பாதேஷ்வர்
பதேஷ்வர் (Bateshwar), வட இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் சமணம் மற்றும் 101 சிவன் லிங்கக் கோயில்கள் கொண்டது. யமுனை ஆற்றின் கரையில் அமைந்த பதேஷ்வர் கிராமம், ஆக்ரா மற்றும் இட்டாவா நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது ஆக்ராவிற்கு தென்கிழக்கே 79.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; இட்டாவாவிற்கு வடமேற்கே 67.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பதேஷ்வர் கிராமத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது.
பாதேஷ்வர்
பா பதேஷ்வர் | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): பதேஷ்வர் | |
ஆள்கூறுகள்: 26°56′10″N 78°32′31″E / 26.936°N 78.542°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | ஆக்ரா |
ஏற்றம் | 160 m (520 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 6,041 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 283104 |
வாகனப் பதிவு | UP-80 |
இந்து & சமண ஆன்மீகத் தலங்கள்
தொகுபதேஷ்வர் கிராமம், சமண சமயத்தின் 22வது தீர்த்தங்கரர் நேமிநாதர் பிறந்த தலம் ஆகும். இக்கிராமத்தில் 101 சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 101 சிவ லிங்கக் கோயில் உள்ளது. அடல் பிகாரி வாச்பாய் பிறந்த இக்கிராமத்தை ஆன்மீகச் சுற்றுலாத் தலமாக மாற்ற உ பி அரசு ரூபாய் 100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ஹெலிகாப்டர்கள் இறங்க ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஆக்ரா மற்றும் மதுராவுக்கான ஹெலிபோர்ட் சேவைகளை மேம்படுத்த இந்த திட்டம் உதவும்.[1]
போக்குவரத்து
தொகுபதேஷ்வர் கிராமத்தில் ஒரு சிறிய தொடருந்து நிலையம் உள்ளது. இது ஆக்ரா, இட்டாவா, காசீப்பூர், மைன்புரி நகரங்களுடன் இணைக்கிறது.[2][3]
குறிப்பிடத் தக்கவர்கள்
தொகுமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் பதேஷ்வர் கிராமத்தில் பிறந்தவர்.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கொள்கள்
தொகு- ↑ மத சுற்றுலா மையமாக மாறும் வாஜ்பாயின் கிராமம்!
- ↑ Halt Mumbai-Ghazipur train at Bateshwar
- ↑ Yogi writes to Suresh Prabhu, seeks halt of Mumbai-Ghazipur express at ex-PM Vajpayee's village
- ↑ Chatterjee, Mannini. V. K. Ramachandran. "Vajpayee and the Quit India movement பரணிடப்பட்டது 16 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்". Frontline. 7–20 February 1998. Retrieved 4 April 2014.