பாரா சைலீன்

நறுமண நீரகக்கரிமச் சேர்மம். டைமெத்தில்பென்சீனின் மூன்று மாற்றியங்களில் ஒன்று.

பாரா-சைலீன் (p-Xylene) என்பது C6H4(CH3)2 எனற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பனான இச்சேர்மம் இருமெத்தில் பென்சீனின் மூன்று மாற்றியங்களில் ஒன்றாகும். பாரா- என்பது கிரேக்க மொழியில் "அதற்கடுத்த" அல்லது "எதிராக" எனப்பொருள்படும் சொல்லைக் குறிப்பதாகும். பாரா-சைலீனில் இரண்டு மெத்தில் தொகுதிகளும் ஒன்றுக்கொன்று நேரெதிராக 1 மற்றும் 4-ஆம் இடங்களில் பதலீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாற்றியங்களும் ஒரே மாதிரியான C6H4(CH3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைக் கொண்டுள்ளன. சைலீனின் மற்ற மாற்றியங்களைப் போலவே பாரா-சைலீனும் நிறமற்றதும் தீப்பற்றக்கூடியதும் ஆகும். பாரா-சைலீனின் வாசனை வரம்பு மில்லியனுக்கு 0.62 பாகங்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பாரா-சைலீன்
p-சைலீன்
Skeletal formula
வன்கூட்டு வாய்ப்பாடு
,
வெளிநிரப்பு மாதிரி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,4-சைலீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,4-இருமெத்தில்பென்சீன்
வேறு பெயர்கள்
பாரா-சைலீன், பாரா-சைலால், பாரா-மெத்தில்தொலுயீன், பாரா-டைமெத்தில்பென்சீன், பாரா சைலீன், 4-மெத்தில்தொலுயீன்
இனங்காட்டிகள்
106-42-3 Y
ChEBI CHEBI:27417 N
ChEMBL ChEMBL31561 N
ChemSpider 7521 N
InChI
  • InChI=1S/C8H10/c1-7-3-5-8(2)6-4-7/h3-6H,1-2H3 N
    Key: URLKBWYHVLBVBO-UHFFFAOYSA-N N
  • InChI=1/C8H10/c1-7-3-5-8(2)6-4-7/h3-6H,1-2H3
    Key: URLKBWYHVLBVBO-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06756 Y
பப்கெம் 7809
வே.ந.வி.ப எண் ZE2625000
  • CC1=CC=C(C=C1)C
UNII 6WAC1O477V N
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை 106.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நறுமணம்[1]
அடர்த்தி 0.861 கி/மில்லி லிட்டர்
உருகுநிலை 13.2 °C (55.8 °F; 286.3 K)
கொதிநிலை 138.35 °C (281.03 °F; 411.50 K)
கரையாது
எத்தனால்-இல் கரைதிறன் மிகவும் கரையக்கூடியது
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் மிகவும் கரையக்கூடியது
ஆவியமுக்கம் 9 மி.மீபாதரசம் (20°C)[1]
-76.78·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.49582
பிசுக்குமை 0.7385 cP 0 °செல்சியசில்
0.6475 cP 20 °செல்சியசில்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.00 D [2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் விழுங்கினால் தீங்கு விளைவிக்கக்கூடியது. ஆவி நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடும். நீர்மமும் ஆவியும் எரியக்கூடியன.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R10 R20 R21 R36 R38
S-சொற்றொடர்கள் S25
தீப்பற்றும் வெப்பநிலை 27 °C (81 °F; 300 K) [3]
Autoignition
temperature
528 °C (982 °F; 801 K)[3]
வெடிபொருள் வரம்புகள் 1.1%-7.0% {க/க) [1]
Threshold Limit Value
மில்லியனுக்கு 100 பகுதிகள்[3] (TWA), மில்லியனுக்கு 150 பகுதிகள்[3] (STEL)
Lethal dose or concentration (LD, LC):
மில்லியனுக்கு 4550 பகுதிகள் (எலி, 4 மணி)[4]
மில்லியனுக்கு 3401 பகுதிகள் (சுண்டெலி)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (435 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ3) ST மில்லியனுக்கு 150 பகுதிகள் (655 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
மில்லியனுக்கு 900 பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பாரா-சைலீனின் உற்பத்தி தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2014 ஆம் ஆண்டில் இதன் வருடாந்திர தேவை 37 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டது. இத்தேவை தொடரும் ஆண்டுகளில் மேலும் அதிகரித்து வருகிறது.[5][6] கலப்பு-வினையூக்கிகள் மற்றும் ஐதரசன் போன்றவற்றின் உதவியால் கார்பன் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏதுமில்லாமல் குறைந்த ஆக்டேன் நாப்தீன்களை அதிக ஆக்டேன் சேர்மங்களாக மறுசீரமைப்பதை ஊக்குவிக்கும் சுத்திகரிப்பு செயல்முறையில் பாரா-சைலீன் பிரித்தெடுக்கப்படுகிறது. இச்செயல்பாட்டில் பென்சீன், தொலுயீன் மற்றும் சைலீன் மாற்றியங்களின் ஒரு பகுதியாக பெட்ரோலியம் நாப்தாவின் வினையூக்க சீர்திருத்தத்தால் பாரா-சைலீன் தயாரிக்கப்படுகிறது. பின்னர் மெட்டா-சைலீன், ஆர்த்தோ-சைலீன் மற்றும் எத்தில்பென்சீன் ஆகியவற்றிலிருந்து வடிகட்டுதல், உறிஞ்சுதல் அல்லது படிகமயமாக்கல் மற்றும் வினை செயல்முறைகளின் வரிசையில் இது பிரிக்கப்படுகிறது. மாற்றியங்களின் இந்த தொடரில் பாரா-சைலீனின் உருகுநிலை மிக அதிகமாக உள்ளது. ஆனால் எளிய படிகமயமாக்கல் நல்லுருகு கலவைகள் உருவாவதால் எளிதாக சுத்திகரிக்க அனுமதிக்காது.

