபாட்டில்உரையாடுக 17:21, 28 நவம்பர் 2011 (UTC)
இணைக்கப்பட வேண்டியவை
தொகு//அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும். இவ்வாறு நீக்கும்போது திருத்தமான கட்டுரையைக் கடைசியாக நீக்க வேண்டும்//
இது எனக்கு புரியவில்லை. step by stepஆக உதாரணம் காட்டி விளக்க முடியுமா.--தென்காசி சுப்பிரமணியன் 05:49, 30 நவம்பர் 2011 (UTC)
- ஒரே தலைப்பில் இரு கட்டுரைகள் வந்துவிட்டால். அவற்றை ஒரு தலைப்பில் ஒன்றிணைத்து பின் இன்னொன்றை வழிமாற்றாக மாற்ற வேண்டும். இதில் உள்ளடக்கங்களை மட்டும் இணைத்தால் போதாது. பதிப்புரிமைக் காரணங்களுக்காக, அவற்றின் வரலாற்றையும் இணைக்க வேண்டும். இது நிருவாகிகளால் செய்ய இயலும். இதற்கான கையேடு - விக்கிப்பீடியா:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது. இப்படி இரு கட்டுரைகளைக் கண்டால், 'mergeto" வார்ப்புரு இட்டுவிடுங்கள். இயன்றால், உள்ளடக்கங்களை ஒன்றிணைத்து விட்டு நிருவாகி யாருடமும் சொன்னால் வரலாறுகளை ஒன்றிணைத்து விடுவோம். (மேற்குறிப்பிட்ட இரண்டிலும் ஒரு கட்டுரை முழுப் பதிப்புரிமை மீறல் என்பதால், வழிமாற்று மட்டும் செய்து விட்டேன், ஒன்றிணைக்கவில்லை)--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 30 நவம்பர் 2011 (UTC)