பாமி பட்சில்

மலேசிய அரசியல்வாதி

பாமி பட்சில் (ஆங்கிலம்; மலாய்: Fahmi Fadzil; Ahmad Fahmi bin Mohamed Fadzil; சீனம்: 法米法兹) (பிறப்பு: 4 பிப்ரவரி 1985) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி, நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். [1][2]

பாமி பட்சில்
Ahmad Fahmi Mohamed Fadzil
فهمي فاضل
2023-இல் பாமி பட்சில்
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 டிசம்பர் 2023 முதல்
ஆட்சியாளர்கள்சுல்தான் அப்துல்லா (2022–2024)
இப்ராகிம் இசுகந்தர்
(தொடக்கம் 2024)
பிரதமர்அன்வர் இப்ராகீம்
Deputyதியோ நி சிங்
முன்னையவர்(தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
தொகுதிலெம்பா பந்தாய்
மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
பதவியில்
3 டிசம்பர் 2022 – 12 டிசம்பர் 2023
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்அன்வர் இப்ராகீம்
தொகுதிலெம்பா பந்தாய்
மக்கள் நீதிக் கட்சி தகவல்துறை தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 சூலை2022
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
முன்னையவர்நூருல் இசா அன்வார்
(பாக்காத்தான் ராக்யாட் பி.கே.ஆர்)
பெரும்பான்மை5,598 (2018)
13,912 (2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அகமத் பகமி பின் முகமது பட்சில்

4 பெப்ரவரி 1985 (1985-02-04) (அகவை 39)
கோலாலம்பூர், மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிமக்கள் நீதிக் கட்சி (PKR)
(தொடக்கம் 2010)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட் (PR)
(2010–2015)
பாக்காத்தான் (PH)
(தொடக்கம் 2015)
துணைவர்அசிரினா புத்திரி முகமது மயுதீன்
முன்னாள் கல்லூரிபர்டூ பல்கலைக்கழகம்
(Purdue University)
வேலை
  • அரசியல்வாதி
  • நடிகர்
  • எழுத்தாளர்
இணையத்தளம்fahmifadzil.com
முகநூலில் பாமி பட்சில்

இவர் டிசம்பர் 2023 முதல் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தில் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சராகவும்; மே 2018 முதல் லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[3]

இவர் டிசம்பர் 2022 முதல் டிசம்பர் 2023 வரை பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் நிர்வாகத்தில் இலக்கவியல் அமைச்சராகவும் பணியாற்றினார்.

பொது

தொகு

இவர் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) உறுப்பினர்; மற்றும் மலேசிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரும் ஆவார்.

சூலை 2022 முதல் மக்கள் நீதிக் கட்சியின் தகவல்துறைத் தலைவராகவும்; செப்டம்பர் 2013 முதல் ஜூலை 2022 வரை அதே மக்கள் நீதிக் கட்சியின் தொடர்புத் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[3]

கல்வி

தொகு

ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) வேதிப் பொறியியல் துறையில் (BSChE) இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

2010-இல் மக்கள் நீதிக் கட்சியில் சேருவதற்கு முன்பு, பாமி பட்சில் ஓர் எழுத்தாளர், ஒரு நடிகர் மற்றும் விருது பெற்ற ஒரு நாடகக் கலைஞராகத் திகழ்ந்தார். அவர் 2006-ஆம் ஆண்டில், மலேசியாவில் பிரபலமான தொலைக்காட்சி தொடரான கோல் & ஜிங்கு (Gol & Gincu The Series) போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றினார். மலேசியத் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான 8TV அந்தத் தொலைக்காட்சித் தொடரை ஒளிபரப்பு செய்தது.

பின்னர் அவர் தி பேர்லி கரண்ட் சோ (The Fairly Current Show) என்ற நேர்காணல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார்.

சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அதில் ஒரு சமூகப் பணி 2012-ஆம் ஆண்டு தாமான் மேடான் சமூகக் கலைத் திட்டமாகும். இந்தத் திட்டம் இளைஞர்களிடையே நிலவிய இனப் பதட்டங்களைக் குறைப்பதற்கு வழி செய்தது. இணைய ஊடகத் தொல்லை எதிர்ப்பு விழிப்புணர்வு மன்றத்திலும் செயல்பட்டார். இந்த மன்றம் சனவரி 2023-இல் மலாயா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.[4]

அரசியல்

தொகு

தொடக்கத்தில், நூருல் இசா அன்வாரின் அரசியல் செயலாளராக பாமி பட்சில் பணியாற்றினார். லெம்பா பந்தாய் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக நூருல் இசா அன்வாருக்குப் பின் பாமி பட்சில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் கட்டத்தில் நூருல் இசா, பாக்காத்தான் ராக்யாட் கோட்டையான பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதிக்கு அனுப்பப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 5,000 வாக்குகள்பெரும்பான்மையில் பாமி பட்சில் லெம்பா பந்தாய் தொகுதியில் வெற்றி பெற்றார். மலேசியாவின் 14- ஆவதுத் தேர்தலுக்குப் பின்னர், மக்கள் நீதிக் கட்சி மலேசிய மக்களவையில் மிகப்பெரிய கட்சியாக உயர்வடைந்தது. அதன் பின்னர் பாமி பட்சில், மக்கள் நீதிக் கட்சியின் தகவல் தொடர்புதுறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[5]

அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை

தொகு

மலேசியாவின் 15-ஆவது பொதுத் தேர்தலில், பாமி பட்சில், லெம்பா பந்தாய் தொகுதியில் தன் இடத்தை பெரிய ஒருவெற்றியுடன் தக்க வைத்துக் கொண்டார்.

அன்வார் இப்ராகீம் தலைமையிலான ஐக்கிய அரசாங்கம் உருவாகப்பட்டதும், 3 டிசம்பர் 2022-இல், பாமி பட்சில் புதிய மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Assembly seats
முன்னர் லெம்பா பந்தாய் மக்களவை உறுப்பினர்
10 மே 2018–தற்போது
பதவியில் உள்ளார்
அரசியல் கட்சி பதவிகள்
முன்னர்
நிக் நஸ்மி நிக் அகமது
மக்கள் நீதிக் கட்சியின் தொடர்பு துறை இயக்குநர்
11 செப்டம்பர் 2013–20 சூலை 2022
பின்னர்
லீ சீன் சுங்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ahmad Fahmi Mohamed Fadzil". stgpru.sinarharian.com.my. Sinar Harian. பார்க்கப்பட்ட நாள் 15 March 2024.
  2. "Fahmi Fadzil, engineer-performer-activist turned politician". Malay Mail. 7 February 2016. http://www.malaymail.com/s/1055743/10-things-about-fahmi-fadzil-engineer-performer-activist-turned-politician. 
  3. "PKR's Fahmi Fadzil emerges victorious after a neck-and-neck battle with Raja Nong Chik for Lembah Pantai". The Star (Malaysia). 10 May 2018. http://www.thestar.com.my/news/nation/2018/05/10/pkrs-fahmi-fadzil-emerges-victorious. 
  4. "Fahmi Fadzil". IMDb. பார்க்கப்பட்ட நாள் 14 June 2018.
  5. "The Star Online GE14". The Star Malaysia. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமி_பட்சில்&oldid=4015273" இலிருந்து மீள்விக்கப்பட்டது