இத்தகைய பிரிப்பு நடைமுறைகள் பாரா-சைலீன் உற்பத்தியில் முக்கியமான செலவு காரணிகளாக இருப்பதால் மேலும் மாற்று முறைகளுக்கான தேடல் தொடர்கிறது. எடுத்துக்காட்டாக, செயல்முறைகளின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்த ஒரு தலைகீழ் சவ்வூடுபரவல் நுட்பமும் முன்மொழியப்பட்டது.[7]

தொழில்துறை பயன்பாடுகள்

தொகு

பாரா-சைலீன் ஒரு முக்கியமான இரசாயன மூலப்பொருளாகும். பல்வேறு பலபடிகளின் பெரிய அளவிலான தயாரிப்பு முறையில் இது ஒரு முக்கியமான மூலப்பொருளாகும். குறிப்பாக பாலியெத்திலீன் டெரிப்தாலேட்டு போன்ற பாலியெசுத்தர்களுக்கான டெரிப்தாலிக்கு அமில உற்பத்தியில் இது ஓர் அங்கமாகும். பாரிலீனை உற்பத்தி செய்ய இதை நேரடியாக பலபடியாக்கமும் செய்யலாம்.

 

நச்சுத்தன்மையும் வெளிப்பாடும்

தொகு

சைலீன்கள் கடுமையான நச்சுத்தன்மை கொண்டவை அல்ல. உதாரணமாக வாய்வழியாக எலிக்கு கொடுக்கப்படும்போது இதன் உயிர்க்கொல்லும் அளவு 4300 மி.கி/கி.கி ஆகும். விலங்கு மற்றும் சைலீன் மாற்றியத்திற்கேற்ப இதன் விளைவுகள் மாறுபடும்.

சைலீன் கவலைகள் போதைப்பொருள் விளைவுகளிலும் பங்கு வகிக்கின்றன. மனிதர்களில் பாரா-சைலீன் அதிகமாக வெளிப்படுவதால் தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை, குழப்பம், எரிச்சல், குமட்டல் மற்றும் பசியின்மை, முகம் சிவந்து போதல், உடல் சூடு அதிகரித்த உணர்வு உள்ளிட்ட இரைப்பை குடல் தொந்தரவுகள் ஏற்படலாம். ஒரு மில்லியனுக்கு 100 பாகங்கள் என்ற பரிந்துரைக்கப்பட்ட வெளிப்பாடு வரம்பிற்கு மேல் பாரா-சைலீன் நீராவி வெளிப்பாடு இருந்தால் கண், மூக்கு மற்றும் தொண்டை பாதிப்பு, மார்பு இறுக்கம் போன்ற விளைவுகள் உண்டாகலாம்.[8]

பாரா-சைலீன் இயற்கையாகவே பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி தார் ஆகியவற்றில் காணப்படுகிறது. வாகனப் புகையில் வெளியேற்றம் மற்றும் புகையிலை புகை உட்பட பெரும்பாலான எரிப்பு மூலங்களால் இது வெளியிடப்படுகிறது.[9]

சுவாசித்தல் விளைவுகள்

தொகு

பி-சைலீனை உள்ளிழுப்பது தலைச்சுற்றல், தலைவலி, தூக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும். உள்ளிழுத்தல் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதலுதவியாக புதிய காற்று, ஓய்வு மற்றும் சாத்தியமான மருத்துவ கவனிப்பு முதலியவை பலன் தரும். காற்றோட்டமும் சுவாசப் பாதுகாப்பைப் பயன்படுத்துவதும் பாரா-சைலீன் உள்ளிழுப்பு வெளிப்பாட்டை தடுக்கும் வழிகளாகும்.[10]

தோல்

தொகு

தோல் வழியாக பாரா-சைலீன் வெளிப்படும் போது தோல் வறட்சி மற்றும் தோல் சிவத்தல் பாதிப்புகள் ஏற்படலாம். தோல் பாதிப்பு ஏற்பட்டால், முதலுதவி என்பது பாதிக்கப்பட்ட பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுதல், அசுத்தமான ஆடைகளை அகற்றுதல், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு சுத்தம் செய்து உலர்த்துதல் ஆகியனவாகும். பாதுகாப்புக் கையுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தோலில் பாரா-சைலீன் வெளிப்படுவதைத் தடுக்கலாம்.[10]

கண்கள்

தொகு

கண்கள் வழியாக பாரா-சைலீன் வெளிப்படும் போது கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். பல நிமிடங்களுக்கு கண்களை தண்ணீரில் கழுவுதல், பொருநத்தியுள்ள தொடு வில்லைகளை அகற்றுதல் மற்றும் மருத்துவ கவனிப்பு ஆகியவை இதற்கான முதலுதவிகளாகும். பாதுகாப்பு கண்ணாடிகள் அணிவது இவ்வெளிப்பாட்டை தடுக்கும் சிறந்த முறையாகும்.[10]

உட்செலுத்துதல்

தொகு

உட்செலுத்தல் மூலமாக பாரா-சைலீன் வெளிப்படும் போது எரியும் உணர்வு, வயிற்று வலி, தலைச்சுற்றல், தூக்கம், தலைவலி மற்றும் குமட்டல் ஏற்படலாம். வாயைக் கழுவுதல் மற்றும் வாந்தியெடுக்கத் தூண்டாமலிருத்தல் போன்ற முதலுதவி செயல்முறைகளுடன் மருத்துவ கவனிப்பை நாடுதல் வேண்டும். பாரா-சைலீனை கையாளும் போது சாப்பிடாமல், குடிக்காமல் அல்லது புகைபிடிக்காமல் இருப்பது நலம்.[10]

குறுகிய வெளிப்பாடு

தொகு

இது மைய நரம்பு மண்டலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். விழுங்கினால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படலாம்

நீண்டகால வெளிப்பாடு

தொகு

திரவ பாரா-சைலீன் நீண்ட காலத்திற்கு தோலில் வெளிப்படுவதால் சருமத்தில் உள்ள கொழுப்பை நீக்கப்படலாம். மத்திய நரம்பு மண்டலத்திலும் தாக்கம் ஏற்படுத்தலாம். செவித்திறன் இழப்பு அதிகரிக்கும். மனித வளர்ச்சியிலும் இனப்பெருக்க அமைப்புகளிலும் பாதிப்பு உருவாகலாம் என்று விலங்கு சோதனைகள் தெரிவிக்கின்றன.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0670". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Perry's Handbook of Chemical Engineers
  3. 3.0 3.1 3.2 3.3 "p-Xylene". International Chemical Safety Cards. ICSC/NIOSH. July 1, 2014.
  4. 4.0 4.1 "Xylenes". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. Fabri, Jörg; Graeser, Ulrich; Simo, Thomas A. (2000). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley Online Library. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527303854.
  6. Nature 532,435–437 (28 April 2016) doi:10.1038/532435a
  7. Koh, D. Y.; McCool, B. A.; Deckman, H. W.; Lively, R. P. (2016). "Reverse osmosis molecular differentiation of organic liquids using carbon molecular sieve membrane". Science 353 (6301): 804–7. doi:10.1126/science.aaf1343. பப்மெட்:27540170. Bibcode: 2016Sci...353..804K. 
  8. "Material Safety Data Sheet – Para-Xylene". Amoco. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.
  9. EPA-454/R-93-048 Locating and estimating air emissions from sources of xylene Emission Inventory Branch Technical Support Division Office of Air Quality Planning and Standards U.S. Environmental Protection Agency March 1994
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 "para-Xylene". National Institute for Occupational Safety and Health. பார்க்கப்பட்ட நாள் 12 February 2013.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா_சைலீன்&oldid=3678467" இலிருந்து மீள்விக்கப்பட்டது